திருமதி சாரதா தன் மகளோடு மருத்துவமனைக்கு வந்திருந்தார். மகள் மோனிகா கம்ப்யூட்டரில் இளநிலை கல்லூரிப்படிப்பை முடித்து இருந்தார். நீண்ட முடியை அழகாக பின்னலிட்டு இருந்தார். முகத்தில் மகிழ்ச்சியின் பூரிப்பை காணமுடிந்தது.
டாக்டர்!! சந்தோஷமான விஷயம். மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆயிருக்கு!!
"ரொம்ப மகிழ்ச்சி மா!!! சொல்லுங்க!!!" என்றேன்.
"ஒரு சின்ன சிக்கல் டாக்டர்!!!!ஒரு சந்தேகம்!!!"" என்று இழுத்தார்.
ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்னாடி, ஒருநாள் திடீர்னு மோனிகா மயக்கம் போட்டு விழுந்துவிட்டாள். நரம்பு டாக்டர்கிட்ட போனப்ப "இதுவும் வலிப்பு நோய்க்கான அறிகுறி" ன்னு சொன்னாரு. . அப்ப நாங்க EEG, எம்ஆர்ஐ( MRI) டெஸ்ட் எடுத்துப் பார்த்தோம். "எல்லாமே நார்மல். ஒரு பிரச்சனையும் இல்ல"னு சொல்லி டாக்டர் ஒரு மாத்திரை எழுதிக் கொடுத்தார். அது ஒரு மூணு மாசம் சாப்பிட்டுகிட்டு இருந்தாள். அதுக்கு அப்புறம் டாக்டர போய் பார்த்தப்ப தொடர்ந்து ரெண்டு வருஷம் சாப்பிட சொன்னாரு. சாப்பிட்டு முடிச்சிட்டு நிறுத்தியாச்சு.
அதுக்கப்புறம் இப்ப வரைக்கும் ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா இப்ப திருமணம் செய்யனும் வர்றப்ப ," நரம்பு டாக்டர ஒரு தடவை பாக்கனுமா? மாத்திரை எதுவும் சாப்பிடனுமா?" அப்படின்னு ஒரு சந்தேகம் வருது. இத மாப்பிள்ளை வீட்டுக்கு சொல்றதா இல்லயா?!னு வேற யோசனையாக இருக்கு டாக்டர்!!!, அதான் உங்ககிட்ட ஆலோசனை கேட்கலாம்னு மோனிகாவை கூப்பிட்டு வந்தேன்.
வலிப்பு நோயைப் பொறுத்தவரை சிலருக்கு பிறவி நோயாக இருக்கலாம் அம்மா அப்பாவுக்கு இல்ல வேற யாராவது நெருங்கிய ரத்த பந்தங்களுக்கு இருக்கும்போது இவங்களுக்கும் வரலாம்.
ஒரு சிலருக்கு விபத்தில் தலை அடிபட்டால் வரலாம்.ஒரு சிலருக்கு மூளையை பாதிக்கக்கூடிய சில நோய்களால் வரலாம்.
சில சமயம் மூளையில் கட்டி இருக்கும்போதுகூட வலிப்பு நோய் வரும்.
இது தவிரவும் ஏராளமான காரணங்கள் உள்ளன. பல சமயங்களில் எந்த காரணமும் கண்டுபிடிக்க முடியாது.
என்ன காரணத்தால் வலிப்பு நோய் வந்திருக்கிறது!, பரிசோதனைகளின் முடிவு, இவற்றை வைத்து நோயின் தீவிரம் எப்படி இருக்குங்கறதை முடிவு பண்ண முடியும். எப்படி இருந்தாலும் மூன்று வருடம் வரை வலிப்பு வரலைனா ,பொதுவாகவரக்கூடிய வாய்ப்புகள் குறைவு. மாத்திரைகளை நிறுத்தலாம்.
இவர்களுக்கான பொதுவான சில அறிவுரைகள்:
மோனிகாவை பொறுத்தவரை மூன்று வருடங்களாக நோய்க்கான அறிகுறி இல்லாததால் அவருக்கு மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. கணவன் வீட்டாரிடம் விவரங்களை திருமணத்திற்கு முன்பே கூறுவது நல்லது.
இந்த பொதுவான அறிவுரைகளை பின்பற்றுவதோடு கர்ப்ப காலத்திலும் பிரசவ சமயத்திலும் நரம்பியல் நிபுணரை கலந்து ஆலோசிக்கலாம்.
"இனிமையான இல்லற வாழ்விற்கு என் வாழ்த்துகள் மோனிகா!" என்றேன்.
"மிக்க நன்றி! டாக்டர் !! அழைப்பிதழை எடுத்து வருகிறேன். திருமணத்திற்கு அவசியம் வரவேண்டும்" என்று விடை பெற்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fits Disease, பெண்குயின் கார்னர்