முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Breast Cancer in Men : ஆண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய்..! ஆரம்பகால அறிகுறிகளும்..சிகிச்சை முறைகளும் என்ன..?

Breast Cancer in Men : ஆண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய்..! ஆரம்பகால அறிகுறிகளும்..சிகிச்சை முறைகளும் என்ன..?

ஆண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய்

ஆண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய்

எந்த வயதிலும் ஏற்படும் இந்த புற்றுநோய் ஆண்களின் மார்பகத்தில் கட்டியாக உருவாகிறது. இதைப் பற்றிய புரிதல் ஆண்களுக்கு குறைவாகவே உள்ளது. ஏனெனில் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு அதிக அறிகுறிகளை காட்டுவதில்லை.

  • Last Updated :

மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களிடம் அதிகமாக காணப்படும் நோயாக உள்ளது. அதேசமயம் ஆண்களிடமும் ஒரு சதவீதம் பேருக்கும் உண்டாகிறது. எந்த வயதிலும் ஏற்படும் இந்த புற்றுநோய் ஆண்களின் மார்பகத்தில் கட்டியாக உருவாகிறது. இதைப் பற்றிய புரிதல் ஆண்களுக்கு குறைவாகவே உள்ளது. ஏனெனில் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு அதிக அறிகுறிகளை காட்டுவதில்லை.

மார்பகத்தில் உருவாகும் கட்டி எந்த வலியையும் கொடுக்காததால் கண்டுகொள்ளாமல் விடுகின்றனர். இதனால் நோயின் தீவிரம் அதிகரித்து இறக்கும் அபாயத்தை சந்திக்கின்றனர். எனவே ஆண்களுக்கான விழிப்புணர்வை உண்டாக்கவே இந்தக் கட்டுரை.

குர்கானின் சி.கே. பிர்லா மருத்துவமனையின் மார்பக மையத்தின் மருத்துவர் டாக்டர் ரோஹன் கண்டேல்வால், கவனிக்க வேண்டிய ஆரம்ப அறிகுறிகள், ஆண்களில் மார்பக புற்றுநோய் வகைகள், சிகிச்சை மற்றும் பலவற்றை இந்தியா.காம் ஆன்லைன் தளத்திற்கு பகிர்ந்துள்ளார். அவற்றில் சில உங்களுக்காக..

மார்பக கட்டியின் அறிகுறிகள் :

மார்பக திசுக்களில் ஒரு கட்டி அல்லது வீக்கம்

ஒரு மார்பகக் கட்டி அளவு அதிகரிக்கும் அல்லது வலியை ஏற்படுத்தும்

மார்பகத்தின் தோல் அல்லது அளவில் மாற்றம்

மங்கலான நிறம், சிவத்தல் அல்லது பழுப்பு நிறமாக மாறுதல் போன்ற மார்பக தோலில் ஏற்படும் மாற்றங்கள்

முலைக்காம்புகளிலிருந்து திரவ வெளியேற்றம்

ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் வகைகள் :

ஆண்களில் மிகவும் பொதுவான மார்பக புற்றுநோய் டக்டல் கார்சினோமா (Ductal carcinoma) மற்றும் லோபுலர் கார்சினோமா( lobular carcinoma ) ஆகும். இது சுரப்பிகளை உருவாக்கும் கலங்களில் உருவாகிறது.

டக்டல் கார்சினோமா (Ductal carcinoma): இந்த புற்றுநோய் பால் குழாய்களிலிருந்து உருவாகிறது. ஆண்கள் பலர் டக்டல் கார்சினோமா புற்றுநோயால்தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

Colon Cancer : இளைஞர்களிடையே அதிகரித்து வரும் பெருங்குடல் புற்றுநோய் : கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பதுதான் காரணம் என ஆய்வு தகவல்..!

லோபுலர் கார்சினோமா (Lobular carcinoma): இந்த புற்றுநோய் மார்பகத்தின் பால் உற்பத்தி செய்யும் சுரப்பிகளில் தொடங்குகிறது. ஆண்களுக்கு மார்பக திசுக்களில் மிகக் குறைவான லோபூல்கள் (lobules) இருப்பதால் இது அரிது.

