ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

அதிகமாக சர்க்கரை சாப்பிடுவதால்தான் சர்க்கரை நோய் வருகிறதா..?

அதிகமாக சர்க்கரை சாப்பிடுவதால்தான் சர்க்கரை நோய் வருகிறதா..?

சர்க்கரை

சர்க்கரை

சர்க்கரை என்பது இனிப்புகளில் மட்டுமே இல்லை. பால் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றில் இயற்கையாக சர்க்கரை இருக்கிறது. எனவே இந்த உணவுகளை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்று நிச்சயமாக கூற முடியாது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நீரிழிவு நோய்க்கு சர்க்கரை நோய் என்று வழக்குமொழியில் கூறப்படும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, அதாவது குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ஆனால் இதற்கும், உண்மையிலேயே சர்க்கரை சாப்பிடுவதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? அதிகமாக சர்க்கரை அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்பு உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

இனிப்பு சாப்பிடும் போதெல்லாம் அல்லது பானங்கள் குடிக்கும்போதெல்லாம் அதிகமாக சாப்பிடாதெ, சர்க்கரை நோய் வரும் என்று கூறப்படுவதை அடிக்கடி கேட்கிறோம். உண்மையிலேயே உணவுகளில் இருக்கும் அதிகமான சர்க்கரை தான் நீரிழிவுக்கு காரணம் என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீரிழிவுக்கான காரணம் சர்க்கரை அலது இனிப்பு அதிகம் சாப்பிடுவது கிடையாது. ஒரு நபருக்கு டைப் 2 நீரிழிவு வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பரம்பரையில், குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தால், அது அந்த குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் வரக்கூடிய சாத்தியம் இருக்கின்றது. அதேபோல உடல் பருமன், வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், ஆகியவையும் இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

சர்க்கரை என்பது இனிப்புகளில் மட்டுமே இல்லை. பால் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றில் இயற்கையாக சர்க்கரை இருக்கிறது. எனவே இந்த உணவுகளை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்று நிச்சயமாக கூற முடியாது. அப்படி என்றால் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருமா என்று அடுத்ததாக ஒரு கேள்வி எழும்புகிறது!

நீரிழிவு நோய்க்கு சர்க்கரை காரணமா?

நீரிழிவு நோய்களில் முக்கியமாக இரண்டு வகைகள் உள்ளன.

முதலாவதாக டைப் 1 நீரிழிவு என்பது நிச்சயமாக இனிப்பு அல்லது சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படாது. உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சிஸ்டம், இன்சுலின் உற்பத்தியாகும் செல்களை அழித்துவிடுகிறது. இதனால் உடலால் இன்சுலின் சுரக்க முடியாமல் போவதால் டைப் ஒன்று நீரிழிவு ஏற்படுகிறது. தினமும் ஊசி மூலமாக இன்சுலின் செலுத்திக் கொண்டு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

Also Read : UTI Infection : வெஸ்டர்ன் டாய்லெட் சீட்டுகள் சிறுநீர் பாதை தொற்றை ஏற்படுத்துமா..? தவிர்க்கும் வழிகள்..!

டைம் 2 நீரிழிவு என்பது உடலுக்கு தேவையான அளவு இன்சுலின் சுரக்கவில்லை அல்லது குளுக்கோஸ் அளவு அதிகமாக இருப்பதை உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மருந்துகள் ஆகியவற்றின் மூலம் கட்டுக்குள் வைப்பதை குறிக்கிறது.

டைம் டூ நீரிழிவு ஏற்படுவதற்கு சர்க்கரை மட்டுமே ஒரே காரணம் என்று கூற முடியாது. இனிப்புகள் அதிகமாக சாப்பிடும் போது நீங்கள் அதிக கலோரிகளை உட்கொள்கிறீர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே உங்களுக்கு உடல் எடை அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கின்றது. உடல் பருமன் என்பது நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணங்களில் முதல் காரணமாக இருக்கின்றது. எனவே இவை அனைத்துமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. இனிப்புகள் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் நேரடியாக ஏற்படாது; ஆனால் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

Also Read :  பெண்கள் சரியாக தூங்கவில்லை எனில் இத்தனை பிரச்சனைகள் வருமா..? உஷார்...

பலவிதமான இனிப்புகள் இருக்கின்றன. இதில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது அவசியம். ஏனென்றால் இது சத்துக்கள் எதுவுமில்லாமல் ஜீரோ கலோரி கொண்ட ஒரு இனிப்பு வகையாகும். இது மட்டுமல்லாமல், ஹை-ஃபிருக்டோஸ் கார்ன் சிரப் என்று உடலுக்கு நேரடியாக பல விதமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்கையான சர்க்கரை சிரப் இருக்கின்றது. இதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இந்த சர்க்கரையை அதிகமாக சாப்பிட்டால் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் பாதிப்படையும், உங்கள் உடலில் சர்க்கரை அளவை நிர்வகிக்கும் திறன் நாளடைவில் பலவீனமாகி, தீவிரமான பாதிப்புகள் ஏற்படலாம்.

First published:

Tags: Diabetes, Sugar