Home /News /lifestyle /

மார்பக புற்றுநோயை ரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம் - அடையாறு மருத்துவமனை ஆய்வில் தகவல்

மார்பக புற்றுநோயை ரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம் - அடையாறு மருத்துவமனை ஆய்வில் தகவல்

Breast Cancer

Breast Cancer

Breast Cancer: மார்பக புற்றுநோயை உடல்ரீதியான பரிசோதனை அல்லது மேமோகிராம் மூலம் தான் கண்டறிய முடியும் என்ற நிலையில், பெண்கள் மார்பகங்களை பரிசோதனை செய்து கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.

மார்பக புற்றுநோயை (Breast Cancer) ரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம் என்று சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 ஆயிரம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறியப்படுகிறது. பொதுவாக மார்பக புற்றுநோயை உடல்ரீதியான பரிசோதனை அல்லது மேமோகிராம் மூலம் தான் கண்டறிய முடியும் என்ற நிலையில், பெண்கள் மார்பகங்களை பரிசோதனை செய்து கொள்ள தயக்கம் காட்டுவதால் பல நேரங்களில் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிய முடிவதில்லை. இதனால், மருத்துவமனைகளுக்கு வருபவர்களில் 50% பேர் நோயின் தீவிரம் அதிகமாக உள்ள 3-வது கட்டத்தில் தான் வருகின்றனர்.

இந்நிலையில், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் 458 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ரத்த பரிசோதனை மூலம் ஆரம்ப கட்ட புற்றுநோய் உட்பட அனைத்து கட்டங்களிலும் இருக்கும் புற்றுநோயை கண்டறிய முடியும் என தெரியவந்துள்ளது. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 218 பெண்களுக்கு அவர்களின் பிளாஸ்மாவில் இருக்கும் செல் இல்லாத டி.என்.ஏ-வில் பரிசோதனை மேற்கொண்டதில், அனைவருக்கும் புற்றுநோய் இருப்பதை உறுதி செய்யும் விதமாக மரபணு மாற்றங்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

Also read:  "இது காதலிக்கும் வயசல்ல" - பள்ளி மாணவிகளுக்கு போலீசார் அறிவுரை

இதேபோன்று ஆரோக்கியமான மற்றும் புற்றுநோய் அல்லாத கட்டிகள் கொண்ட 240 பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 91 சதவீதம் பேருக்கு பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. எனினும் அதில் 9 சதவீதம் பேருக்கு பாதிப்பு இருப்பது வழக்கமான பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது. ஆய்வில் உள்ள இது போன்ற சிக்கல்களை களைய 750 முதல் 1000 பேரிடம் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என மூலக்கூறு புற்றுநோயியல் துறை தலைவர் ராஜ்குமார் கூறுகிறார்.

பல்வேறு வகையான புற்றுநோய்களில் பெண்களிடம் அதிகம் காணப்படுவது மார்பக புற்றுநோய் தான். சென்னையில் வருடத்துக்கு 4 சதவீதம் பேருக்கு கூடுதலாக கண்டறியப்பட்டு வருகிறது. ஊரகப்பகுதிகளிலும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பெண்கள் தங்களது வசிப்பிடத்திலேயே ரத்த பரிசோதனையை செய்ய முடியும் என்றும் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய இது மிகவும் உதவும் எனவும் நோய் புள்ளியியல் துறைத் தலைவர் சாமிநாதன் தெரிவிக்கிறார்.

Also read:  தங்கத்தின் விலை எப்போது குறையும்? எப்போது அதிகரிக்கும்? விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது..

முற்றிலும் குணப்படுத்தக் கூடிய புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் இந்த ரத்த பரிசோதனை மேலும் பெரிய அளவிலான ஆய்வுக்கு பிறகு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Published by:Arun
First published:

Tags: Breast cancer, Cancer symptoms

அடுத்த செய்தி