பண்டிகைக்காலங்களில் எங்கு திரும்பினாலும் நமக்கு பிடித்த உணவுகள்தான் இருக்கும். அதுவும் இனிப்பு வகைகளுக்கு பஞ்சமே இருக்காது. இந்த சமயத்தில் டயட் விஷயங்களெல்லாம் காற்றில் பறந்து போகும். பின் அடுத்த நாளே அடித்து பிடித்து ஏறிய கலோரிகளை குறைக்க டீடாக்ஸ் பானங்களை குடிப்பார்கள். ஆனால் அப்படி டீடாக்ஸ் பானங்களை குடிப்பது ஆபத்து என்கின்றனர் வல்லுநர்கள். ஏன் தெரியுமா..?
இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள ஊட்டச்சத்து நிபுணர் ருஜுடா தீவேகர் ” கல்லீரலை சுத்தம் செய்ய கிரீன் டீ, டீடாக்ஸ் பானங்களை முயற்சி செய்வது தவறானது. அதற்கு பதில் இயற்கையான வழிகளை பின்பற்றலாம் என்று அறிவுறுத்துகிறது.
அதாவது மசாஜ் செய்வது, நடை பயிற்சி செய்வது, ஸ்மூதி, சாலட் , சூப் என எதையும் முறையில்லாம சாப்பிடுவது கல்லீரல் என்சைம் சுரப்பை அதிகரிக்கும் என்கிறார். அதாவது "கல்லீரல் ஒரு முக்கியமான உறுப்பு. அதன் வேலை உடலின் அனைத்து பகுதிகளையும் சுத்தப்படுத்துவது அல்லது நச்சு நீக்குவதாகும். எனவே அதை தொந்தரவு செய்யாமல் விடுவது தானாகவே தன்னுடைய வேலையை செய்துகொள்ளும். நீங்கள் கூடுதலாக டீடாக்ஸ் பானங்களை குடிப்பதால் நாள்பட்ட கல்லீரல் நோய் அல்லது இன்சுலின் எதிர்ப்பை உருவாக்கலாம். இது உங்களுக்கு கடுமையான பாதிப்பை உண்டாக்கும்.
டீடாக்ஸ் பானங்களை தொடர்ந்து சாப்பிடுவதால் வரும் ஆபத்துகள் :
இது கல்லீரலை சேதப்படுத்தும், இயற்கையாகவே உடலை
நச்சுத்தன்மையாக்கும்.
இது உடல் அமைப்பை மாற்றுகிறது
தசை மற்றும் எலும்பு அடர்த்தியை இழப்பீர்கள்.
இது உங்கள் நம்பிக்கையை எதிர்மறையாக பாதிக்கிறது
சரி, கலோரிகள் அதிகரிக்காமல் தீபாவளி பலகாரங்களை எப்படி சுவைப்பது..?
பார்ப்க்கும் அனைத்தையும் சாப்பிடாமல் உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்யுங்கள். மனம் நிறைவுடன் சாப்பிடுங்கள். நன்கு மெதுவாக மென்று சாப்பிட்டு விழுங்கவும். அவசரமாக சாப்பிட வேண்டாம். இதை செய்தாலே போதும் உடல் அதற்கான வேலையை செய்துகொள்ளும் என்கின்றார் ருஜுடா.
Published by:Sivaranjani E
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.