• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Explainer : கோவிட் -19 தடுப்பூசி போடுவதற்கு முன்னர் அல்லது பிறகு வலி நிவாரணி மருந்துகளை எடுத்து கொள்ளலாமா?

Explainer : கோவிட் -19 தடுப்பூசி போடுவதற்கு முன்னர் அல்லது பிறகு வலி நிவாரணி மருந்துகளை எடுத்து கொள்ளலாமா?

வலி நிவாரணி மாத்திரைகள்

வலி நிவாரணி மாத்திரைகள்

தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு தற்காலிக கை புண் ஏற்படக்கூடும். மேலும் காய்ச்சல், தசை வலிகள் அல்லது பிற அறிகுறிகள் தோன்றலாம்

  • Share this:
வலி நிவாரணி மருந்துகளை பயன்படுத்தினால் தடுப்பூசியின் தாக்கம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை கட்டுப்படுத்தக்கூடும். உடலில் வைரஸ் நுழையாமல் தடுக்கும் அரணாக தடுப்பூசிகள் செயல்படுகின்றன.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் இரண்டு ஷாட்களாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் கொரோனா அறிகுறிகள் தோன்றினால், அறிகுறிகளைத் தடுக்க முயற்சிக்க முதல் ஷாட்டை எடுத்து கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் உங்கள் மருத்துவர் ஒப்புக் கொண்டால், நீங்கள் எடுத்து கொள்ளலாம்.

தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு தற்காலிக கை புண் ஏற்படக்கூடும். மேலும் காய்ச்சல், தசை வலிகள் அல்லது பிற அறிகுறிகள் தோன்றலாம். இவை தடுப்பூசி அதன் வேலையை செய்கிறது என்பதற்கான அறிகுறிகள் ஆகும். இப்யூபுரூஃபன் (அட்வில், மோட்ரின்) உள்ளிட்ட சில வலி நிவாரணிகள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை குறைக்கக்கூடும் என்று சில ஆராய்ச்சி கூறுகிறது. சமீபத்தில் எலிகளை வைத்து நடத்திய ஆய்வில், வலி நிவாரணி மருந்துகள் ஆன்டிபாடிகளின் உற்பத்தியை குறைக்கக்கூடும், இது வைரஸ்களின் உயிரணுக்களை தடுக்கிறது என தெரியவந்துள்ளது.



ஆனால் மற்றொரு ஆய்வில், குழந்தைகளுக்கான தடுப்பூசியின் செயல்பாட்டை வலி நிவாரணி மருந்துகள் குறைக்கக்கூடும் என்று கண்டறிந்துள்ளன, எனவே பல குழந்தை நல மருத்துவர்கள் ஒவ்வொரு பெற்றோர்களும், தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னர் வலி நிவாரணி மருந்துகளை கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர், பின்னர் தேவைப்பட்டால் மட்டுமே கொடுக்க வேண்டும் என வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் வில்லியம் ஷாஃப்னர் கூறியுள்ளார்.

Explainer : நாட்டில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்கும் நிலையில், பாதுகாப்பாக இருக்க மக்கள் செய்யவேண்டியவை, செய்யக் கூடாதவை..!

யு.எஸ். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கோவிட்-19 தடுப்பூசியை எடுத்து கொள்வதற்கு முன்னர் வலி நிவாரணி மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டாம் என சமீபத்தில் அதன் வழிகாட்டலை புதுப்பித்தன. கொரோனா அறிகுறிகள் தோன்றியதற்கு பின்னர் உங்கள் மருத்துவரிடம் பரிந்துரையின் பேரில் நீங்கள் வலி நிவாரணி மருந்துகளை எடுத்து கொள்ளலாம். நீங்கள் ஏற்கனவே வலி நிவாரணி மருந்துகளில் ஒன்றை எடுத்துக்கொண்டால், தடுப்பூசி போட்டு கொள்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் கேட்காமல் நீங்கள் அதனை நிறுத்தக்கூடாது என கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவர் ஜொனாதன் வதனபே கூறினார்.



உங்கள் தடுப்பூசி ஷாட் முடிந்தபின் அறிகுறிகளை போக்க நீங்கள் விரும்பினால், அசிடமினோபன் (டைலெனால்) சிறந்தது, ஏனென்றால் இது மற்ற வலி நிவாரணி மருந்துகளை விட சிறப்பாக செயல்படுகிறது. பின்னர் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் கொஞ்சம் அசிடமினோபனை எடுத்துக் கொள்ளுங்கள். தடுப்பூசிகளால் உருவாகும் நோயெதிர்ப்பு சக்தி வலிமையானது, வலி ​​நிவாரணி மருந்துகளால் ஏற்படும் எந்தவொரு தாக்கமும் சிறிதளவு இருக்கக்கூடும்.

தடுப்பூசி போட்ட பிறகு, வீக்கம் இருந்தால் ஐஸ்கட்டி கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம், அல்லது ஈரமான துணியை அந்த இடத்தில் வைத்து கொள்ளலாம். காய்ச்சலுக்கு, சூடான பானங்கள் அருந்தவும். தடுப்பூசி போட்ட ஒரு நாளைக்குப் பிறகு கையில் சிவத்தல், வீக்கம் போன்ற பக்க விளைவுகள் நீடித்தால் உங்கள் மருத்துவரை பார்க்க வேண்டும் என டாக்டர் வில்லியம் ஷாஃப்னர் வலியுறுத்துகிறார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: