ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இதையெல்லாம் நம்பாதீங்க... சிறுநீர் பாதைத் தொற்று பற்றி நிலவி வரும் தவறான கருத்துகள்..!

இதையெல்லாம் நம்பாதீங்க... சிறுநீர் பாதைத் தொற்று பற்றி நிலவி வரும் தவறான கருத்துகள்..!

யூரினரி டிராக்ட் இன்ஃபெக்ஷன்  ( urinary track infection ) சிறுநீர் பாதை தொற்று

யூரினரி டிராக்ட் இன்ஃபெக்ஷன் ( urinary track infection ) சிறுநீர் பாதை தொற்று

உடல் அமைப்பு ரீதியாக, பெண்களின் யூரினரி சிஸ்டம், பெண்ணுறுப்பு ஆகியவை உடலுக்குள், உடலின் ஒரு பகுதியாக இருப்பதால் ஆண்களை விட பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

யூரினரி டிராக்ட் இன்ஃபெக்ஷன்  ( urinary track infection ) என்று கூறப்படும் சிறுநீர் பாதை தொற்று குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களையும் பாதிக்கும். குறிப்பாக, பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்றால் அசௌகரியம் ஏற்படுவது மட்டுமல்லாமல் இது தீவிரமான பாதிப்பையும் உண்டாக்கும். சிறுநீர் பாதை தொற்று என்பது யூரினரி சிஸ்டம் என்று கூறப்படும் கிட்னி சிறுநீர்ப்பை சிறுநீர்க்குழாய் ஆகியவை இருக்கும் பாகங்களில் ஏற்படும் தொற்றிக் குறிக்கிறது.

இந்த காரணத்தால் யூடிஐ பற்றி பல விதமான தவறான கருத்துக்களும் கட்டுக்கதைகளும் கூறப்பட்டு வருகின்றன. சிறுநீர் பாதை நீங்கள் நிலவி வரும் இந்த விஷயங்கள் அனைத்துமே கட்டுக்கதைகள்தான்.

பெண்ணுறுப்பை பல வித பொருட்கள் பயன்படுத்தி சுத்தம் செய்தால் UTI வராது

பிறப்பு உறுப்புப் பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். இது தொற்று வராமல் தடுப்பதற்கு ஓரளவுக்கு உதவும். ஆனால், பிறப்புறுப்புப் பகுதியை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தம் செய்வது, அல்லது கிளென்சிங் பொருட்களை பயன்படுத்தி அடிக்கடி சுத்தம் செய்து கொண்டிருப்பது அந்த பகுதியில் இருக்கும் இயற்கையாக pH சமநிலையை பாதிக்கிறது. குறிப்பாக கிளென்சிங் வைப்ஸ், ஃபோம், நறுமண வாஷ் என்று எதையுமே பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் போல வெதுவெதுப்பான நீரால் சோப் மற்றும் தண்ணீர் பயன்படுத்தி சுத்தம் செய்தால் போதுமானது. ஆனால், இவையெல்லாம் செய்தால், தொற்று ஏற்பாடாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

சிறுநீரின் வித்தியாசமான வாடை மற்றும் அடர் நிறத்தில் இருப்பது தொற்றைக் குறிக்கிறது

பொதுவாகவே, சிறுநீர் வழக்கத்தைவிட வேறுவிதமான நிறத்தில் அல்லது வாடை வீசும் பொழுது உடலில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை குறிக்கும். ஆனால் சிறுநீரின் வாடை மட்டுமே, ஒரு பெண்ணுக்கு சிறுநீர் தொற்று இருக்கிறது என்பதை கண்டறிய உதவும் துல்லியமான முறை கிடையாது. ஏனென்றால் சிறுநீரின் வாடை என்பது நீங்கள் என்ன உணவு சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதின் அளவைப் பொறுத்து மாறுபடும். அதேபோல சிறுநீரின் நிறம் அடர் நிறத்தில் இருப்பது அல்லது வழக்கத்தை விட கிளவுடியாக இருப்பது ஆகிய அனைத்துமே உங்களுடைய உணவுகளைச் சார்ந்தே அமையும். இதை வைத்துக்கொண்டு ஒருவருக்கு சிறுநீர் தொற்று இருப்பதை உறுதி செய்ய முடியாது. சிறுநீர் பாதை தொற்று இருந்தால் சிறுநீர் வெளியேற்றும் பொழுது வலிக்கும், எரிச்சலாக இருக்கும் மற்றும் சிறுநீர் தவிர்த்து திரவ டிஸ்சார்ஜ் காணப்படும். அதுமட்டுமில்லாமல் சிறுநீரில் ரத்தமும் வெளியேறும்.

