Home /News /lifestyle /

உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்தாலே மார்பகப் புற்றுநோயை பெண்கள் தவிர்க்கலாம் - ஆய்வு

உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்தாலே மார்பகப் புற்றுநோயை பெண்கள் தவிர்க்கலாம் - ஆய்வு

மார்பகப் புற்றுநோய்

மார்பகப் புற்றுநோய்

40 வயதைக் கடந்த பெண்கள் உணவு மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கு இந்த ஆய்வு தூண்டுகோலாக இருக்கும் .

  • News18
  • Last Updated :
    வாஷிங்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் 50 வயதிற்குப் பின்னும் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து கடைபிடித்தால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான தீவிரத்தைக் குறைக்கலாம் என்று அறியப்பட்டுள்ளது.

    40 வயதைக் கடந்த மூன்றில் இரு பெண்கள் உடல் எடை அதிகரித்துக் காணப்படுகின்றனர். குறிப்பிட்ட வயதுக்கு மீறிய உடல் எடையைக் கொண்டிருக்கின்றனர். இதற்கு மாதவிடாய் நிற்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. அவர்களுக்கு உடல் எடையைக் குறைப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சி மார்பகப் புற்றுநோய் வருவதற்கும் காரணமாக அமைகிறது.



    எனவேதான் அமெரிக்காவின் புற்றுநோய் அமைப்பும் ,Harvard T.H. Chan School of Public Health -ம் இணைந்து உணவு முறை மற்றும் புற்றுநோய் (Diet and Cancer) என்கிற புள்ளியில் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.அதில் 50 வயது கொண்ட 1,80,000 பெண்களை ஆய்வு செய்துள்ளது. அதில் தொடர்ச்சியாக உடல் எடையைக் குறைத்தலும், வயதுக்கு ஏற்ற உடல் எடையை பராமரித்தாலும் மார்பகப் புற்றுநோய் ஆபத்தைக் குறைப்பதாக கண்டறிந்துள்ளது. அதில் உடல் எடையைக் குறைக்காமல் அப்படியே இருக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயின் ஆபத்தை உணர முடிந்ததாக தெரிவிக்கிறது.

    படிக்க : மாதவிடாய் நின்ற பின்பு பெண்களே உஷார்... 

    இறுதியாக 40 வயதைக் கடந்த பெண்கள் உணவு மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கு இந்த ஆய்வு தூண்டுகோலாக இருக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் நீங்கள் 50 வயதிற்குப் பின் உடல் எடையை அதிகரித்திருந்தாலும் கவலை இல்லை. குறைப்பதற்கான வழிகளை செய்தால் பிரச்னையைத் தவிர்க்கலாம் என்கிறது.

    படிக்க :  மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யக் கூடாத தவறுகள்..!
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி