Home /News /lifestyle /

வைட்டமின் டி குறைபாடு புற்றுநோயை உண்டாக்குமா.? ஆய்வுகள் என்ன சொல்கின்றன..

வைட்டமின் டி குறைபாடு புற்றுநோயை உண்டாக்குமா.? ஆய்வுகள் என்ன சொல்கின்றன..

விட்டமின் டி குறைபாடு

விட்டமின் டி குறைபாடு

வைட்டமின் டி நம் எலும்புகளை பராமரிப்பது மட்டுமல்லாமல், எம்எம்ஆர் (மிஸ்-மேட்ச் ரிப்பேர்) எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் உருவாகும் குறைபாடுள்ள மரபணுக்களை சரிசெய்வதற்கும் உதவுகிறது

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
உடலின் பொதுவான மற்றும் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க வைட்டமின்கள் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கின்றன. வைட்டமின் குடும்பத்தில் பிறவற்றை விட சற்று அசாதாரணமான வைட்டமின்களில் ஒன்று வைட்டமின் டி ஆகும். பொதுவாக வைட்டமின் டி குறைபாடு எலும்பு மற்றும் மூட்டு வலி, எலும்பு முறிவுகள், ஆஸ்டியோபோரோசிஸ், தசைப்பிடிப்பு, சோர்வு, மனநிலை மாற்றங்கள் மற்றும் சோர்வு உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும்.

பொதுவாக வைட்டமின் டி என்பது நமது சருமம் மற்றும் உடல் சூரிய ஒளியில் படும் போது கொலஸ்ட்ராலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஸ்டீராய்டு ஹார்மோன் என விவரிக்கப்படுகிறது. நாம் எடுத்து கொள்ளும் பெரும்பாலான உணவுகளில் வைட்டமின் டி இல்லாததால் இந்த ஊட்டச்சத்து குறைபாடு மிகவும் பொதுவானதாக இருக்கிறது.

நாம் மேலே குறிப்பிட்டு உள்ளபடி வைட்டமின் டி குறைபாடு வளரும் நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு பொதுவான எலும்பு நோயான ரிக்கெட்ஸை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. தவிர வைட்டமின் டி குறைபாடு ஆஸ்டியோபோரோசிஸுடன் தொடர்புடையது, இது கனிம அடர்த்தியைக் குறைக்கிறது, மேலும் வயதானவர்களுக்கு எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆனால் இந்த வைட்டமின் குறைபாடு புற்றுநோயையும் ஏற்படுத்துமா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்...

வைட்டமின் டி உடலின் முக்கிய கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். இது உடலின் சீரான செயல்பாட்டிற்கு தேவையான கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது. 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு முக்கிய ஆய்வு வைட்டமின் டி மார்பகப் புற்றுநோயில் கட்டி வளர்ச்சி மற்றும் மெட்டாஸ்டாசிஸ் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று குறிப்பிட்டது எண்டோகிரைனாலஜி ஜர்னலில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, குறைந்த அளவு வைட்டமின் டி என்பது மார்பக புற்றுநோய் வளர்ச்சி மற்றும் மெட்டாஸ்டாசிஸை ஊக்குவிப்பதில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கலாம் என்று கூறியுள்ளது.



அதே போல சமீபத்திய சில ஆய்வுகள் வைட்டமின் டி குறைபாடு பல வகையான புற்றுநோய்களின் அபாயத்துடன் தொடர்புடையது. கருப்பை, மார்பகம், பெருங்குடல் மற்றும் பல மைலோமாக்கள் போன்ற சில புற்றுநோய்கள் வைட்டமின் D3 இன் குறைபாட்டுடன் வலுவான தொடர்பை கொண்டுள்ளதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

தூக்கத்தை இழப்பதால் ஏற்படும் முக்கிய உடல்நலப் பிரச்சனைகள் பற்றி தெரியுமா..?

குறிப்பிட்ட சில உணவுகள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் மூலம் வைட்டமின் டி பெறப்படுகிறது அல்லது சூரிய ஒளிக்கு பதிலளிக்கும் வகையில் உடலால் வைட்டமின் டி உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் மார்பக திசு உட்பட பல்வேறு உடல் திசுக்களில் கால்சிட்ரியால் என்ற ஹார்மோனாக இது மாற்றப்படுகிறது. வைட்டமின் டி நம் எலும்புகளை பராமரிப்பது மட்டுமல்லாமல், எம்எம்ஆர் (மிஸ்-மேட்ச் ரிப்பேர்) எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் உருவாகும் குறைபாடுள்ள மரபணுக்களை சரிசெய்வதற்கும் உதவுகிறது.

வைட்டமின் டி அதிக எண்ணிக்கையிலான மரபணுக்களை ஒழுங்குபடுத்தும் என்பதோடு அவற்றில் சில புற்றுநோயுடன் தொடர்புடையவை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். புரோஸ்டேட் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் மல்டிபிள் மைலோமா நோயாளிகளிலும் வைட்டமின் டி குறைபாடு பங்கு வகிக்கிறது என்று மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.



2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் ஆக்ட்டிவாக உள்ள வைட்டமின் டி புற்றுநோய் உயிரணு வளர்ச்சியை தடுக்கிறது, புற்றுநோய் செல் முதிர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் ஆஞ்சியோஜெனீசிஸைக் குறைக்கிறது. அதே போல வைட்டமின் டி மற்றும் குறிப்பாக அதன் செயலில் உள்ள வடிவம் மனித ஹோமியோஸ்டாசிஸில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முக்கியமான ஹார்மோனாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களை தாக்கும் முதுகுவலி : குணமடைந்த பின்பும் தொடர்வதாக வல்லுநர்கள் விளக்கம்...

அதிக குளிர் பிரேதசங்களில் வாழ்பவர்கள் பெருங்குடல், புரோஸ்டேட், மார்பகம் மற்றும் பிற புற்றுநோய்களை உருவாக்கும் மற்றும் இறக்கும் அபாயத்தை அதிகரிக்கின்றனர். அதே நேரம் சூரிய ஒளி மற்றும் வெயில் இயல்பாக இருக்கும் பிரதேசங்களில் வாழும் மக்கள் புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வைட்டமின் டி குறைபாடால் ஏற்படும் புற்றுநோய் அபாயத்தை குறைக்க பால், சோயா பால், செறிவூட்டப்பட்ட தானியங்கள், மீன், முட்டை, சீஸ், வெண்ணெய், ப்ரோக்கோலி, காளான், அவகேடோ, பப்பாளி, உலர் பழங்களான அக்ரூட் பருப்புகள், வேர்க்கடலை மற்றும் பாதாம் போன்றவற்றை போதுமான அளவு சாப்பிடுவதை உறுதி செய்ய நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Vitamin D

அடுத்த செய்தி