முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மூன்று தவணை தடுப்பூசி போட்டாலும் கொரோனா வருமாம்.. அறிகுறிகள் இதுதான்...!

மூன்று தவணை தடுப்பூசி போட்டாலும் கொரோனா வருமாம்.. அறிகுறிகள் இதுதான்...!

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, உடல் வலி போன்ற பல்வேறு அறிகுறிகளும் காணப்படுகின்றன. அதில் சிலருக்கு மூச்சு விடுவதில் கூட சிரமம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சீனாவில் சமீப காலமாக கொரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இரண்டு தடுப்பூசிகளுடன் ஒரு பூஸ்டர் ஊசியை செலுத்தியவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் என்னவெனில் மற்ற தடுப்பூசிகளை போல கொரோனா தடுப்பூசி 100% பாதுகாப்பை அளிக்காது. எனவே சில சமயங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் வீரியத்தையும் தாண்டி மனிதர்களுக்கு பாதிப்பை உண்டாக்குகிறது. ஆனாலும் தடுப்பூசி செலுத்தியவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் மிகவும் லேசாகவே இருக்கும் என கூறுகின்றனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகளை பற்றியும் பட்டியலிட்டு உள்ளனர்.

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள்:

  • மூக்கில் நீர் வடிதல்: தொற்றினால் பாதிக்கப்பட்ட பலருக்கும் மூக்கில் நீர் வடியும் பிரச்னை ஏற்பட்டதாக பலர் தெரிவித்துள்ளனர்.
  • தொண்டை கரகரப்பு: தொண்டையில் வலி போன்ற ஒரு உணர்வு வைரஸ் தாக்கி ஒரு வாரம் வரை இருந்ததாக பலர் தெரிவித்துள்ளனர். மேலும் உணவை விழுங்கும் போது அது தொண்டையில் வலியை ஏற்படுத்தும்.
  • மூக்கடைப்பு: கொரோனா தொற்றும் காரணமாக ரத்த நாளங்கள் விரிவடைந்து மூக்கடைப்பை ஏற்படுத்தும்.

இந்த மூன்று அறிகுறிகளை தவிர காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, உடல் வலி போன்ற பல்வேறு அறிகுறிகளும் காணப்படுகின்றன அதில் சிலருக்கு மூச்சு விடுவதில் கூட சிரமம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கூட ஏன் கொரோனா வைரஸ் தாக்குகிறது?

கொரோனா வைரஸ் ஆனது பல்வேறு விதங்களில் உருமாற்றம் அடைந்து பரவுவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். ஏற்கனவே உள்ள மூன்று தடுப்பூசிகளும் கொரோனா வைரஸ் எதிராக சிறப்பாக போராடினாலும் அவை 100% பாதுகாப்பை தரும் என உத்தரவாதம் எடுக்க முடியாது.

தடுப்பூசி செலுத்திய பிறகும் கொரோனா தாக்குவதற்கு எவ்வளவு வாய்ப்புகள் உள்ளன?

ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திய ஐந்தாயிரம் பேரில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தாக்குமா அபாயம் இருந்தது. தற்போது 4 மில்லியனுக்கும் அதிகமான முழுமையான தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்களை பரிசோதித்துப் பார்த்ததில் நூறில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

Also Read : Corona Spread | நேரடி தொடர்பு இல்லாதவர்க்கும் கோவிட் தொற்று வருவதற்கான 5 சாத்தியமான காரணங்கள்

யாருக்கெல்லாம் தடுப்பூசி செலுத்தே பின்வரும் கொரோனா தாக்கம் அபாயம் உள்ளது

பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் புற்றுநோய் மற்றும் கீமோ தெரபி பேசிய கீழ் இருப்பவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தினாலும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

First published:

Tags: Corona Symptoms, Corona Vaccine, Covid-19