ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

அதிக தண்ணீர் குடித்ததுதான் புரூஸ் லீ இறப்புக்கு காரணமா..? 50 ஆண்டுகளுக்கு பின் வெளியான ஆய்வு..!

அதிக தண்ணீர் குடித்ததுதான் புரூஸ் லீ இறப்புக்கு காரணமா..? 50 ஆண்டுகளுக்கு பின் வெளியான ஆய்வு..!

புரூஸ் லீ

புரூஸ் லீ

அவர் தனது 32வது வயதில் 1973-இல் பெருமூளை வீக்கம் காரணமாக இறந்தார். இதற்கு அதிகமான வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டதே பெருமூளை வீக்கத்திற்கு காரணம் என மருத்துவர்கள் கருதினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தற்காப்பு கலையின் ஜாம்பவான் என அழைக்கப்படும் புரூஸ் லீ உலகின் சிறந்த நடிகராகவும் விளங்கினார். இவர் இறப்புக்கு அதிக தண்ணீர் குடித்ததுதான் காரணம் என அவர் இறந்து 50 ஆண்டுகளுக்குப் பின் ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பலரையும் ஆதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

’என்டர் தி டிராகன்’ உள்ளிட்ட பல படங்கள் மூலம் அனைவரையும் தன் வசம் ஈர்த்தவர் புரூஸ் லீ. அவர் தனது 32வது வயதில் 1973-இல் பெருமூளை வீக்கம் காரணமாக இறந்தார். இதற்கு அதிகமான வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டதே பெருமூளை வீக்கத்திற்கு காரணம் என மருத்துவர்கள் கருதினர்.

அந்த சமயத்தில் அவர் இறப்புக்கு வேறு சில காரணங்கள் இருப்பதாக பலர் பல வதந்திகளை பரப்பினர். அவர் இறப்புக்கு சீனாவின் நிழல் உலக தாதாக்களால் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவர் மீது பொறாமை கொண்ட அவரது காதலி விஷம் வைத்து கொலை செய்திருக்கலாம் என்றும் வதந்திகளை பரப்பினர்.

ஆனால் அவர் இறந்து 50 ஆண்டுகளுக்குப் பின் தற்போது கிளினிக்கல் கிட்னி வெளியிடுள்ள ஆய்வு அவர் அதிகமாக தண்ணீர் குடித்ததால் இறந்திருக்கலாம் என்று கூறியுள்ளது. ஸ்பெயின் சிறுநீரகக் குழு நடத்திய இந்த ஆய்வு முடிகளில் அவர் ஹைபோநட்ரீமியா காரணமாக இறந்திருக்கலாம் என்று கூறியுள்ளது.

Also Read : குளிர்காலத்தில் காது வலியால் அவஸ்தைப்படுகிறீர்களா..? என்ன காரணம்..? சரி செய்யும் 10 வழிகள்..!

அதாவது சிறுநீரகங்கள் அதிகப்படியான நீரை வெளியேற்ற முடியாமல் இறந்திருக்கலாம் என கூறுகின்றனர். அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற அவரது சிறுநீரகங்கள் இயலாததால் புரூஸ் லீ இறந்திருக்கலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Published by:Sivaranjani E
First published:

Tags: Bruce Lee, Drinking water