ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மாதவிலக்கு காலத்தில் கர்ப்பம் அடைய வாய்ப்பு உண்டா..? கருத்தரிக்க சரியான நேரம் எது..?

மாதவிலக்கு காலத்தில் கர்ப்பம் அடைய வாய்ப்பு உண்டா..? கருத்தரிக்க சரியான நேரம் எது..?

மாதவிடாயின் போது கர்ப்பம்

மாதவிடாயின் போது கர்ப்பம்

கருத்தறிப்பதற்கு சரியான தருணம் அமைய வேண்டும். ஆண், பெண் இருவருமே ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில், முயற்சி தொடங்கிய ஓராண்டுக்குள் நீங்கள் நிச்சயமாக கர்ப்பம் அடைய முடியும். ஆனால், வயது மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் காரணமாகவும் கர்ப்பம் தவறுவதற்கு வாய்ப்பு உண்டு.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கருமுட்டை வெளியாகும் நாட்களில் நீங்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும்போது கர்ப்பம் அடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன. நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டு வருகிறீர்கள் என்றால், கருமுட்டை வெளியேறும் நாளில் அல்லது கருமுட்டை வெளியேறுவதற்கு இரண்டு நாள் முன்னதாக பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் பட்சத்தில் கர்ப்பம் அடைவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

பொதுவாக மாதவிலக்கு நடைபெறுவதற்கு 10 முதல் 16 நாட்கள் முன்பாக கருமுட்டை வெளியேற்றம் நடக்கும். அதேசமயம், கருமுட்டை வெளியேறக் கூடிய சுழற்சி தனி நபர்களை பொறுத்து மாறக் கூடும். உங்கள் உடலில் கருமுட்டை வெளியேறுகிறதா என்பதை கணிப்பதற்கு நிறைய நடைமுறைகள் உள்ளன.

குறிப்பாக, கருமுட்டை சுழற்சியை கணக்கிடும் ஆப்கள் அல்லது அதனை கண்டறியும் பரிசோதனை ஸ்டிரிப் போன்றவற்றை பயன்படுத்தலாம். குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று திட்டமிடுபவர்களுக்கு இந்தச் செய்தி பயனுள்ளதாக அமையும்.

மாதவிலக்கு காலத்தில் கர்ப்பம் அடைய முடியுமா?

இதற்கான வாய்ப்புகள் மிக, மிக குறைவு என்றாலும், முற்றிலுமாக இதை மறுத்துவிட முடியாது. குறிப்பாக, குறுகிய மாதவிலக்கு சுழற்சி கொண்ட பெண்களுக்கு கருத்தறிக்கும் வாய்ப்புகள் அதிகம். உயிரணுக்கள் 5 நாட்கள் வரையிலும் உயிர் வாழும். ஆக, மாதவிலக்கு காலத்தில் நீங்கள் உறவு வைத்துக் கொள்ளும் பட்சத்தில், அதற்கு பிறகான நாட்களில் உடனடியாக கருமுட்டை வெளியேற்றம் நிகழ்ந்தால் நீங்கள் கர்ப்பம் அடைய வாய்ப்பு உண்டு. ஒருவேளை இதை நீங்கள் தவிர்க்க நினைத்தால் ஆணுறையை பயன்படுத்தவும் அல்லது பிற கருத்தடுப்பு முறைகளை பின்பற்றவும்.

மாதவிலக்கு காலத்திற்குப் பிறகு

நீங்கள் சராசரியான ஆரோக்கியமான நபர்தான் என்றாலும் கூட, மாதவிலக்கு முடிந்த ஓரிரு தினங்களில் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும்போது கருத்தறிப்பதற்கான வாய்ப்பு கொஞ்சம் குறைவுதான். குறிப்பாக, உங்களுக்கு கருமுட்டை இந்த சமயத்தில் வெளியேறியிருக்காது. ஆகவே, வாய்ப்புகள் குறைவு.

கருமுட்டை வெளியேற்ற நாட்களில்

இந்தத் தருணத்தில் தான் நீங்கள் கர்ப்பம் அடைவதற்கான சாத்தியக்கூறுகள் மிக, மிக அதிகமாக உள்ளன. கருமுட்டை வெளியேறிய 12 முதல் 24 மணி நேரத்திற்கு அது உயிர்ப்புடன் இருக்கும். இதுதான் கருத்தறிப்பதற்கு உகந்த தருணம் ஆகும். கருமுட்டை வெளியேறுவதற்கு 5 நாள் முன்னதாகவும், 1 நாள் பின்னதாகவும் உள்ள காலகட்டத்தில் நீங்கள் கர்ப்பம் அடைய வாய்ப்பு உண்டு.

கருமுட்டை வெளியேற்றத்திற்குப் பிறகு

கருமுட்டை வெளியேறிய 24 மணி நேரத்திற்கு மட்டுமே நீங்கள் கர்ப்பம் அடைவதற்கான வாய்ப்பு கூடுதலாக இருக்கும். அதற்குப் பிறகு நீங்கள் கருத்தறிப்பதற்கான வாய்ப்பு மீண்டும் குறைந்து விடும். கர்ப்பத்தை தவிர்க்க நினைக்கும் தம்பதியர்கள் இந்த கருமுட்டை வெளியேற்ற காலத்திற்குப் பிறகு பாலியல் உறவு வைத்துக்கொள்ளலாம்.

Also Read : 40 வயதை கடந்த பெண்களே... இனி உங்க நேரத்தை இப்படி செலவிடுங்கள்..!

வாய்ப்புகளும், எதார்த்தமும்

கருத்தறிப்பதற்கு சரியான தருணம் அமைய வேண்டும். ஆண், பெண் இருவருமே ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில், முயற்சி தொடங்கிய ஓராண்டுக்குள் நீங்கள் நிச்சயமாக கர்ப்பம் அடைய முடியும். ஆனால், வயது மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் காரணமாகவும் கர்ப்பம் தவறுவதற்கு வாய்ப்பு உண்டு.

Published by:Sivaranjani E
First published:

Tags: Periods, Pregnancy