பண்டிகை காலங்களில், நாம் அனைவரும் பலவிதமான சுவையில், லட்டு, ஜிலேபி, குலாப் ஜாமூன்கள் போன்ற இனிப்பு வகைகளை தயாரிப்பதில் ஈடுபடுவோம். இது போன்ற நேரங்களில் சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்புகளை சாப்பிட வேண்டும் என விருப்பம் இருக்கும். இந்த இனிப்புகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். எனவே சர்க்கரை நோயாளிகள் இனிப்பை சாப்பிடவே கூடாதா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் நீரிழிவு நோயாளிகள் சில நேரங்களில் குறைந்த அளவில் இனிப்புகளை சாப்பிடலாம் என பரிந்துரைக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
நாம் சாப்பிடும் உணவில் இருந்து இனிப்பினை முற்றிலுமாக நீக்க முடியாது. எனவே, ஆரோக்கியமான உணவைத் திட்டமிடுங்கள் மற்றும் இடையிடையே இனிப்புகளை உட்கொள்ளுங்கள். இனிப்பு சாப்பிடும் முன் நார்ச்சத்து மற்றும் புரதங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை எப்போதும் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும். அதிக அளவிலான பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவு வகைகளான அரிசி, பிரெட், பாஸ்தா, கிழங்கு வகைகள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அதிக அளவில் சர்க்கரை நிறைந்த பானங்களைத் தவிர்த்துவிட வேண்டும். ஒரு நீரிழிவு நோயாளி இனிப்பு சாப்பிடும் போது மனதில் கொள்ள வேண்டிய 4 தேவையான குறிப்புகள் என்னவென்று இங்கே பார்க்கலாம்.
குறைந்த அளவு இனிப்புகளை உட்கொள்ளுதல்
உணவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, நீரிழிவு நோயாளிகள் இனிப்புகளை மிகக் குறைந்த அளவில் சாப்பிட வேண்டும், இதனால் அவர்களின் இரத்தத்தின் சர்க்கரை அளவுகளில் அதிக பாதிப்பு ஏற்படாது. இனிப்புகளை அதிகமாக சாப்பிடுவது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கலாம்.
குளிர் பானங்கள், பழச்சாறுகளை தவிர்க்க வேண்டும்
நீரிழிவு நோயாளிகள் இனிப்புகளைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், குளிர் பானங்கள், பழச்சாறுகள் அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். பானங்களில் கலக்கப்படும் சர்க்கரை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கும். டைப் 1 நீரிழிவு நோயாளிகள் மற்றும் இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள் எந்த வகையான இனிப்புகளையும் உட்கொள்ளக்கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வெறும் வயிற்றில் இனிப்பு சாப்பிடுவதை தவிர்க்கவும்..
சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் இனிப்புகளை சாப்பிடக்கூடாது. அப்படிச் செய்தால், அவர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும். அத்தகைய நோயாளிகள் காலை உணவு அல்லது மதிய உணவுக்குப் பிறகு மட்டுமே இனிப்புகளை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இரவு நேரங்களில் இனிப்பு சாப்பிட வேண்டாம்..
இரவில் இனிப்புகளை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தும். இதனால் அவர்களுக்கு நல்ல தூக்கம் குறைந்து அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனைகள் ஏற்படலாம். வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படுவது போல் உணரலாம். அத்தகைய நோயாளிகள் இரவில் இனிப்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
Also Read : சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க இந்த எளிய டிப்ஸ்களை ஃபாலோ பண்ணா போதும்.!
இனிப்பை முழுவதுமாக கைவிட முடியாதவர்கள் மாற்று வகை இனிப்பை உட்கொள்ளலாம். ஒரு நாளைக்கு குறைந்தப்பட்சம் 12-15 கிளாஸ் தண்ணீரைக் குடிக்க வேண்டும். ஏனெனில் உடலில் நீர்ச்சத்து குறைந்தால் இனிப்பு சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏற்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Diabetes, Diabetes symptoms, Diabetic diet, Type 2 Diabetes