Home /News /lifestyle /

கார்போஹைட்ரேட் உணவுகள் உண்மையிலேயே உடல் எடையை அதிகரிக்குமா..? தெரிந்துகொள்ளுங்கள்

கார்போஹைட்ரேட் உணவுகள் உண்மையிலேயே உடல் எடையை அதிகரிக்குமா..? தெரிந்துகொள்ளுங்கள்

கார்போஹைட்ரேட் உணவுகள்

கார்போஹைட்ரேட் உணவுகள்

இந்தியர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 282 கிராம் கார்போஹைட்ரேட்ஸ் சாப்பிடலாம். ஆனால் இது நபருக்கு நபர் வேறுபாடும் மற்றும் வயதும் முக்கிய பங்கு வகிக்கிறது.

கார்போஹைட்ரேட்ஸ் சாப்பிடுவது பற்றி நிறைய தவறான கருத்துக்கள் மற்றும் கட்டுக்கதைகள் பொதுவாக மக்கள் மத்தியில் இருந்து வருகின்றன. ஆனால் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகள் ஆரோக்கியமான உணவின் முக்கிய பகுதியாகும்.

கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு தேவையான குளுக்கோஸை வழங்குகின்றன. மேலும் மூளை, சிறுநீரகங்கள், இதய தசைகள் மற்றும் மத்திய நரம்பு மண்டலத்திற்கு எரிபொருளாக உதவுகின்றன. இருப்பினும் கார்போஹைட்ரேட் எடுத்து கொள்வது குறித்து நிறைய கட்டுக்கதைகள் பல ஆண்டுகளாகவே உலா வருகின்றன. இதில் முக்கியமான ஒரு கட்டுக்கதை கார்போஹைட்ரேட்டுகள் சாப்பிட்டால்உடல் எடையை அதிகரிக்கும் என்பது தான். இதன் மூலம் கார்போஹைட்ரேட்டுகளை எப்போதுமே பொது எதிரியாக நினைத்து கொள்கின்றன உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள். குறைந்த கார்ப் உணவை நம்புவது நமது இளைய தலைமுறையினரிடம் வளர்ந்து வரும் போக்காக உள்ளது.

எனினும் கார்போஹைட்ரேட்டுகள் உடல் எடையை அதிகரிக்காது, ஏனெனில் அவை புரதத்தின் அதே அளவு ஆற்றலை கொண்டுள்ளன. பால், பழங்கள் மற்றும் காய்கறிகளில் இயற்கையாகவே கார்போஹைட்ரேட்ஸ் இருப்பது பலருக்கு தெரியாது. கார்போஹைட்ரேட்டுகள் சாதாரண உடல் செயல்பாட்டிற்கு தேவையான கலோரிகளில் 45 முதல் 65% வரை வழங்குகின்றன. இதில் குறைபாடு ஏற்பட்டால் தீவிர சோர்வு, மந்தம் மற்றும் ஆற்றல் பற்றாக்குறை ஏற்படும். நல்ல கார்போஹைட்ரேட்டுகள் தரும் நன்மைகளுக்குப் பதிலாக கெட்ட கார்போஹைட்ரேட்டுகளை பற்றி தான் நிறைய பேர் தெரிந்து வைத்திருக்கிறார்கள். காருக்கு எரிபொருள் தேவைப்படுவது போலவே நம் உடலுக்கும் கார்போஹைட்ரேட்டுகள் தேவை.



கார்ப்ஸ் உங்கள் எடையை அதிகரிக்கிறது என்பது கட்டுக்கதையே. இதை புரிந்து கொள்ள ஃபைபர், சுகர் மற்றும் ஸ்டார்ச் உள்ளிட்ட 3 வகை கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன என்பதை முதலில் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றின் வேதியியல் கலவை அடிப்படையில், ஒவ்வொன்றும் எளிமையானது அல்லது சிக்கலானது என மேலும் வகைப்படுத்தலாம். இதில் எளிமையான கார்போஹைட்ரேட்ஸ் ரத்த குளுக்கோஸ் அளவை அதிகரித்து உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருகின்றன, அதே சமயம் சிக்கலான கார்போஹைட்ரேட்ஸ் ஃபைபர், புரோட்டின், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சர்க்கரைகளின் முழு சங்கிலியை வழங்குகின்றன.

கொரியர்கள் எடையை நிர்வகிப்பதிலும் கில்லாடிகள்... அதற்காக அவர்கள் செய்யும் விஷயங்கள் இவைதான்..!

எடை அதிகரிப்பது என்பது ஒருவர் எடுத்து கொள்ளும் கலோரிகளின் எண்ணிக்கையுடன் நேரடியாக தொடர்புடையது. அதிக கலோரி உணவுகள் எடையை அதிகரிக்கும். மரபியல், மருந்து, கர்ப்பம், மாதவிடாய் மற்றும் மனச்சோர்வு உள்ளிட்டவை கூட எடை அதிகரிக்க வைக்கின்றன. எனவே ஆரோக்கிய வாழ்க்கைக்கான சரியான உடற்பயிற்சிகளை ஒருவர் அறிந்திருக்க வேண்டும்.



ஏனெனில் கார்போஹைட்ரேட்டுகளை மட்டுமே சாப்பிட்டு மற்றும் எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் இருந்தால் அது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும். சாப்பிட்ட 10 நிமிடங்களுக்குப் பின் வாக்கிங் செல்வது செரிமானத்திற்கு உதவுகிறது, நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இப்பழக்கம் நல்லது. வழக்கமான நடைபயிற்சி மற்றும் சாப்பிட்ட பிறகு வேலை செய்வது ரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்பைக் குறைக்கும், எடையை குறைக்க விரும்புவோருக்கும் சிறப்பான பலனை தரும்.

பாலிவுட் நடிகர் வருண் தவானின் வொர்கவுட் மற்றும் டயட் டிப்ஸ்...

இந்தியர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 282 கிராம் கார்போஹைட்ரேட்ஸ் சாப்பிடலாம். ஆனால் இது நபருக்கு நபர் வேறுபாடும் மற்றும் வயதும் முக்கிய பங்கு வகிக்கிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் ஒருவர் கார்போ எடுத்து கொள்வது அவருக்கு ஆற்றல் வழங்க உதவுகிறது என்கிறார்கள் நிபுணர்கள். ஆக மொத்தம் உங்கள் டயட்டில் கார்போஹைட்ரேட் நிச்சயம் இடம்பெற வேண்டும், ஆனால் உங்கள் உடலுக்கு ஏற்ற அளவு எடுக்க வேண்டும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Carbohydrate Food, Weight loss

அடுத்த செய்தி