ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மது அருந்தலாமா..? எந்த அளவோடு நிறுத்திக்கொள்வது நல்லது..?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மது அருந்தலாமா..? எந்த அளவோடு நிறுத்திக்கொள்வது நல்லது..?

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

பொதுவாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் மது அருந்தக் கூடாது என்பதே அறிவுறுத்தப்படுகிறது. அதுவும் கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோயாளிகள் மதுவை நினைப்பதுகூட ஆபத்துதான்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நீரிழிவு நோய் இருந்தாலே நமக்கு பிடித்த உணவுகளை மறந்துவிட வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கும். அப்படி இருக்கும்போது மதுவுக்கு மட்டும் எப்படி விலக்கு தர முடியும்..? ஆனாலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மது அருந்தலாமா என்கிற கேள்வி கட்டாயம் தோன்றும். உங்களுக்கு விளக்கம் தருவதே இந்த கட்டுரை.

ஆரம்பத்தில் மது அருந்துவோருக்கு நீரிழிவு நோய் இருப்பதை கண்டறிந்தாலே அது மதுவினால் வந்ததாகவே சொல்லப்படும். ஆனால் நீரிழிவு நோய் வருதற்கு குடும்ப வரலாறு, உடல் பருமன், வயது முதிர்ச்சி, வாழ்க்கைமுறை போன்றவையும் பொதுவான காரணங்களாக சொல்லப்படுகிறது. இந்த மதுவுக்கும் நீரிழிவு நோய்க்கும் உள்ள உறவு மிகவும் சிக்கலானது. அது பாலின அடிப்படையில் மாறுபடும்.

அந்த வகையில் மது ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு குறைவான வளர்ச்சிதை மாற்ற செயல்திறனை அளிக்கிறது. பெண்கள் ஒரு நாளைக்கு 30ml விஸ்கி சாப்பிட்டால் ஆண்கள் 60ml விஸ்கி சாப்பிடலாமாம். இவ்வாறு சாப்பிட்டால் நீரிழிவு நோய் உருவாகும் ஆபத்து மிக மிகக் குறைவு. இந்த அளவை மீறினால் நிச்சயம் நீரிழிவு நோய் வரும். அதனால் உடல் பருமனும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு அழற்சி நோயும் ஏற்படுவதால் நீரிழிவு நோயின் தீவிரம் மோசமாகும்.

Diabetes Healthy living

நீரிழிவு நோயாளிகள் மதுவை கட்டாயம் தவிர்க்க வேண்டுமா..?

பொதுவாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் மது அருந்தக் கூடாது என்பதே அறிவுறுத்தப்படுகிறது. அதுவும் கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோயாளிகள் மதுவை நினைப்பதுகூட ஆபத்துதான். அவர்கள் ஒரே ஒரு முறை ஏதாவதொரு நிகழ்ச்சியில் மது அருந்தினாலும் அது உடல் நலனில் கடுமையான பாதிப்பை உண்டாக்கும். அவ்வாறு அளவை மீறி மது அருந்தினால் அதுவே அவர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறூம். குறிப்பாக இதயம், கல்லீரல், போன்றவை கடுமையாக பாதிக்கப்படும். தொடர்ச்சியாக இருப்பின் புற்றுநோய் கூட வரலாம்.

பொதுவாக நீரிழிவு நோயாளிகள் மது அருந்தினால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது. மாறாக அது இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்துவிடும். இதனால் நாள்பட்ட அளவில் உட்புற பாகங்களை கொஞ்சம் கொஞ்சமாக சேதப்படுத்தும். அதேபோல் மது அருந்தினால் இரத்த சர்க்கரை அளவு உணவு சாப்பிட்ட பின் அல்லது முன் எனவும் அளவுகளில் மாறுபடும்.

Also Read :  நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டுமா..? கிட்சனி ஒளிந்திருக்கும் இரகசியம் இதோ...

