ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தாய்ப்பால் தானத்தால் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைகிறது : முக்கியத்துவத்தை விளக்கும் நிபுணர்..!

தாய்ப்பால் தானத்தால் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைகிறது : முக்கியத்துவத்தை விளக்கும் நிபுணர்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Breast Milk Donation | NICU வார்டில் இருக்கின்ற ஒரு குழந்தைக்கு சிகிச்சையுடன் சேர்த்து தாய்ப்பால் கொடுக்கும்பொழுது விரைவில் உடல்நிலை சரியாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அறிவியலாலும் விஞ்ஞானத்தாலும் எட்ட முடியாத கலப்படமற்ற பொருள் தாய்ப்பால். தாய்மைக்கு பெருமை சேர்ப்பது தாய்ப்பால் தான். தாய்ப்பாலால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும், வளர்ச்சிக்கும் தாய்ப்பால் இன்றியமையாததாக இருக்கிறது. தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகளுக்கு உடலில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தாய் என்பவளின் குணமானது தான் பெற்ற குழந்தைகளுக்கு மட்டுமானதாக இருப்பதல்ல. அவள் இயற்கையிலேயே அனைவரையும் அரவணைத்து வாழ்பவளாகிறாள். அப்படி இருக்கையில் அவளிடம் இருந்து வரும் தாய்ப்பால் மட்டும் விதி விலக்கா என்ன? தாய்ப்பாலின் மகத்துவமே ஒரு தாயின் தாய்ப்பால் என்பது அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்புடையதாக இருக்கும்.

தாய்ப்பால் கொடை என்பது வரவேற்க வேண்டிய விஷயமாக உள்ளது. நம் குழந்தைக்கு கொடுத்தது போக மீதமுள்ள தாய்ப்பாலை அளிப்பதன் மூலம் மற்றொரு குழந்தையின் உயிர் காப்பாற்றப்படுகிறது என்பது எவ்வளவு நல்ல செயல்.தாய்ப்பால்தான் குழந்தைகளின் உணவும் மருந்தும் என்று சொல்லலாம்.

தாய்ப்பால் நன்கொடை என்பது தாயை இழந்த குழந்தைகள், உடல் நலமற்ற குழந்தைகள் அல்லது உடல்நலம் காரணமாக ஒரு தாயால் தாய்பால் கொடுக்க முடியாத நிலையில் உள்ள குழந்தைகளுக்கான தீர்வாக இருக்கிறது. மகப்பேறு அடைந்த பெண்கள் தன்னுடைய குழந்தைக்கு கொடுத்தது போக மீதம் கிடைக்கிற தாய்ப்பாலை ஒரு பாட்டிலில் எடுத்து பாதுகாத்து அதை தாய்ப்பால் வங்கியிடம் ஒப்படைக்கின்றன. உரிய பரிசோதனை மற்றும் பாதுகாப்புக்கு பிறகு சிகிச்சையில் உள்ள தேவைப்படுகிற குழந்தைகளுக்கு அந்த தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது.இவை தான் தாய்ப்பால் நன்கொடையின் அமைப்பு

Read More : உங்கள் பெண் குழந்தையிடம் மாதவிடாய் பற்றி பேச சரியான நேரம் எது..? தயக்கத்தை உடைத்து பேச டிப்ஸ்..!

இது தொடர்பாக நாம் அமிர்தம் ப்ரெஸ்ட்மில்க் டொனேஷன் NGO வை தொடர்புக்கொண்டு அனிதா அமிர்தம் அவர்களிடன் பேசியபொழுது அவர் மேலும் பல தகவல்களை கூறினார். அதன்படி, இந்தியாவில் ஒட்டு மொத்தமாக 70 தாய்ப்பால் வங்கிகள் உள்ளன. அதில் 45 தாய்ப்பால் வங்கி தமிழகத்தில் உள்ளது. இதுவரை 5000 க்கும் மேற்பட்ட பெண்கள் தாய்ப்பாலை தானம் செய்து வருகின்றனர். இதன் மூலம் ஆயிரக்கனக்கான குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்படுகிறது. தாய்ப்பால் என்பது வெளியேற வெளியேற சுரக்கும் என்பதால் அதனை வழங்குவதில் பற்றாக்குறை எதுவும் இருக்காது.

அதுபோல் இயற்கையிலேயே தாய்ப்பால் 6 மாதம் வரைக்கெடாமல் இருக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. தாய்ப்பாலை சரியான முறையில் ஃப்ரிட்ஜில் வைத்து பராமரித்து கொடுப்பதன் மூலம் பல குழந்தைகளுக்கு அது எதிர்ப்புசக்தி அளிக்க கூடியதாக இருக்கும்.

NICU வார்டில் இருக்கின்ற ஒரு குழந்தைக்கு சிகிச்சையுடன் சேர்த்து தாய்ப்பால் கொடுக்கும்பொழுது விரைவில் உடல்நிலை சரியாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.தாய்ப்பால் கொடுக்கப்படுவதால் சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்து எதிர்ப்பு சக்தி அதிகமாவதாகவும் தெரிவிக்கின்றனர்.நீங்களும் தாய்ப்பாலை டொனேட் செய்யலாம். Human Milk Bank அல்லது Amirtham BreastMilk Donation தொடர்புக்கொண்டு அவர்கள் அளிக்கிற அறிவுரைப்படி உங்களால் தாய்ப்பால் கொடையளிக்க முடியும்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Breast milk, Breastfeeding, Health