இரவு தூங்கும் முன் இப்படி கால் மசாஜ் செய்தால் நல்ல தூக்கம் வருமாம் - நிபுணரின் பரிந்துரை..!
இரவு தூங்கும் முன் இப்படி கால் மசாஜ் செய்தால் நல்ல தூக்கம் வருமாம் - நிபுணரின் பரிந்துரை..!
கால் மசாஜ்
ஜூஹி கபூர் இரவு நல்ல தூக்கத்தை பெற பட்டாம்பூச்சி யோகா நிலையை பரிந்துரைக்கிரார். இந்த நிலையில் உங்கள் கால்களை பட்டாம்பூச்சி நிலையில் வைக்கும்போது உடல் வலி, உடல் அழுத்தம் நீங்கி லேசாக உணர வைக்கிறது.
மன அழுத்தம் , பரபரப்பான வாழ்க்கை என எப்போதும் எதையாவது எண்ணிக்கொண்டிருக்கும் மனதிற்கு ஓய்வு வேண்டுமெனில் அது தூக்கத்தில் மட்டும்தான் சாத்தியம். ஆனால் அந்த நிம்மதியான தூக்கத்திற்காக இன்று பலரும் போராடி வருகின்றனர். அப்படி படுத்தவுடன் தூங்குவது வரம் என்று சொல்லும் அளவிற்கு தூக்கம் இன்று விலைமதிக்க முடியாத விஷயமாக மாறிவிட்டது. இனி அந்த கவலை வேண்டாம்... உங்களின் இந்த பிரச்சனையை போக்க யோகா நிபுணர் ஜூஹி கபூர் சில ஆலோசனைகளை பகிர்ந்துள்ளார். அவர் ஆழந்த தூக்கத்திற்கான யோகா நிலையையும் பரிந்துரைக்கிறார்.
ஜூஹி கபூர் இரவு நல்ல தூக்கத்தை பெற பட்டாம்பூச்சி யோகா நிலையை பரிந்துரைக்கிரார். இந்த நிலையில் உங்கள் கால்களை பட்டாம்பூச்சி நிலையில் வைக்கும்போது உடல் வலி, உடல் அழுத்தம் நீங்கி லேசாக உணர வைக்கிறது. அதோடு அலைப்பாயும் மனதை சாந்தப்படுத்தி ஒருநிலைப்படுத்துகிறது. இதனால் சீக்கிரமே உங்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும் என்கிறார். சரி எப்படி இந்த பட்டாம்பூச்சி நிலையை செய்வது என்று பார்க்கலாம்.
கால் பாதங்களை நன்கு அழுத்தி மசாஜ் செய்ய மனம் ஒருநிலைப்படுவதை உணர்வீர்கள்.
இந்த மசாஜை தூங்க செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு செய்யுங்கள். மசாஜ் செய்த பின்பு டிவி, செல்ஃபோன் என எந்த திரைகளையும் பார்க்காதீர்கள். படுக்கும் அறையை இருளாகவும். குளுமையாகவும் வைத்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற சூழலில் தூங்க முயற்சிக்கும்போது நிச்சயம் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.