நாம் சாப்பிடாமல் இருக்கும்போது கல்லீரல் தான் தேக்கி வைத்திருக்கும் குளுக்கோஸை வெளியிடும். இதனால் இரத்த சர்க்கரை அளவு வீழ்ச்சியை சந்திக்காமல் அதன் சமநிலையை மேம்படுத்த உதவும். இதே நாம் மது அருந்தியிருந்தால் முதலில் ஆல்கஹாலைதான் வெளியிடும். இதனால் குளுக்கோஸ் பரவலை தடுத்துவிடும். அதேபோல் நீங்கள் மருந்து மாத்திரைகளையும் உட்கொள்கிறீர்கள் எனில் அவற்றை சாப்பிட்டுவிட்டு மது அருந்தினால் இரத்த சர்க்கரை அளவை குறைத்துவிடும். இந்த தாக்கம் அடுத்த 24 மணி நேரத்திற்கு இருக்கும்.

அடுத்ததாக உணவு சாப்பிட்ட பின் மது அருந்துகிறீர்கள் எனில் தூங்கும் முன் இரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்து பார்ப்பது அவசியம். அப்போது உங்கள் இரத்த சர்க்கரை அளவு 100mg/dlக்கு குறைவாக இருந்தால் ஏதாவது ஸ்நாக்ஸ் போல் உட்கொள்வது அவசியம். பால், பழங்கள் அல்லது அரை பாதி சாண்ட்விச் இப்படி ஏதாவது சாப்பிடலாம். நீங்கள் மது போதையில் குறைந்த இரத்த சர்க்கரை அளவை சந்திக்க நேரினால் அது உடல்நலனில் கடுமையான பாதிப்பை தரக்கூடும்.

எவ்வளவு ML மது அருந்துவது பாதுகாப்பானது..?

ஒவ்வொரு ஆல்கஹால் வகையிலும் கலோரிகள் வேறுபடும். எதுவாயினும் மதுவின் அளவு மிக மிக அவசியம். ஆல்கஹாலில் ஒரு யூனிட் என்பது 10 கிராம் என கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் 275ml பீர் , 100 ml வைன், மற்றும் 30ml ஸ்பிரிட் (hard liquor) க்கு இணையாக ஒரு யூனிட் ஆல்கஹால் கணக்கிடப்படுகிறது. அப்படி நீங்கள் அருந்தும் மதுவில் எவ்வளவு யூனிட் இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். இதற்கு முதலில் ஆல்கஹால் அளவை கண்டறிய வேண்டும்.

இதை கண்டறிய பாட்டிலின் பின்குறிப்பில் Alcohol by Volume (ABV) என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதை வைத்து கண்டறியலாம். இந்த அளவு அந்த மதுவில் தூய ஆல்கஹால் அளவு எவ்வளவு சதவீதம் உள்ளது என்பதை குறிப்பதேயாகும். அப்படி ABV அளவு 12 சதவீதம் எனில் அதில் 12 % தூய ஆல்கஹால் இருப்பதாக அர்த்தம். அப்படி கிடைக்கும் ஆல்கஹால் அளவை அந்த பாட்டிலின் ml அளவுடன் பெருக்க வேண்டும். பின் அதை 1000துடன் வகுக்க வேண்டும். அவ்வாறு வகுக்கும்போது கிடைக்கும் அளவே அந்த பாட்டிலின் ஆல்கஹால் யூனிட்.

Also Read : சர்க்கரை நோயால் முன்கூட்டியே மரணம் ஏற்படும் வாய்ப்பு 96 சதவீதம் அதிகம் : அதிர்ச்சி தரும் ஆய்வு

உதாரணத்திற்கு நீங்கள் 500 ml பீர் பாட்டில் வைத்திருக்கிறீர்கள் எனில் அதில் 5 சதவீதம் ஆல்கஹால் கலக்கப்படிருந்தால் நீங்கள் 2.5 யூனிட் ஆல்கஹால் எடுக்கிறீர்கள் என்று அர்த்தம். அதுவே 30 ml விஸ்கி பாட்டிலில் 40% ஆல்கஹால் கலக்கப்பட்டுள்ளது எனில் 1.2 யூனிட் ஆல்கஹால் இருக்கிறது என்று அர்த்தம். நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு 2 யூனிட் ஆல்கஹாலுக்கு மேல் அருந்தக் கூடாது. பெண்கள் 1 யூனிட்டிற்கு மேல் அருந்தக்கூடாது.

எதுவாயினும் அதிக ஆல்கஹால் நிறைந்த வோட்கா போன்ற பானங்களை இனிப்பு நிறைந்த ஜூஸ், காக்டெய்ல் போன்றவற்றுடன் கலந்து குடிக்கும்போது கலோரிகள் அதிகரிக்கும். எனவே அதிக கலோரியை தவிர்க்க வேண்டுமெனில் சோடா, பால் போன்றவற்றுடன் உட்கொள்ளலாம்.

ஸ்நாக்ஸ் வகைகளை தவிர்க்கவும் :

மது அருந்தும்போது பலருக்கும் வறுத்த, பொறித்த உணவுகளை சாப்பிடுவது வழக்கமாக இருக்கும். ஆனால் இதை நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாக கடலை, நட்ஸ், முட்டை வெள்ளை பகுதி போன்றவற்றை சாப்பிடலாம். அதேபோல் அதிகமாக குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு ட்ரிங்ஸ் என குடிப்பது நல்லது. ஒரு நாளைக்கு ஒரு ட்ரிங்ஸ் குடிப்பதற்கும் சனிக்கிழமை மொத்தமாக 7 ட்ரிங்ஸ் குடிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

எந்த பானம் குடிப்பது நல்லது..?

உங்கள் விருப்பத்தை பொருத்து அருந்தலாம். ஆனால் இனிப்பு நிறைந்த வைனை தவிருங்கள். அதேபோல் குறைந்த கார்ப் கொண்ட பீர் அருந்துங்கள். அதேபோல் நீங்கள் அருந்தும் மதுபானத்தின் ஆல்கஹால் அளவு மிகவும் அவசியம். அதுவே உடல் ஒட்டுமொத்தமாக ஆல்கஹாலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது எனில் மது அருந்துவதையே தவிர்ப்பது நல்லது.

நீரிழிவு நோயாளிகள் மது அருந்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை :

ஆண்கள் ஒரு நாளைக்கு 2 யூனிட்டிற்கு மேல் மது அருந்தக்கூடாது. பெண்கள் 1 யூனிட்டிற்கு மேல் அருந்தக்கூடாது.
அதிக இரத்த் அழுத்தம், இதய நோய், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, கண்கள் பாதிப்பு, நரம்புகள் பாதிப்பு என நீரிழிவு நோயுடன் இதுபோன்ற கடுமையான நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தால் கட்டாயம் மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது.
மது அருந்திய பின் அதனால் வரக்கூடிய டிஹைட்ரேஷன் மற்றும் ஹேங்ஓவரை தவிர்க்க நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
மது அருந்தும்போது குறைந்த கலோரி கொண்ட ஸ்நாக்ஸ் சாப்பிடுங்கள்.
வெறும் வயிற்றில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
மெதுவாக அருந்த வேண்டும். அதாவது ஒரு மணி நேரத்திற்கு ஒரு ட்ரிங்க் என அருந்த வேண்டும்.
சர்க்கரை நிறைந்த பானங்களை மிக்ஸ் செய்வதை தவிருங்கள். அதேபோல் இனிப்பு கொண்ட வைன் வகைகளை தவிருங்கள். அதற்கு பதிலாக தண்ணீர், கிளப் சோடா அல்லது டயட் ட்ரிங்ஸுகளுடன் கலந்துகொள்ளலாம்.
மது அருந்திய பின் ஆல்கஹால் அளவை பரிசோதிப்பது அவசியம்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Alcohol consumption, Diabetes