உச்சி முதல் பாதம் வரை..! கற்பூரம் வீட்டில் இருந்தால் எவ்வளவு நன்மை தெரியுமா..?

சிறு பூச்சிக் கடி என்றாலும் கற்பூரத்தை குழைத்துத் தடவலாம்.

உச்சி முதல் பாதம் வரை..! கற்பூரம் வீட்டில் இருந்தால் எவ்வளவு நன்மை தெரியுமா..?
கற்பூரம்
  • Share this:
பலரும் கற்பூரத்தை வீட்டில் கடவுளை பூஜிக்க மட்டுமே பயன்படுத்துவார்கள். ஆனால் அதில் பல வகையான பயன்பாடுகள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா..?

அதற்கு முன் : கற்பூரம் பலருக்கும் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லமுடியாது. எனவே பயன்படுத்தும்முன் மணிக்கட்டு பகுதியில் தேய்த்துவிட்டு எந்த அலர்ஜியும் இல்லை என்றால் பயன்படுத்தலாம்.

கைகள், உடலில் ஏதேனும் நமச்சல், எரிச்சல், எரியும் உணர்வு இருந்தால் அந்த இடத்தில் கற்பூரத்தை தேய்த்தால் ஜில்லென இருக்கும். எரிச்சல் நீங்கும்.


கையில் தொற்றுகளால் ஏதேனும் பாக்டீரியா, பூஞ்சைகளின் வளர்ச்சி இருக்கிறதெனில், ஆணி, நகசுத்தி என இருந்தால் அந்த இடத்தில் கற்பூரத்தை தேங்காய் எண்ணெய்யில் பேஸ்ட் போல் குழைத்து தடவினால் குணமாகலாம்.சிறு பூச்சிக் கடி என்றாலும் கற்பூரத்தை குழைத்துத் தடவலாம்.கால்களில் வெடிப்பு என்றாலும் அதை சரிசெய்ய வெதுவெதுப்பான தண்ணீரில் கற்பூரத்தைக் கரைத்து காலை 15 நிமிடங்கள் ஊற வைத்து எடுங்கள். பின் கால்களில் தேங்காய் எண்ணெய் அல்லது வேஸ்லின் தடவுங்கள். இதை வாரம் ஒரு முறை செய்து வர வெடிப்பு நீங்கலாம்.

தலையில் பேன் இருந்தாலும் கற்பூரத்தை தேய்க்க பேன் இறந்துவிடும். தேங்காய் எண்ணெயி கலந்து தேய்க்க தலைமுடி வளர்ச்சி அடர்த்தியாகும். முடி கொட்டுதல் இருக்காது.

முகத்தில் முகப்பருக்கள், பருக்களின் எரிச்சல், பருக்களின் கீரல்கள் இருந்தால் கற்பூர எண்ணெய் வாங்கி தடவலாம் அல்லது கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தடவலாம்.


பார்க்க :

 

 

 

 

 

 
First published: April 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading