Home /News /lifestyle /

நீங்கள் இந்த நேரத்தில் பல் துலக்கினால் உங்க ஆயுள் அதிகரிக்குமாம் - ஆய்வு

நீங்கள் இந்த நேரத்தில் பல் துலக்கினால் உங்க ஆயுள் அதிகரிக்குமாம் - ஆய்வு

பற்களை சுத்தமாக பராமரித்தல்

பற்களை சுத்தமாக பராமரித்தல்

பற்களின் எண்ணிக்கை குறைவதால், இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது. 20-க்கும் மேற்பட்ட பற்கள் உள்ளவர்களுடன் ஒப்பிடுகையில், பற்கள் இல்லாதவர்களுக்கு உயிரிழக்கும் அபாயம் 30 சதவிகிதம் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வாயை தூய்மையாக வைத்திருப்பது நம் ஆயுள் காலத்தை நீடிக்க உதவும். தினசரி இரண்டு முறை பற்களை தேய்ப்பதும் துர்நாற்றம் இல்லாமல் வைத்துக்கொள்வதும் இதற்கு அவசியமானவை . பற்களைத் துலக்கும்போது பற்களுக்கு இடையே உள்ள உணவுத் துகள்களை நன்கு சுத்தம் செய்தல் முக்கியம். பற்களின் தூய்மை நமது ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகும்

ஏஜிங் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியில், சிறந்த வாய் ஆரோக்கியம் நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளனர்

1992 முதல் 2009 வரை 5,611 பெரியவர்களின் பல் சுகாதார நடத்தைகள் மற்றும் வேறு பிற காரணங்களால் ஏற்படும் இறப்பு பற்றி ஆய்வு செய்தனர். இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக மேற்கொண்ட ஆராய்ச்சியில் பற்களின் நிலை குறித்த ஆபத்தை மதிப்பிட்டனர்.

இதில் பாலினம், உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ), கல்வி, புகைபிடிக்கும் நிலை மற்றும் நோயின் வரலாறு பங்கேற்பாளர்களின் நாள்பட்ட நோயின் வரலாறு போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

மேலும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பல் துலக்குவது நீண்ட ஆயுளுடன் தொடர்புடையது, எனவே, உங்கள் வாயின் ஆரோக்கியத்திற்கும் நீங்கள் எவ்வளவு காலம் வாழ்வீர்கள் என்பதற்கும் இடையே உள்ள இந்த ஆச்சரியமான தொடர்பைப் பற்றி ஆராய்ச்சிகள் என்ன வெளிப்படுத்தியுள்ளன என்பதை காண்போம்.இரவில் படுக்கைக்கு முன் பல் துலக்குவது நீண்ட ஆயுளுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், ஆரோக்கியமான வாய்வழி சுகாதாரப் பழக்கவழக்கங்கள், தினசரி பல் துலக்க ஃப்ளோஸைடுகளைப் பயன்படுத்துதல் மற்றும் பல் மருத்துவரை அணுகுவது போன்றவை நீண்ட ஆயுளுடன் தொடர்புடையவை என கண்டறியப்பட்டுள்ளது. மாதத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை பல் மருத்துவரைப் பார்ப்பதை விட, கடந்த ஒரு வருடத்தில் பல் மருத்துவரைப் பார்க்காதது இறப்பு அபாயத்தை 30-50 சதவீதம் அதிகரித்துள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா..? இந்த  ஆயுர்வேத டிப்ஸுகளை பின்பற்றி பாருங்கள்

இதே போல் தினமும் பல் துலக்குவதை விட, இரவில் ஒருபோதும் பல் துலக்காமல் இருப்பது இறப்பு விகிதத்தை 20-35 சதவீதம் அதிகரிக்கும் எனவும் தெரியவந்துள்ளது.மேலும், தினசரி flossing செய்பவர்களோடு ஒப்பிடுகையில், ஒருபோதும் flossing செய்யாதவர்களின் இறப்பு விகிதம் 30 சதவீதம் அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

பற்களின் எண்ணிக்கை குறைவதால், இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது. 20-க்கும் மேற்பட்ட பற்கள் உள்ளவர்களுடன் ஒப்பிடுகையில், பற்கள் இல்லாதவர்களுக்கு உயிரிழக்கும் அபாயம் 30 சதவிகிதம் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சமூக பல் மருத்துவம் மற்றும் வாய்வழி தொற்றுநோயியல் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், பற்களை ஆரோக்கியமாக பராமரிப்பது வயதானவர்களுக்கு உயிர்வாழ்வதை ஊக்குவிக்கிறது என்பதைக் காட்டுகிறது.70 வயதிற்குள் 20 அல்லது அதற்கு மேற்பட்ட பற்கள் உள்ளவர்கள் 20க்கும் குறைவான பற்களைக் கொண்டவர்களை விட நீண்ட காலம் வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட ஆயுளைத் தவிர, வாய்வழி சுகாதாரம் இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு, டிமென்ஷியா மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் போன்ற பல வகையான உடல்நலப் பிரச்சனைகளுடன் தொடர்புடையவை என கண்டறியப்பட்டுள்ளன. ஆரோக்கியமான வாயை பராமரிக்க, நிபுணர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை ஃப்ளூரைடு பற்பசை மூலம் பல் துலக்க பரிந்துரைக்கின்றனர்.

நீங்கள் அடிக்கடி சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் மற்றும் குளிர்பானங்களை உட்கொள்வதைக் குறைத்து, ஒவ்வொரு உணவிற்கும் பிறகு வாய் கொப்பளிக்க வேண்டும். மாதம் ஒரு முறை உங்கள் பல் மருத்துவரை தவறாமல் சந்திப்பது உங்களுக்கு நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும் இது உங்கள் புன்னகையை மேம்படுத்தவும் உதவும். உங்கள் பற்களை நன்கு கவனித்துக்கொள்வது உங்கள் வாய்வழி ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உங்கள் முழு உடல் நலத்திற்கும் சாதகமாக அமையும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Mouth care, Mouthwash

அடுத்த செய்தி