• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • விரல் நகங்கள் மூலம் கோவிட் வைரஸ் தொற்று பரவுமா? மருத்துவர்கள் விளக்கம்!

விரல் நகங்கள் மூலம் கோவிட் வைரஸ் தொற்று பரவுமா? மருத்துவர்கள் விளக்கம்!

மாதிரி படம்

மாதிரி படம்

மூன்றாம் அலை என அலையலையாய் இன்னும் எத்தனை வருடங்களுக்கு மனிதகுலத்தை கொரோனா புரட்டி எடுக்கப்போகிறது

  • Share this:
கொரோனா தொற்று பரவ துவங்கி ஓராண்டை கடந்து விட்ட நிலையிலும், இன்னும் நமது வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்ப முடியவில்லை. திடீரென சுனாமி போல தாக்கி வரும் இரண்டாம் அலை, இன்னும் 6 முதல் 8 மாதங்களுக்குள் தாக்க வாய்ப்பிருப்பதாக கணிக்கப்படும் மூன்றாம் அலை என அலையலையாய் இன்னும் எத்தனை வருடங்களுக்கு மனிதகுலத்தை கொரோனா புரட்டி எடுக்கப்போகிறது என்பதை கணிக்க முடியாத நிலையில், மாஸ்க் அணிவது மற்றும் பொதுவெளியில் தனிமனித இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்டவை தொற்றிலிருந்து நம்மை தற்காத்து கொள்ளும் வழிமுறைகள்.

தவிர முக்கியமாக உடல் மற்றும் கை சுத்தமும் முக்கியமானவை. கொரோனா என்பதையும் தாண்டி நம் நாட்டில் உணவுகளை கைகளால் உண்ணும் வழக்கம் இருப்பதால், கை விரல் நகங்களில் அழுக்கு அல்லது கிருமிகள் சேருவதை தவிர்க்க சீரான இடைவெளியில் நகங்களை வெட்டி தொடர்ந்து பராமரித்து வைத்திருப்பது இன்னும் முக்கியமான ஒன்று. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, வெட்டப்படாத நீண்ட நகங்களில் சேரும் அதிகப்படியான அழுக்குகள் பல உடல்நல பிரச்சனைகளுக்கு மூல காரணமாக அமையலாம்.

சிலருக்கு நகங்களை முறையாக வெட்டும் பழக்கம் இல்லாமல், நீண்ட நகங்களை வளர்த்து விட்டு அதனை பல்லால் கடித்து துப்பும் பழக்கம் இருக்கிறது. ஆனால் நம் நகங்களில் அதிக நுண்ணுயிரிகள் இருக்கும் என்பதால் இப்பழக்கம் உடலுக்கு தீங்கினை விளைவிக்கும். நகம் சுகாதாரத்தை பராமரிக்க விரல் நகங்களை அவ்வப்போது வெட்டி குறுகியதாக வைத்திருக்க வேண்டும் மற்றும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அதே நேரத்தில், நீங்கள் நகங்களை எவ்வாறு சுத்தம் செய்கிறீர்கள் என்பதும் முக்கியம். ஏனென்றால் வழிகள் பாதுகாப்பாக இல்லாவிட்டால், கைகளை சுத்தம் செய்யும் செயல்முறை நல்லதை விட அதிக சேதத்தை ஏற்படுத்த கூடும்.

விரல் நகங்கள் மூலம் கோவிட் தொற்று பரவுமா?

இது குறித்து கூறும் நிபுணர்கள், சுகாதாரமற்ற விரல் நகங்கள், நாம் முன்னர் குறிப்பிட்டது போல, பல கடுமையான உடல்நல கேடுகளுக்கு ஒரு மூல காரணமாக அமையலாம். கை சுகாதாரம் குறித்த அலட்சியம் தொடர்ச்சியான நோய்கள், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று நோய்களை ஏற்படுத்தும். இதில் தற்போது நாடு முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும் கொடிய கோவிட்-19 வைரஸும் அடங்கும் என்கின்றனர். விரல் நகங்கள் ஏராளமான அழுக்குகள் மற்றும் கிருமிகள் சேர கூடிய இடம் என்பதால், அவற்றை சுகாதாரமாக வைத்திருக்காவிட்டால், அழுக்கான நகங்கள் கோவிட்-19 தொற்று எளிதில் பரவ கூடிய வழியாக நகங்கள் மாறக்கூடும் என்பதை கருத்தில் கொள்ள சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே கிருமிகள் உங்களை நோய்வாய்ப்படுத்த விட நகங்களை ஒரு காரணமாக வைத்திருக்க வேண்டாம். உங்கள் கைகளோடு சேர்த்து நகங்களை அவ்வப்போது வெட்டி ஆரோக்கியமான முறைகள் உணவு சாப்பிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

விரல் நகங்களை சுத்தமாக வைத்திருப்பது எப்படி என்பதற்கான மருத்துவர்களின் அறிவுறுத்தல்கள்:

* நகங்களை வெட்டி சிறியதாக வைத்து கொள்வதுடன் அவற்றை அடிக்கடி ஷேப் செய்து கொள்ளுங்கள்

* ஒவ்வொரு முறை உங்கள் கைகளை கழுவும் போது சோப்பு மற்றும் தண்ணீருடன் (அல்லது நெயில் பிரஷ்) நகங்களின் அடிப்பகுதியை தேய்த்து சுத்தப்படுத்துங்கள்

* நெயில் கட்டர் உட்பட எந்த ஒரு நகம் சரி செய்யும் கருவியை பயன்படுத்தும் முன் அவை சுத்தமாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்

* நகங்களைக் கடிப்பதை அல்லது மெல்லுவதை அறவே தவிர்க்க வேண்டும்

* ஒரு சில நேரங்களில் பக்கவாட்டில் தொங்கி கொண்டிருக்கும் சிறிய அளவிலான நகத்தை பிடித்து இழுக்கவோ, கடிக்கவோ கூடாது. என்றால் அப்பகுதி காயமடைந்து ஏதேனும் தொற்று ஏற்பட காரணமாக அமைந்து விடும். நெயில் கட்டரை பயன்படுத்தியே அந்த நக பிசிறை மெதுவாக கட் செய்ய வேண்டும்

* நீண்ட அல்லது செயற்கை நகங்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கைகளை கழுவிய பிறகும் கூட ஒரு சில கிருமிகள் இருக்க கூடும்

எப்போதும் உங்கள் கைகளையும், விரல் நகங்களையும் சுத்தமாக வைத்திருங்கள். கிருமிகள் மற்றும் வைரஸிலிருந்து விலகியே இருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: