சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆபத்து இருக்கிறதா...? என்ன சொல்கிறது ஆய்வு...?

சிசேரியன் செய்து குழந்தைப் பெற்றுக்கொள்வதால் குழந்தைக்கும், அந்த தாய்க்கும் எந்த ஆபத்தும் வராது என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் எங்களுக்கு இதுவரை எட்டப்படவில்லை என்கிறது ஆய்வு.

news18
Updated: August 31, 2019, 3:57 PM IST
சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆபத்து இருக்கிறதா...? என்ன சொல்கிறது ஆய்வு...?
சிசேரியன் செய்யப்பட்ட குழந்தை
news18
Updated: August 31, 2019, 3:57 PM IST
மொத்தம் 60 ஆய்வுகளை மேற்கொண்டு 19 நாடுகளில் பிறந்த 20 மில்லியன் குழந்தைகளின் ஆய்வறிக்கைகளை பரிசோதித்த பின்னரே இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆய்வில் சிசேரியன் அதாவது அறுவை சிகிச்சை செய்து பிறக்கும் குழந்தைகளுக்கு 33 சதவீதம் ஆட்டிசம் தாக்கும் ஆபத்தும் 17 சதவீதம் கவனக்குறைவு கோளாறு ஏற்படும் அபாயமும் அதிக அளவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வானது ஸ்வீடன் நாட்டின் கரோலின்ஸ்கா மையத்தால் நடத்தப்பட்டுள்ளது.


இந்த பாதிப்பானது இயற்கை பிரசவத்தை எதிர்கொள்ளாத குழந்தைகள் அந்த அனுபவத்தை பெறாததும், அதோடு கருப்பை வாயில் உள்ள பாக்டீரியாக்களால் பாதிக்கப்படாததும் மூளையின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமன்றி கடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் சிசேரியன் என்பது மூன்று மடங்காக அதிகரித்திருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.Loading...

சிசேரியன் பிறப்புகள் உலகம் முழுவதும் 10 முதல் 15 சதவீதமாக இருந்தது. இந்த சிசேரியன்களுக்கு பெரும்பான்மையான காரணங்கள் உடல் உழைப்பு இல்லாமை, உணவு சரியாக உண்ணாமை, உடல் மெலிந்த நிலை போன்றைவே இருந்ததாக டியான்யாங் ஸாங் குறிப்பிடுகிறார். இவர் பி.எச்டி முடித்த ஆய்வாளராவார்.

மேலும் அவர் “ சிசேரியன் செய்து குழந்தைப் பெற்றுக்கொள்வதால் குழந்தைக்கும், அந்த தாய்க்கும் எந்த ஆபத்தும் வராது என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் எங்களுக்கு இதுவரை எட்டப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி இன்றைய பெண்கள் தாங்களாகவே சிசேரியன் செய்யும்படி முறையிடுகின்றனர். குடும்பம், ஆன்மீகக் காரணங்கள், மற்றவர்களின் பிரசவத்தைப் பார்த்து பயம், வலியை தாங்க இயலாமை என இதுபோன்ற காரணங்களால் சிசேரியனைக் கேட்பதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றுமே செய்ய முடியாது என்ற பட்சத்தில் மட்டுமே இந்த அறுவை சிகிச்சைகள் உதவுமே தவிர வாழ்க்கையை நோயின்றி காப்பாற்ற அல்ல என்கிறது ஆய்வு.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...