மேலே குறிப்பிட்டதை தவிர ஆண்களுக்கு ஏற்படக்கூடிய பிற வகை மார்பக புற்றுநோய்கள் பேஜெட்டின் முலைக்காம்பு நோய் மற்றும் ஆண்களில் அரிதாகவே காணப்படும் அழற்சி மார்பக புற்றுநோய் ஆகியவை அடங்கும்.

ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட காரணங்கள் :

வயதானவர்கள் - மார்பக புற்றுநோயின் ஆபத்து ஒரு வயதில் அதிகரிக்கிறது. ஆண் மார்பக புற்றுநோயானது பெரும்பாலும் 60 வயதிற்குட்பட்ட ஆண்களில் கண்டறியப்படுகிறது

ஈஸ்ட்ரோஜன்வெளிப்பாடு - புரோஸ்டேட் புற்றுநோய்க்கான ஹார்மோன் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஈஸ்ட்ரோஜன் தொடர்பான மருந்துகளின் நுகர்வு மார்பக புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கும். உடலில் அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் இருப்பதால் உடல் பருமனும் இதனுடன் தொடர்புடையது. இது ஆண்களுக்கு மார்பக புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.

குடும்ப வரலாறு - நெருங்கிய குடும்ப உறுப்பினரிடமிருந்து நோய் கண்டறியப்பட்டால் மார்பகப் புற்றுநோய் உருவாக அதிக வாய்ப்பு உள்ளது

கல்லீரல் நோய் - கல்லீரல் செயலிழப்பு / சிரோசிஸால் பாதிக்கப்பட்ட ஆண்களும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

சிகிச்சை முறை என்ன..?

முலையழற்சி: இந்த செயல்முறையில் முலைக்காம்பு, அரோலா (முலைக்காம்பைச் சுற்றியுள்ள கருப்பான பகுதி) மற்றும் தற்போதுள்ள அனைத்து மார்பக திசுக்களையும் அகற்றுதல் அல்லது பிரித்தெடுப்பது ஆகியவை இந்த சிகிச்சையில் அடங்கும்.

சென்டினல் நிணநீர் கணு பயாப்ஸி (Sentinel Lymph Node Biopsy): இந்த சிகிச்சையில் அடிவயிற்று பகுதியில் நிணநீர் முனைகளை அடையாளம் காண்பதாகும். இந்த முனைகள் புற்றுநோய் செல்கள் உடலின் மற்ற உறுப்புகளுக்கு பரவத் தொடங்கும் இடமாகும். இருப்பினும், இந்த செல்கள் எதுவும் பரவுவதுபோல் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், அப்படியே சுத்தம் செய்து விட்டுவிடுவார்கள்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில பொதுவான சிகிச்சைகள் கதிர்வீச்சு மற்றும் முறையான சிகிச்சைகளாகும். முறையான சிகிச்சையானது கீமோ மற்றும் ஹார்மோன் சிகிச்சைகள் அளிக்கப்படும். இந்த முறையில் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் வாய் வழியாக வழங்கப்படுகின்றன அல்லது நோயாளியின் நரம்புக்குள் செலுத்தப்படுகின்றன. புற்றுநோய் மீண்டும் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு கதிர்வீச்சு சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.

மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சையானது ஆண் , பெண் இருவருக்கும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. இருப்பினும் இது கட்டி எவ்வளவு பெரியது மற்றும் எவ்வளவு தூரம் பரவியது என்பதைப் பொறுத்தது.

கவனிப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது:

நோயாளியின் குடும்பத்தில் ஆண் மார்பக புற்றுநோயின் வரலாறு இருந்தால், அந்த நபர் சுய பரிசோதனைகள் செய்துகொள்வது அவசியம். மருத்துவ மார்பக பரிசோதனைகள் மூலம் கட்டிகளை தவறாமல் சரிபார்த்து சிகிச்சை பெறுவதும் , அதில் மாற்றங்களை உணர்ந்தால் உடனே மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

top videos

    ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்துவது மார்பக புற்றுநோயைத் தடுக்க உதவும். அத்துடன் பிற நாள்பட்ட சுகாதார நிலைமைகளையும் தவிர்க்கலாம். ஆரம்பகால கண்டறிதல் தேவையற்ற அபாயங்களை தவிர்க்க உதவும்.

    First published:

    Tags: Breast Cancer in Men, BreastCancer, Men's health