Also Read : சளி , இருமல் பிரச்சனைகளிலிருந்து நுரையீரலை பாதுகாக்கும் வழிகள்..!

சிறுநீர் வெளியேறும் வலி, அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம் ஆகியவை இருந்தால் அது சிறுநீர்பாதை தொற்று தான்

சிறுநீர் பாதை தொற்று என்பதற்கு குறிப்பிட்ட சில அறிகுறிகள் இருந்தாலும் அந்த அறிகுறிகள் வேறு சில நோய்களையும் குறிக்கிறது. எனவே, சிறுநீர் வெளியேற்றும் போது ஏற்படும் வலி, எரிச்சலான உணர்வு, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறுநீரில் ரத்தக் கசிவு ஆகியவை வேறு சில நோய்களின் அறிகுறிகளாகவும் இருக்கலாம், குறிப்பாக, பாலியல் தொற்று நோயின் அறிகுறியாகவும் இவை இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பெண்களுக்கு மட்டுமே சிறுநீர் பாதை தொற்று ஏற்படும்

உடல் அமைப்பு ரீதியாக, பெண்களின் யூரினரி சிஸ்டம், பெண்ணுறுப்பு ஆகியவை உடலுக்குள், உடலின் ஒரு பகுதியாக இருப்பதால் ஆண்களை விட பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கிறது. அதிக எண்ணிக்கையிலும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பெண்களுக்கு மட்டுமே சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் ஆண்களுக்கு ஏற்படாது என்று கிடையாது. ஆண்கள் மட்டுமல்லாமல் வேறு பாலினத்தை சேர்ந்தவர்களும் கூட சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் சாத்தியம் இருக்கின்றன. சில நேரங்களில் கர்ப்பிணிகள், இளம் குழந்தைகள், சிறுவர்களுக்கு கூட தொற்று ஏற்படும்.

Also Read : 30 வயதைத் தாண்டிய பெண்கள் மார்பக புற்றுநோயிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி?

பாலியல் உறவில் அதிகம் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே சிறுநீர் தொற்று ஏற்படும்

இன்டர்கோர்ஸ் என்று சொல்லப்படும் உடலுறவு கொள்பவர்களுக்கு, அடிக்கடி பாலியல் உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்படக்கூடிய அபாயம் அதிகம். ஆனால், இதனால் மட்டும் தன ஒரு நபருக்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்படும், மற்றவர்களுக்கெல்லாம் ஏற்படாது என்பது கட்டுக்கதை.

சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்டால் சரியாகாது

ஏற்கனவே கூறியுள்ளது போல சிறுநீர் பாதை தொற்றுக்கு என்று குறிப்பிட்ட அறிகுறிகள் கிடையாது. அந்த அறிகுறிகள் வேறு சில நோய்களுக்கும் குறைபாடுகளுக்கும் பொருந்தும். எனவே பல பெண்களுக்கும், சிறுநீர் பாதை தொற்று தான் ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிந்து கொள்வதற்கு முன்னயே அது சரியாகி விடும். குறிப்பாக 25% - 45% பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்றுக்கு எந்தவிதமான மருந்துகளும் இல்லாமல் அது தானாகவே சரியாகி விட்டிருக்கிறது. ஒரு சிலருக்கு தொற்று தீவிரமாக ஏற்படும் பொழுது அல்லது அடிக்கடி சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் போது உடனடியாக மருத்துவரை சந்திப்பது மிக மிக அவசியம்.

பழச்சாறுகள் அல்லது குறிப்பிட்ட பழச்சாறு குடித்தால் தொற்று ஏற்படாது

அதிக திரவங்களை குடிக்க வேண்டும், நிறைய தண்ணீர், ஆரோக்கியமான பானங்கள் ஆகியவற்றை குடிக்கவேண்டும் என்று கூறப்படுவதுண்டு. ஒரு சில உணவுகளை சாப்பிட்டால் சிறுநீர் பாதை தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும் என்று பலரும் கூறி வருகின்றனர். அதில் கிரான்பெர்ரி ஜூசும் ஒன்று. அதிக பழச்சாறுகள் மற்றும் குறிப்பாக அடிக்கடி கிரான்பெர்ரி ஜூஸ் குடித்தால் சிறுநீர் பாதை தொற்று ஏற்படாது என்று பலரும் நம்பி வருகின்றனர். இதைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது, கிரான்பெர்ரி ஜூஸ் ஆரோக்கியமானதாக இருந்தாலும், சிறுநீர் பாதை தொற்றை தடுப்பதில் எந்தவிதமான பங்கும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Urinary Tract Infection, UTI