• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பெண்குயின் கார்னர் 8 : திருமண சமயத்தில் மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை எடுக்கலாமா..? மருத்துவர் விளக்கம்

பெண்குயின் கார்னர் 8 : திருமண சமயத்தில் மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை எடுக்கலாமா..? மருத்துவர் விளக்கம்

பெண் குயின் கார்னர்

பெண் குயின் கார்னர்

பொதுவாக தள்ளி போக வைக்கும் மாத்திரைகளால் பெரிய பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை. லேசான தலைவலி குமட்டல் வாந்தி எடை அதிகமாகுதல் போன்றவை ஏற்படலாம். இவை தற்காலிகமானவையே.

  • Share this:
பல பெண்களுக்கும் வரக்கூடிய பொதுவான பிரச்சனை.
அதுதான் தீபிகாவுக்கும். திருமணம் நிச்சயமாகி நான்கு மாதங்கள் ஆகியிருந்தது. நிச்சயத்தின் போதே குறிக்கப்பட்ட திருமண தேதி.

எத்தனைதான் நாட்களை சரிபார்த்து, கணக்கு செய்து திருமணத்திற்கான தேதியை குறித்தாலும் மாதவிலக்கு,சரியாக திருமண நாளை நெருங்கி வருவது போல அமைந்துவிடட்டது. திருமணத்திற்கு பத்து நாட்களே உள்ள நிலையில் என்ன செய்யலாம்? என்று குழப்பத்தில் தீபிகாவும் அவள் தாயும்.

நிச்சயக்கப்பட்ட அன்றிலிருந்தே திருமணத்தைப் பற்றிய எண்ணங்களும், , பயம், அதிகப்படியான வேலை, எதிர்பார்ப்புகள் இவை எல்லாம் சேர்ந்து மனதில் உண்டாகும் அதீத மகிழ்ச்சியோடு கலந்த மன அழுத்தம் தான், மாதவிலக்கு நாட்கள் தள்ளிப் போவதற்கும் அல்லது முன்பே வருவதற்கு ஒரு காரணமாக அமைகின்றன.

எந்த மன அழுத்தமும் ப்ரோலாக்டின் என்கிற ஹார்மோனை சுரப்பை அதிகப்படியாக ஏற்படுத்துகிறது. இந்த புரோலாக்டின் மாதவிலக்கு நாட்களில் குழப்பம் செய்யும் அளவுக்கு பலம் பொருந்திய ஒரு ஹார்மோன் . அதனால் தான் தேர்வு, திருமணம் முக்கியமான திருநாட்கள் நெருங்கி வரும்போது மாதவிலக்கு நாட்களில் மாற்றம் ஏற்படலாம். திருமண சமயத்தில் ஏராளமான சடங்குகளும் பூஜைகளும் இருப்பதால் பொதுவாக அந்த நேரத்தில் மாதவிலக்கு வருவதை மனம் விரும்புவதில்லை. என்ன செய்யலாம்?

மாதவிலக்கு தள்ளி போவதற்கு ஹார்மோன் மாத்திரைகள் இருக்கின்றன. மாதவிலக்கு உங்களுக்கு ஆகும் என்று எதிர்பார்க்கும் தேதிக்கு மூன்று தினங்கள் முன்பிலிருந்தே மாத்திரைகளை எடுக்க ஆரம்பிக்க வேண்டும். என்று வரை மாதவிலக்கு ஆகக்கூடாதோ அன்று வரை மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மொத்தமாக 14 தினங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.



இன்னொரு முக்கியமான விஷயம் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். முதல் நாள் மாத்திரை 8மணிக்கு எடுக்கிறீர்கள் என்றால் தினமும் அதே நேரத்திலோ, அதற்கு அரை மணி நேரம் முன்போ, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். மறந்துவிட்டால் நடுவே மாதவிலக்காகும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.

பொதுவாக தள்ளி போக வைக்கும் மாத்திரைகளால் பெரிய பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை. லேசான தலைவலி குமட்டல் வாந்தி எடை அதிகமாகுதல் போன்றவை ஏற்படலாம். இவை தற்காலிகமானவையே. மாத்திரையை நிறுத்தி மாதவிலக்கானதும் இந்த அறிகுறிகள் மறைந்துவிடும். மாத்திரை நிறுத்திய தினத்திலிருந்து இரண்டு வாரங்களுக்குள் மாதவிலக்கு ஏற்படலாம்.

பெண்குயின் கார்னர் 7 : கொரோனா குணமடைந்த பின் எத்தனை நாட்கள் கழித்து திருமணம் செய்வது சரி..?

கர்ப்பமாக இருக்கலாம் என்ற வாய்ப்பு இருக்கும் பெண்கள், மாத்திரைகளை எடுக்கக் கூடாது. அதுபோல 20 வயதிற்கு கீழே உள்ள பெண்கள் மற்றும் மாதவிலக்கு நிற்கும் பருவத்தை அடைந்த பெண்கள் மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது.



மாத்திரை எடுத்த பிறகு வரும் மாதவிலக்கில் சிலருக்கு அதிகமான ரத்தப்போக்கு, வயிற்றில் வலி போன்றவை ஏற்படலாம். ஆனால் அவை எல்லாம் அந்த மாதத்தோடு நின்றுவிடும். அடுத்தடுத்த மாதங்களில் மாதவிலக்கில் மாற்றமோ அல்லது கர்ப்பமாவதற்கான வாய்ப்பிலோ எந்தவிதமான மாறுதலும் இருக்காது.

தீபிகாவிற்கு மாதவிலக்கு திருமண நாளை தாண்டிப்போவதற்கு மாத்திரைகளை எழுதிக் கொடுத்தேன்.
நல்லபடியாக திருமணம் நடக்கட்டும் .

 

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: