ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஒரு முறை சிசேரியன் செய்தால் அடுத்த குழந்தையும் சிசேரியன் தானா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

ஒரு முறை சிசேரியன் செய்தால் அடுத்த குழந்தையும் சிசேரியன் தானா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

சிசேரியன்

சிசேரியன்

சிசேரியன் வழியாக குழந்தை பெற்ற பிறகு, இரண்டாவது குழந்தையை இயற்கையாக வஜைனல் டெலிவரியாக பெற விரும்பும் பெண்களுக்கு, அது சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முறையான கவுன்சிலிங் தேவை

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

பெரும்பாலான கர்ப்பிணிகள் தங்களின் முதல் குழந்தை சுகப்பிரவசத்தில் பெற வேண்டும் அறுவை சிகிச்சை தவிர்க்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். எவ்வளவோ முயற்சி செய்தாலும் எதிர்பாராமல் ஏற்படும் சிக்கல்களால் ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதே நேரத்தில், தற்போது சிசேரியன் செய்து குழந்தையை பெற்றெடுப்பது மிகவும் சகஜமாகி விட்டது.

அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுப்பது சிசேரியன் அல்லது சி-செக்ஷன் என்று கூறப்படுகிறது. முதல் குழந்தை சிசேரியன் மூலம் பிறந்தால், இரண்டாவது குழந்தையை நார்மல் டெலிவரியில் பெற முடியாது, சிசேரியன் செய்தால் வாழ்நாள் முழுவதும் வலி இருக்கும் என்று பல்வேறு போலியான விஷயங்கள் நம்பப்படுகிறது. சிசேரியன் பற்றிய உண்மையான தகவல் இங்கே.

சிசேரியன் மற்றும் நார்மல் டெலிவரி - இரண்டிலுமே குறிப்பிட்ட ஆபத்து உள்ளது :

பொதுவாகவே கர்ப்பிணி பெண்களுக்கு டெலிவரி நேரத்தில் ஒரு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிசேரியன் டெலிவரியில் மட்டும் தான் ஆபத்து அதிகம் டெலிவரியில் ஆபத்து கிடையாது என்று கூற முடியாது.

நார்மல் டெலிவரியில் உள்ள ஆபத்துகள் :

பிரசவ வலி தொடங்கிய பிறகு, குழந்தை பிறக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக் கூற முடியாது. ஒரு சில பெண்களுக்கு சில மணி நேரங்களிலேயே குழந்தை பிறந்து விடும். சில பெண்களுக்கு ஓரிரு நாட்கள் கூட ஆகலாம். எனவே குழந்தை டெலிவரி ஆகும் நேரம் முழுவதும் கர்ப்பிணிகளுக்கு வலி அதிகரித்துக்கொண்டே இருக்கும். சிலரால் வலியை தாங்கிக் கொள்ள முடியாது. அது மட்டுமின்றி இந்த காலகட்டத்தில் ரத்த அழுத்தம் அதிகரித்து உடல்நிலை மோசமடையும் ஆபத்து உள்ளது.

நார்மல் டெலிவரி எளிதானதல்ல, ஆனால் எளிதாக்கலாம் :

நார்மல் டெலிவரியில் ஏற்படும் ஆபத்துகளை குறைப்பதற்காக அல்லது அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக பல பெண்கள் சிசேரியன் செய்து கொள்ள தற்போது விருப்பப்படுகிறார்கள். ஆனால், எல்லாமே சிசேரியன் டெலிவரி தான் செய்து கொள்ள வேண்டுமா என்றால் இல்லை என்று கூறலாம். பிரசவ நேரத்தில் ஏற்படும் வலியை எப்படி குறைப்பது, மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி ஆகியவற்றை உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிந்துகொண்டு நார்மல் டெலிவரியை நீங்கள் மிகவும் எளிதாக்கலாம்.

கர்ப்பப் பரிசோதனை கிட்டை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தினால் ரிசல்ட் கிடைக்குமா..?

ஒருமுறை சிசேரியன் செய்தால், அடுத்த குழந்தையும் பெரும்பாலும் சிசேரியன் தான் செய்ய வேண்டும் :

சிசேரியன் வழியாக குழந்தை பெற்ற பிறகு, இரண்டாவது குழந்தையை இயற்கையாக வஜைனல் டெலிவரியாக பெற விரும்பும் பெண்களுக்கு, அது சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முறையான கவுன்சிலிங் தேவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், சிசெக்ஷனுக்கு பிறகான நார்மல் டெலிவரி அதிக ஆபத்தைக் கொண்டுள்ளது.

இது VBAC என்று கூறப்படுகிறது. கர்ப்பம் மற்றும் முதல் குழந்தையின் பிரசவ நேரத்தில் யூட்ரின் பாதிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக யூட்ரின் பாதிப்பால் ஏற்பட்டிருக்கும் ஸ்கார் டிஷ்யூவால் கர்ப்பப்பையில் இருந்து தாயின் வயிற்று பகுதிக்குள் குழந்தை ஸ்லிப் ஆகும் அபாயத்தை ஏற்படுத்தும். இதனால் இன்டெர்னல் ப்ளீடிங் எனப்படும் உள்ளுறுப்பில் ரத்தப்போக்கு ஏற்பட்டு தாய் மற்றும் குழந்தை இருவரின் உயிருக்கே ஆபத்து உண்டாகும்.

ஆனால், இரண்டாம் குழந்தையை அதிக ரிஸ்க் உள்ள மகப்பேறு யூனிட்டில் நார்மல் டெலிவரியில் பெற முயற்சி செய்கிறார்கள்.

ஒன்றுக்கும் மேற்பட்ட சிசேரியன்கள் என்றால் ஆபத்து அல்ல :

சிசேரியன் என்பது அறுவை சிகிச்சை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உடலில் எந்தப் பகுதியில் எந்த விதமான அறுவை சிகிச்சையை மேற்கொண்டாலும் அதற்கு உரிய ரிஸ்க்குகளை எதிர்கொள்ள வேண்டும். காயம் ஆறுவது, தொற்று ஏற்படுவது, அருகில் இருக்கும் உறுப்புகளுக்கு பாதிப்பு உள்ளிட்ட ஆபத்துகள் சிசேரியனிலும் உள்ளது.

கர்ப்ப காலத்தில் வலது அல்லது இடது... எந்த பக்கம் திரும்பி படுக்க வேண்டும்..? மருத்துவர் விளக்கம்

சி-செக்ஷன் செய்தால் நீண்ட காலத்துக்கு முதுகு வலி இருக்கும் :

இது மிகவும் தவறான கருத்து. தண்டுவடத்தில் அனஸ்தீசியா செலுத்தப்படுவதால், சில காலத்துக்கு வலியால் அவஸ்தை பட வேண்டும் என்று கூறப்படுகிறது. சரியான உடற்பயிற்சி, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மூலம், வலியை எளிதாக தடுக்கலாம்.

அதிக ரிஸ்க் உள்ள கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் தான் சரியான தேர்வு :

ஒரு சில பெண்களுக்கு, மருத்துவ ரீதியான காரணங்கள் உட்பட ஒரு சில காரணங்களுக்காக நார்மல் டெலிவரியை தவிர்த்து விடுவது தான் பாதுகாப்பானது.

Published by:Sivaranjani E
First published:

Tags: C- Section, Pregnancy care