Home /News /lifestyle /

சர்க்கரை நோயாளிகள் இரத்த தானம் செய்யலாமா..? அவ்வாறு செய்வது பாதுகாப்பானதா..? மருத்துவ விளக்கம்...

சர்க்கரை நோயாளிகள் இரத்த தானம் செய்யலாமா..? அவ்வாறு செய்வது பாதுகாப்பானதா..? மருத்துவ விளக்கம்...

இரத்த தானம்

இரத்த தானம்

Blood Donation : இரத்த தானம் செய்வதற்கு முன், நீங்கள் ஒரு சுகாதார பரிசோதனை செய்துகொள்வது அவசியம். அதேபோல் இதய நோய் அல்லது பிற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்ய அறிவுறுத்தப்படுவதில்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஒவ்வொரு ஆண்டும் இரத்த தானம் மூலம் மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. அதாவது மக்கள் செய்யும் இரத்த தானத்தால்தான் நோயால் பாதிக்கப்பட்டவர்களை சரியான நேரத்தில் காப்பாற்ற முடிகிறது. ஆரோக்கியமான மற்றும் உடல் தகுதி உள்ளவர்கள் அவ்வப்போது இரத்த தானம் செய்ய அரசாங்கத்தால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதேபோல் அனைவரும் இரத்த தானம் செய்ய முடியுமா என்றால் நிச்சயம் கிடையாது. மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே இரத்த தானம் செய்யமுடியும்.

    அதேபோல் இரத்த தானம் செய்ய விரும்புவோருக்கு நோய் ஏதேனும் இருந்தால் நிச்சயம் மருத்துவ ஆலோசனை அவசியம். அந்த வகையில் சர்க்கரை நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில சமயங்களில் அவர்களும் இரத்த தானம் செய்ய விரும்புவார்கள். அப்படி நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்வது பாதுகாப்பானதா? இந்த கேள்வி பலரிடமும் இருப்பதால் இதை பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

    நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்வது பாதுகாப்பானதா..?

    ஹெல்த்லைன் அறிக்கையின்படி, நீரிழிவு நோயாளிகளும் இரத்த தானம் செய்யலாம். டைப்1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த தானம் செய்வது பொதுவாக பாதுகாப்பானது. ஆனால் அது அவர்களின் நிலையைப் பொறுத்தது.அதாவது அவர்களுடைய சர்க்கரை நோயானது கட்டுப்பாட்டிலும் , சரியான நிலையிலும் இருக்க வேண்டும். அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருந்தால், உங்களுக்கு வேறு எந்த நோயும் இல்லை என்றால், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம்.

    உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த 7 உணவுகளை தொடவே கூடாதாம்...

    இரத்த தானம் செய்வதற்கு முன், நீங்கள் ஒரு சுகாதார பரிசோதனை செய்துகொள்வது அவசியம். அதேபோல் இதய நோய் அல்லது பிற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்ய அறிவுறுத்தப்படுவதில்லை. இது தவிர, சர்க்கரை நோயாளிகள் ரத்த தானம் செய்த பிறகு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.



    இரத்த தானம் செய்வதற்கு முன் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்...

    நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்வதற்கு முன், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இப்படி செய்வதால் அவர்களுக்கு எந்த வித பிரச்சனையும் வராமல் தடுக்கலாம். உடலும் இரத்த தானம் செய்வதற்கு தயார் நிலையில் இருக்கும்.
    இரத்த தானம் செய்வதற்கு முன் நிறைய தண்ணீர் குடிக்கவும்.
    இரத்த தானம் செய்வதற்கு 1-2 வாரங்களுக்கு முன் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் அல்லது மருத்துவரின் பரிந்துரைத்தபடி இரும்புச் சத்து கொண்ட சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.
    தினமும் 8 மணிநேரம் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
    சமச்சீரான உணவை சாப்பிடுவது அவசியம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.
    காஃபின் குறைவாக உட்கொள்ள வேண்டும். இது தவிர சர்க்கரை நோய்க்கான மருந்துகளை தவிர்க்கவே கூடாது. மருத்துவருடன் தொடர்பில் இருங்கள். ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Blood Donation, Diabetes

    அடுத்த செய்தி