Home /News /lifestyle /

உடலில் இந்த வகை கொழுப்பு இருந்தால் இதய பிரச்சனைகள் வருவது குறைவு தெரியுமா ?

உடலில் இந்த வகை கொழுப்பு இருந்தால் இதய பிரச்சனைகள் வருவது குறைவு தெரியுமா ?

காட்சி படம்

காட்சி படம்

பழுப்பு கொழுப்பு திசு நீங்கள் மிகவும் குளிராக உணரும் போது உங்கள் உடல் வெப்பநிலையை பராமரிக்க இது உதவுகிறது.

  ஒருவருக்கு கண்டறியக்கூடிய பழுப்பு கொழுப்பு  இருந்தால், அவர்கள் டைப் -2 நீரிழிவு முதல் கரோனரி தமனி நோய் வரையிலான இருதய மற்றும் வளர்சிதை மாற்ற நிலைமைகளால் மிகக்குறைவாகவே பாதிக்க நேரிடும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பழுப்பு கொழுப்பு என்பது பழுப்பு கொழுப்பு திசு என்றும் அழைக்கப்படுகிறது. நீங்கள் மிகவும் குளிராக உணரும் போது உங்கள் உடல் வெப்பநிலையை பராமரிக்க இது உதவுகிறது.

  கலோரிகளைச் சேமிக்கும் வெள்ளை கொழுப்பைப் போல் இல்லாமல், பழுப்பு கொழுப்பு ஆற்றலை எரிக்கிறது. மேலும் இவை புதிய உடல் பருமன் சிகிச்சையின் திறவுகோலைக் கொண்டிருக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இது பற்றி அமெரிக்காவின் ராக்ஃபெல்லர் பல்கலைக்கழக மருத்துவமனையின் உதவி பேராசிரியர் பால் கோஹன் கூறியதாவது, "சில நிபந்தனைகளின் குறைந்த ஆபத்துக்கான இணைப்பை பழுப்பு கொழுப்பு முதன்முறையாக வெளிப்படுத்துகிறது. ஆய்வின் கண்டுபிடிப்புகள் மூலம் சிகிச்சையில் பழுப்பு கொழுப்பின் திறன் எங்களுக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன" எனக் கூறியுள்ளது.

  சமீபத்தில் நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, முந்தைய ஆய்வுகள் பரிந்துரைத்த பழுப்பு கொழுப்பின் ஆரோக்கிய நன்மைகளை உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவுபடுத்துகிறது. ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் சுமார் 52,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளிடமிருந்து 130,000 பி.இ.டி ஸ்கேன்களை ஆய்வு செய்தனர். அதில், கிட்டத்தட்ட 10% நபர்களில் பழுப்பு கொழுப்பு இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும், கண்டறியக்கூடிய பழுப்பு கொழுப்பு உள்ளவர்களிடையே பல பொதுவான மற்றும் நாட்பட்ட நோய்கள் குறைவாகவே காணப்பட்டன. எடுத்துக்காட்டாக, கண்டறியக்கூடிய பழுப்பு கொழுப்பு இல்லாத 9.5% மக்களுடன் ஒப்பிடும்போது, 4.6% பேருக்கு மட்டுமே டைப் -2 நீரிழிவு நோய் இருந்தது.

  இதேபோல், 22.2% பழுப்பு கொழுப்பு இல்லாதவர்களுடன் ஒப்பிடும் போது,18.9% பேர் அசாதாரண கொழுப்பைக் கொண்டிருந்ததாக ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், பழுப்பு கொழுப்பு உள்ளவர்களுக்கு மூன்று உடல்நல பிரச்சனைகளின் ஆபத்து குறைவாக காணப்பட்டதாக ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. அதாவது, உயர் இரத்த அழுத்தம், இதய செயலிழப்பு மற்றும் கரோனரி தமனி நோய் பாதிப்பு ஏற்படுவது குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஆச்சரியமான கண்டுபிடிப்பு என்னவென்றால், பழுப்பு நிற கொழுப்பு உடல் பருமனின் எதிர்மறையான உடல்நல பாதிப்புகளைத் தணிக்கும் என்பது தான்.

  பொதுவாக, பருமனானவர்களுக்கு இதயம் மற்றும் வளர்சிதை மாற்றநிலைகளின் ஆபத்து அதிகரித்து காணப்படும். ஆனால் பழுப்பு நிற கொழுப்பு உள்ள பருமனான மக்களிடையே, இந்த நிலைமைகளின் பரவலானது பருமன் அல்லாத மக்களுக்கு ஒத்ததாக இருந்தது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உயர் இரத்த அழுத்தம் போன்ற பிற நிலைகளில் பழுப்பு கொழுப்பின் பங்கு மிகவும் மர்மமானது. மேலும் இது ஹார்மோன் அமைப்புடன் இறுக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பழுப்பு கொழுப்பு திசுக்கள் குளுக்கோஸை உட்கொள்வதையும் கலோரிகளை எரிப்பதையும் விட அதிகமாக செயல்படுவதற்கான சாத்தியத்தை பரிசீலித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  Also Read ; வைட்டமின்-E நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரவே வராதாம்..

  மேலும் உண்மையில் மற்ற உறுப்புகளுக்கு ஹார்மோன் சமிக்ஞையில் இவை பங்கேற்கலாம் என்றும் கூறுகின்றனர். எனவே, பழுப்பு கொழுப்பின் உயிரியலை மேலும் ஆய்வு செய்ய இந்த குழு திட்டமிட்டுள்ளது. அதில் இந்த கொழுப்பு மற்றவர்களை விட சிலருக்கு மட்டும் ஏன் அதிகமாக உள்ளது என்பதை விளக்கக்கூடிய மரபணு மாறுபாடுகளைத் தேடுவது போன்ற ஆராய்ச்சிகள் உள்ளடங்கும். உடல் பருமன் மற்றும் தொடர்புடைய நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க பழுப்பு கொழுப்பு செயல்பாட்டைத் தூண்டுவதற்கான மருந்தியல் வழிகளை வளர்ப்பதற்கான முதல் படிகள் இந்த ஆராய்ச்சி என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Heart disease, Heart health

  அடுத்த செய்தி