ஏன் கர்ப்பிணிப் பெண்கள் காஃபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது..? விளக்கும் ஆய்வு

ஏன் கர்ப்பிணிப் பெண்கள் காஃபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது..? விளக்கும் ஆய்வு

காஃபி | Coffee

காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கும் கர்ப்பிணிகளின் கருவில் வளரும் குழந்தை அளவிலும், உடல் எடையிலும் குறைவாகப் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.

  • Share this:
    கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமான கஃபைன் உட்கொள்வது கருவில் உள்ள குழந்தையையும் பாதிக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு இரண்டு கப்பிற்கு மேல் காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கும் கர்ப்பிணிகளின் கருவில் வளரும் குழந்தை அளவிலும், உடல் எடையிலும் குறைவாகப் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.

    அப்படி குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஒபேசிடி, இதய பாதிப்பு , நீரிழிவு நோய் போன்றவை உண்டாகலாம் என்றும் எச்சரிக்கிறது. இந்த ஆய்வை ஜாமா நெட்ஒர்க் ஓப்பன் (JAMA Network Open)வெளியிட்டுள்ளது. 12 கிளினிக்குகளில் 8 முதல் 13 வாரங்கள் செக்அப் செய்து வரும் 2000 மேற்பட்ட கர்ப்பிணிகளின் உடல் நலனை பரிசோதனை செய்தும், கண்காணித்தும் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

    அதாவது அவர்களின் இரத்த மாதிரிகளை சோதனை செய்து அதில் கஃபைன் மற்றும் பராக்ஸான்டைன் ஆகிய மூலக்கூறுகளின் கலவை செயல்பாடுகளை கண்காணித்ததிலிருந்து இந்த ஆய்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



    அதில், கர்ப்பிணிகள் அதிக இரத்த அளவைக் கொண்டிருந்தாலும் கஃபைன் அதிகம் பருகியதால் பிரசவத்தின்போது பிறந்த குழந்தைகள் சராசரியாக 84 கிராம் எடையும் (சுமார் மூன்று அவுன்ஸ்), 0.44 சென்டிமீட்டர் குறைவாக உடல் நீளம் (சுமார் .17 அங்குலங்கள்), மற்றும் தலை சுற்றளவு 0.28 சென்டிமீட்டர் சிறியதுமாக (சுமார் 0.11 அங்குலங்கள்) பிறந்துள்ளது.

    வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா? தெரிந்துகொள்ளுங்கள்..!

    பெண்கள் குடித்த காஃபி மதிப்பீடுகளின் அடிப்படையில், ஒரு நாளைக்கு சுமார் 50 மில்லிகிராம் காஃபி உட்கொண்ட பெண்களின் (அரை கப் காபிக்கு சமம்) குழந்தைகள் 66 கிராம் (சுமார் 2.3 அவுன்ஸ்) இருந்தனர். இது காஃபி குடிக்காத பெண்களுக்கு பிறந்த குழந்தைகளை ஒப்பிடுகையில் விட எடை இலகுவாக இருந்தது. இதேபோல், கஃபைன் நுகர்வோருக்கு பிறந்த குழந்தைகளுக்கும் தொடை சுற்றளவு 0.32 சென்டிமீட்டர் சிறியதாக (சுமார் 0.13 அங்குலங்கள்) இருந்தது.



    ஆய்வின் இறுதியில், கஃபைன் கருப்பை மற்றும் நஞ்சுக்கொடியிலுள்ள இரத்த நாளங்களை கட்டுப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இது கருவுக்கு இரத்த விநியோகத்தை குறைக்கும் மற்றும் வளர்ச்சியைத் தடுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேபோல், கஃபைன் கரு அழுத்த ஹார்மோன்களை சீர்குலைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர், குழந்தை பிறப்புக்குப் பிறகு விரைவான எடை அதிகரிப்பதற்கும், பிற்காலத்தில் உடல் பருமன், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கும் ஆபத்து அதிகம் என எச்சரிக்கிறது. எனவே கர்ப்பிணிப் பெண்கள் காஃபி அருந்துவதை தவிர்ப்பதே நல்லது என கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

     

     
    Published by:Sivaranjani E
    First published: