• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • 2050ல் உலகில் 6 பேரில் ஒருவர் 65 வயதை கடந்தவராக இருப்பார் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

2050ல் உலகில் 6 பேரில் ஒருவர் 65 வயதை கடந்தவராக இருப்பார் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Old aged people

Old aged people

குழந்தைகளை விடவும் அதிக வயதானவர்களை எதிர் காலத்தில் கொண்டிருப்போம் என்பதாகும். வயதான காலத்திலும் ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதே நிம்மதியான உணர்வை நமக்கு ஏற்படுத்தும்.

  • Share this:
நம் வாழ்க்கை முறை மாறிவரும் சூழலில் நமக்கு உண்டாகக் கூடிய உடல்நல குறைபாடுகள் அதிகரித்தே வருகின்றன. நமது தாத்தா பாட்டிகளுக்கு 70 வயதுக்கு மேல் தான் சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்ற நீண்ட நாள் பாதிப்புகள் தரும் நோய்கள் வந்தன. ஆனால், இன்றைய தலைமுறையினருக்கு 30 வயதை தாண்டும்போதே எண்ணற்ற உடல்நல பாதிப்புகள் உண்டாகின்றன.

இந்தநிலையில் வயதானவர்களின் எண்ணிக்கை உலகளவில் 2050 ஆம் ஆண்டில் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அந்த வகையில் 2050 ஆண்டில் உலகில் 6 பேரில் ஒருவர் 65 வயதை கடந்தவராக இருப்பார் என இந்த அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இதன் அர்த்தம் குழந்தைகளை விடவும் அதிக வயதானவர்களை எதிர் காலத்தில் கொண்டிருப்போம் என்பதாகும். வயதான காலத்திலும் ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதே நிம்மதியான உணர்வை நமக்கு ஏற்படுத்தும்.

அந்த வகையில் வயதானபோதும் ஆரோக்கியமான சூழலை உண்டாக்குவது என்பது நோய்கள் இல்லாமலே வாழ்வது கிடையாது. நீண்ட கால பாதிப்புகளை தரும் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை இல்லாமல் வாழ்வதை குறிக்கிறது. மேலும் குறைந்த அளவிலான உடல் உறுப்புகளின் பாதிப்புகள், நீண்ட ஆயுள் வரை வாழ்தல், நினைவுத்திறன் குறைபாடு அதிகமாக இல்லாதிருத்தல் போன்ற முக்கிய ஆரோக்கிய நலன்களும் இதில் அடங்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Also read:  ச்சீ..ச்சீ.. 300க்கும் மேற்பட்ட பெண்களின் மார்பகங்களை தழுவியதாக பெருமை பேசி வசமாக மாட்டிக்கொண்ட இளைஞர்…

எனவே வாழ்க்கை முறையை மாற்றி வயதான காலத்திலும் ஆரோக்கியமான முறையில் வாழ, மருத்துவ நிபுணர்கள் சில முக்கிய அறிவுரைகளை வழங்குகின்றனர். அதில் ஒருவர் வயதான பிறகும் நல்ல ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள அவரின் சுற்றுசுழலும், நெருங்கிய உறவுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மேலும் மன அழுத்தம், ஞாபக சக்தி குறைபாடு போன்ற பாதிப்புகள் இல்லாமல் இருந்தால் ஒருவரால் வயதான பிறகும் நலமான வாழ்வை கொண்டு செல்ல முடியும் என கூறுகின்றனர்.

வயதானவர்கள்2


மேலும் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் டி, வைட்டமின் சி, வைட்டமின் பி9, ஜிங்க் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சை காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுகளை சரியான உணவு இடைவேளையில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை நலமான உடல் அமைப்பை வயதான காலத்திலும் உருவாக்க பெரிதும் உதவும். மேலும் தசைகளுக்கு வலுசேர்க்க தொடர்ச்சியான உடற்பயிற்சிகள் மிக அவசியம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இத்துடன் புரதசத்து மற்றும் கால்சியம் நிறைந்த பால் சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.

Also read:   வாட்ஸ்அப் ஆப்பில் தீபாவளி வாழ்த்து ஸ்டிக்கர்ஸ் அனுப்பலாம்- வழிமுறை இதோ..

வயதான காலத்தில் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ, வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செல்ல வேண்டும். உடலில் BMI எனப்படும் உடல் நிறை குறியீட்டு எண் 18-22 வரை மட்டுமே இருக்க வேண்டும். இது 23-க்கு மேல் இருந்தால் அது அதிக எடை கொண்டவர் என்பது அர்த்தம்.

நலமான வாழ்விற்கு உடல் நலம் மட்டும் முக்கியம் கிடையாது, மன நலனையும் நாம் எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும். வயதான காலத்தில் நிம்மதியான மனநிலையை பெற உங்களுக்கு பிடித்தவர்களுடனும், குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் நேரம் செலவிட வேண்டும். மேலும் பயணங்கள் செல்வது இதமான உணர்வை தரும்.

Also read:  அமெரிக்காவை சேர்ந்த விலை குறைந்த கோவிட் ‘தடுப்பூசி’ இந்தியாவில் சோதனை!

நோய்களின் பாதிப்புகள் அதிகம் இல்லாமல் வாழ சில முக்கியமான உணவு பழக்கத்தை நாம் கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக கார்போஹைடிரேட், சர்க்கரை, குளிர் பானங்கள், பேக்கரி உணவுகள், மைதா, வெள்ளை அரிசி போன்றவற்றை தவிர்ப்பது நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்றைய சூழலில் 40 வயதை கடந்த பிறகு ஒவ்வொரு கால இடைவேளையில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 50 வயதை கடந்தவர்கள் பெருங்குடல் பற்றிய பரிசோதனைகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக 45 வயதுக்கு பின் பெண்கள் மேமோகிராம் மற்றும் இடுப்பு சார்ந்த பரிசோதனைகளை 3 வருடத்துக்கு ஒரு முறை எடுத்துக்கொள்வது நல்லது. வயதான காலத்தில் நோய்கள் நம்மை தாக்காமல் இருக்க நிமோனியா, ஹெர்பெஸ் ஜெஸ்டர், இன்ப்ளூயன்சா போன்ற தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம்.

மேற்சொன்ன வழிமுறைகளை தவறாது பின்பற்றி வந்தால், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: