ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பெரிய அளவில் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!

பெரிய அளவில் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!

ஒமைக்ரான் வைரஸ்

ஒமைக்ரான் வைரஸ்

இது மற்ற வகை கொரோனாவை போன்று மக்களை பாதித்து அவர்களின் உயிர்களை பறித்து விடுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிபடைத்து வருகிறது. இதனால் பல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில மாதங்களாக தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து வந்தது. அதற்குள் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று உருமாறி உள்ளது. இதை ஒமைக்ரான் வகை வைரஸ் என்று கூறுகின்றனர். கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று மேலும் வீரியம் அடைய கூடியதாக மாறலாம். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு டெல்டா வகை கொரோனா வைரஸ் தான்.

இந்த டெல்டா வைரஸ் அதிக பாதிப்புகளை கடந்த காலங்களில் ஏற்படுத்தி சென்றது. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் இது விரைவாக பரவ கூடிய தன்மையை கொண்டிருந்தது. ஆனால், தற்போது உருவாகி உள்ள இந்த ஓமைக்ரான் வைரஸ் டெல்டா வகையை காட்டிலும் பெரிய அளவில் பரவி வருகிறது. மிக குறைந்த நாட்களிலேயே உலக அளவில் பரவி, மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதை சாதாரணமாக எடுத்துகொள்ள கூடாது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இந்நிலையில் தொற்று பரவல் பற்றி உலக சுகாதார அமைப்பின் தலைமை பொறுப்பாளரான டெட்ரோஸ் அந்தனோம் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, கடந்த ஆண்டு அதிக மக்களை பாதித்த டெல்டா வகையை விடவும் இந்த ஒமைக்ரான் வகை கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. எனவே இதனால் அதிக மக்கள் மருத்துவமனைகளில் அனுமதித்த வண்ணம் உள்ளனர். தடுப்பூசி போட்டு கொண்டோருக்கு இது குறைவான அறிகுறிகளை தருகிறது என்பதற்காக, இதனால் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை என்று சொல்லிவிட முடியாது என டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இது மற்ற வகை கொரோனாவை போன்று மக்களை பாதித்து அவர்களின் உயிர்களை பறித்து விடுகிறது. கடந்த வாரங்களில் சுமார் 9.5 மில்லியன் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் 71 சதவீதம் அளவிற்கு பாதிப்புகள் அதிகரித்துள்ளது என டெட்ரோஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்விற்கு பிறகு கொரோனாவால் பாதிகப்பட்டுள்ளோரை பற்றிய விவரங்களை இன்னும் கணக்கிடவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டில் 40 சதவீத மக்கள் தடுப்பூசி போட்டு கொள்ளப்பட வேண்டும் என்று முன்னதாக அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அந்த இலக்கை இதுவரை எட்டவில்லை. எனவே தடுப்பூசி போட்டு கொள்ளாதோர் அவசியம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். கொரோனாவை எதிர்கொள்ள இது ஒன்று மட்டுமே நம்மிடம் இருக்க கூடிய முக்கியமான ஆயுதமாக உள்ளது.

இதை பின்பற்றினால் மூன்று மாதங்களுக்குள் கோவிட் பரவல் நீங்கி விடும் - புற்றுநோயியல் நிபுணர்கள் கருத்து

மேலும் இந்த ஒமைக்ரான் வைரசுடன் எல்லாம் முடிந்து போய்விடுவது போன்று எண்ண வேண்டாம். இது போன்று மேலும் பல கொரோனா வைரஸ் உருமாறி வர கூடும். எனவே இவற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முகக்கவசம் முக்கிய ஆயுதமாகும் என்று டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். இந்த 2022 ஆம் ஆண்டும் இப்படி கொரோனாவின் பாதிப்புடன் தொடங்கி உள்ளது தான் நம் அனைவருக்கும் பெரும் துயரமாக உள்ளது.

Published by:Sivaranjani E
First published:

Tags: CoronaVirus, Omicron, WHO