ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பெண்குயின் கார்னர் 4 : ஓவரியில் ஆபரேஷன் செய்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? மருத்துவரின் விளக்கம்

பெண்குயின் கார்னர் 4 : ஓவரியில் ஆபரேஷன் செய்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? மருத்துவரின் விளக்கம்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பெரும்பாலும் இந்த கட்டிகள் முட்டைப் பையில் இருந்து உருவாவதால் இதுபோன்ற கட்டிகளை நீக்கும் போது சில சமயங்களில் முட்டைப்பையையும் மொத்தமாக எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அந்த நாளை என்னால் மறக்க முடியாது....

ராதிகாவை எனக்கு மூன்று வருடங்களாகத்தெரியும். 23 வயது, வரவேற்பாளராக பணி.  மூன்று வருடங்களுக்கு முன் ஒரு மதியம் தாங்க முடியாத வயிற்று வலியோடு மருத்துவமனைக்கு வந்தார். அழுது கொண்டே" வயிற்று வலி!! எதுவும் சாப்பிட முடியவில்லை!!! வலி தாங்க முடியல!!!! வாந்தி வந்து கொண்டே இருக்கிறது" என்று கதறினார்.

வலியில் வியர்வை பெருகிக் கொண்டிருந்தது. ஸ்கேன் செய்து பார்த்ததில் கர்ப்பப்பைக்கு அருகில் முட்டைப்பையில் ஆரஞ்சு பழ அளவுக்கு கட்டி இருப்பது தெரிந்தது. 8 செ.மீ விட்ட அளவில் இருந்த கட்டி, இத்தனை வலி உண்டாக்கக் காரணம் , முட்டைப்பையோடு(ovaries) சேர்த்து தன்னைத்தானே முறுக்கிக்கொண்டு(torsion) இருந்ததுதான். இதுபோன்ற கட்டிகள் சில மாதங்களாக இருந்திருக்கக் கூடும்.

ஆனால் அப்போதுதான் முதல் முறையாக அவர்களுக்கு கட்டி இருப்பது தெரிந்தது. உடனே அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்ற வேண்டும். மருத்துவமனையில் அனுமதித்து லேப்ராஸ்கோப் மூலமாக கட்டியை அகற்றி, முறுக்கி இருந்ததை சரி செய்தேன் . மூன்று வருடங்களாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஸ்கேன் செய்து ஏதேனும் புதிய கட்டி இருக்கிறதா என்பதை மட்டும் உறுதி செய்து கொண்டேன்.

இப்பொழுது திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. கணவன் வீட்டார் " முட்டைப் பையில் அறுவை சிகிச்சை செய்து இருப்பதால் அவருக்கு எதிர்காலத்தில் கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் உண்டாகுமா?" என்று கேட்கிறார்கள்.,"மேலும் எனக்கும் இப்பொழுது அந்த சந்தேகம் தோன்றுகிறது" என்று கூறினார்.

பெண்குயின் கார்னர் 3 : மிகவும் ஒல்லியாக இருக்கும் பெண்கள் கொழு கொழுவென குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா..?

பெரும்பாலும் இந்த கட்டிகள் முட்டைப் பையில் இருந்து உருவாவதால் இதுபோன்ற கட்டிகளை நீக்கும் போது சில சமயங்களில் முட்டைப்பையையும் மொத்தமாக எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். ஆனால் இரண்டு முட்டைப்பைகளில் ஒன்று இருந்தாலே கர்ப்பம் தரிக்க வாய்ப்புகள் உண்டு. ராதிகாவை பொருத்தவரை முட்டைப் பையை அகற்றாமல் கட்டியை மட்டுமே அகற்றியதால், அந்த முட்டைப் பையின் ஒரு பகுதியும் மிஞ்சியது. இதை விளக்கிக்கூறியதும் ராதிகாவின் முகத்தில் மலர்ச்சி.

ராதிகாவிற்கு மேலும் தைரியத்தை கொடுக்க AMH என்ற ஹார்மோன் அளவை பரிசோதனை செய்தேன். அதன் அளவு 2 விட அதிகமாக இருக்கும் போது முட்டைப் பையில் தேவையான அளவு முட்டைகள் இருக்கின்றன என்பதை உறுதி செய்து கொள்ளலாம். ராதிகாவின் AMH அளவும் இரண்டை க்கடந்திருந்தது. ராதிகாவின் சந்தேகம் தீர்ந்தது.

அவருடைய திருமண அழைப்பிதழை அனுப்பியிருந்தார். என்னுடைய தினசரியில் அவருடைய திருமண நாளை வட்டமிட்டு வைத்துக்கொண்டேன். சென்று வாழ்த்தி வரவேண்டும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Pregnancy, Women Health, பெண்குயின் கார்னர்