Home /News /lifestyle /

பெண்குயின் கார்னர் 12 : சிறு வயதில் செய்த மார்பக அறுவை சிகிச்சை திருமணத்திற்கு பின்பு பாதிப்பை உண்டாக்குமா..? மருத்துவர் விளக்கம்...

பெண்குயின் கார்னர் 12 : சிறு வயதில் செய்த மார்பக அறுவை சிகிச்சை திருமணத்திற்கு பின்பு பாதிப்பை உண்டாக்குமா..? மருத்துவர் விளக்கம்...

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பொதுவா சின்ன வயசுல மார்பில் வரக்கூடிய கட்டி, கேன்சர் கிடையாது. அதிகமான அளவு இந்த வயதில் வரக்கூடியது நார்த்திசுக்கட்டி ஃபைப்ரோ அடினோமா(fibroadenoma) , இந்த கட்டி உடைய தன்மை என்னன்னா இது திரும்ப வரலாம்.

சுஜிதாவும் அவர் தோழியும் அன்று காலை மருத்துவமனைக்கு என்னை சந்திக்க வந்திருந்தனர்.

சுஜிதாவிற்கு இருபத்தி ஏழு வயது வங்கியில் பணிபுரிகிறார்.

வழக்கமான விசாரிப்புகளுக்கு பிறகும், சுஜிதா தன் பிரச்சினையை கூறவில்லை. மீண்டும் மீண்டும் தயங்கிக்கொண்டே இருந்தார்.

டாக்டர்!! , எனக்கு இந்த விஷயத்தை பத்தி பேசறதுக்கு கொஞ்சம் 'ஷை'யா இருக்கு. என்றார்.

"சொல்லுங்க சுஜிதா!!! எதுனாலும் தயங்காம சொல்லுங்க!" என்றேன்.

டாக்டர்!!!! எனக்கு 17 வயசுல, வலது மார்பில் கட்டி இருக்குனு ஆபரேஷன் செஞ்சாங்க. டீடைல் எதுவும் இப்ப என்கிட்ட இல்ல டாக்டர்!!

அந்த ஆபரேஷன் பண்ணதுனால , இப்ப எனக்கு ஏதாவது பிரச்சனை வருமா?

அந்த கட்டி எனக்கு ஏன் வந்துச்சு..?பிறவியிலேயே ஏதாவது பிரச்சனை இருக்கறதுக்கு வாய்ப்பு இருக்கா?



திரும்ப எனக்கு அந்த மாதிரி கட்டி வருமா?

இப்ப எனக்கு கல்யாணத்துக்காக வீட்ல பேசிட்டு இருக்காங்க!. அதனால இந்த சந்தேகம் எல்லாம் அடுத்தடுத்து வருது டாக்டர்!!!.

பொதுவா சின்ன வயசுல மார்பில் வரக்கூடிய கட்டி, கேன்சர் கிடையாது. அதிகமான அளவு இந்த வயதில் வரக்கூடியது நார்த்திசுக்கட்டி ஃபைப்ரோ அடினோமா(fibroadenoma) , இந்த கட்டி உடைய தன்மை என்னன்னா இது திரும்ப வரலாம்.
இன்னொரு பிரச்சினை ஃபைப்ரோடெனோசிஸ் என்று சொல்லுவோம். அது மார்பில் உள்ள நார்திசுக்கள் கெட்டிப்பட்டு அதனால்தான் வருகிறது. அதுவும் கேன்சர் கிடையாது.

பெண்குயின் கார்னர் 11 : குழந்தையிலிருந்தே இதய பாதிப்பு இருந்தால் திருமணம் செய்துகொள்ளலாமா..? மருத்துவரின் பதில்

சில சமயம் நீர்க்கட்டிகள் கூட மார்பகத்தில் வரலாம். இன்னும் சில சமயங்களில் கிருமித் தொற்றினால் சலம் கோர்த்து கட்டிகள் மார்பில் உருவாகலாம்.

இந்த கட்டிகள் எதுவுமே பிறவிக் குறைபாடு கிடையாது. ஹார்மோன்களால் மார்பகங்களில் உண்டாகக்கூடிய மாற்றங்களினால் ஏற்படக்கூடிய கட்டிகள் தான்.



பொதுவா இந்த மாதிரி கட்டிகளுக்கு ஆபரேஷன் பண்றதால , உங்களுக்கு கர்ப்பகாலத்திலோ, குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் போதோ எந்த பிரச்சினையும் வராது. பால் சுரப்பும் , மற்ற தாய்மார்கள் போல நார்மலா தான் இருக்கும். இந்த மாதிரி கட்டி வந்ததுனால அவங்களுக்கு கேன்சர் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகாது. அதனால் இந்த மார்பு கட்டி ஆப்ரேஷன் பண்ணது பத்தி ஒன்னும் கவலைப் படவேண்டாம் நினைக்கிறேன்.

சுஜிதாவை பரிசோதித்ததில் வேறு எந்த கட்டியும் தென்படவில்லை. "உங்கள் மார்பில் கட்டி ஆப்ரேஷன் செய்ததையே முழுமையாக நீங்கள் மறந்து விடலாம். உங்கள் மண வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையோடும் துவங்குவதற்கு என் வாழ்த்துகள்" என்று கூறினேன்.

சுஜிதாவின் முகத்தில் தெரிந்த நிம்மதியின் அடையாளம் நிறைவைத் தந்தது.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Breast changes, Breast Operation, பெண்குயின் கார்னர்

அடுத்த செய்தி