Home /News /lifestyle /

தினமும் உடலுறவு கொண்டால் கரு நின்றுவிடுமா..? மருத்துவர் விளக்கம்...

தினமும் உடலுறவு கொண்டால் கரு நின்றுவிடுமா..? மருத்துவர் விளக்கம்...

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பெண் குயின் கார்னர் 45 : கர்ப்பமடைவதை பொறுத்தவரை, ஒரு மாதத்தில் கருமுட்டை உண்டாகும். நான்கைந்து நாட்கள் மட்டுமே கருவுறுவதற்கான வாய்ப்பு இருக்கும். பொதுவான அறிவுரை, ஒரு நாள் விட்டு ஒரு நாள் உறவு கொள்ளும் பொழுது கருவுறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
சென்ற வார சுருக்கம் :

நிகிரா 27 வயது, வங்கியில் பணிபுரிபவர்.

"திருமணமாகி 6 மாசம் ஆகிறது. ரெண்டு பேருமே வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டோம். தினமும் செக்ஸ் வச்சிக்கனும்னு விரும்புகிறார்

டாக்டர்! இது மாதிரி செக்ஸில் அதிகமான விருப்பம் இருக்கிறது, நார்மல் தானா! எல்லாரும் இப்படித்தான் இருப்பாங்களா?! உங்க கிட்ட நிறைய பேர் வருகிறார்களே!. சொல்லுங்க! " என்றார்.

ஆண்கள் செவ்வாயிலிருந்தும் பெண்கள் சுக்கிரனிலிருந்தும் வந்தார்கள் என்று சொல்வதுண்டு .

தன் திருமணத்தில், பெண்கள் அதிகம் எதிர்பார்ப்பது பாதுகாப்பையும் சமுதாயத்தில் அந்தஸ்தையும் மரியாதையையும். பெண்களைப் பொறுத்தவரை தாம்பத்திய உறவுக்கு முதலிடம் கொடுப்பதில்லை. ஆனால் ஆண்களின் மனம் அப்படி இல்லை.

பொதுவாக நல்ல புரிதல் உள்ள தம்பதிகளில் இந்தப் பிரச்சினையை எளிதாக கையாளலாம். மனநல ஆலோசகர் உதவியும் பெற்றுக் கொள்ளலாம். நாளடைவில் சரியாவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக குழந்தை பிறந்த பிறகு பல ஆண்களின் கவனமும் குழந்தைகள் மீது சரி பாதியாக திரும்பிவிடும்.



நிகிராவின் கணவருக்கு சில தவறான புரிதல்களும் இருந்தன. தினமும் உடலுறவு கொண்டால் மட்டுமே குழந்தை பிறக்கும் என்று அவருடைய நண்பர்கள் மூலம் தவறாக புரிந்து கொண்டிருந்தார்.

நிகிராகவும் அவர் கணவரும் மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெற்றனர். தாம்பத்தியத்தில் கிடைக்கும் அதே மகிழ்ச்சி, இருவரும் அன்னியோன்யமாக, ஒருவருக்கொருவர் ஆதரவாக ,பக்க பலமாக இருப்பதிலும் கிடைக்கும். அப்போதுதான் கணவன் மனைவி உறவு வலுப்படும். பலப்படும்.

மாதவிடாய் சமயத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா..? இந்த சமயத்தில் குழந்தை நிற்காதா..?

உடலுறவு மட்டுமே தாம்பத்தியம் அல்ல இருவரும் ஒன்று சேர்ந்து உணவருந்துவது, காபி அருந்துவது, வெளியே செல்வது ,வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்வது, உறவினர்களை சந்திப்பது போன்றவையும் இருவருக்கும் இடையிலான பந்தத்தை வலுப்படுத்தும். இந்த புரிதலே வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். இதை மனநல ஆலோசகர் மிக அழகாக நிகராவின் கணவரை புரிந்து கொள்ளச் செய்து இருந்தார்.



கர்ப்பமடைவதை பொறுத்தவரை, ஒரு மாதத்தில் கருமுட்டை உண்டாகும். நான்கைந்து நாட்கள் மட்டுமே கருவுறுவதற்கான வாய்ப்பு இருக்கும். பொதுவான அறிவுரை, ஒரு நாள் விட்டு ஒரு நாள் உறவு கொள்ளும் பொழுது கருவுறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

மாதவிடாய் கப் பயன்படுத்துவது கர்ப்பம் தரித்தலை பாதிக்குமா..? மருத்துவர் விளக்கம்

மூன்று மாதங்கள் கழித்து நிகிரா, கைபேசியில் அழைத்திருந்தார்.
மகிழ்ச்சி பொங்க "என் திருமண வாழ்க்கையில் நிம்மதியை மீட்டுக் கொடுத்தவர் நீங்கள்!, என் தினசரி பிரார்த்தனையில் நீங்கள் கண்டிப்பாக இருப்பீர்கள்!!! "என்ற போது கண்ணீரும் சேர்ந்தது ,அவர் குரலில் தெரிந்தது. மனது நிறைந்தது.

மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Fertility, Pregnancy, Sex Addiction, பெண்குயின் கார்னர்

அடுத்த செய்தி