ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Breast Cancer Awareness Month : மார்பக புற்றுநோயிலிருந்து தப்பிக்க பெண்கள் சுய பரிசோதனை செய்து கொள்வதற்கான வழிமுறைகள்..!

Breast Cancer Awareness Month : மார்பக புற்றுநோயிலிருந்து தப்பிக்க பெண்கள் சுய பரிசோதனை செய்து கொள்வதற்கான வழிமுறைகள்..!

 மார்பக ஆரோக்கியம்

மார்பக ஆரோக்கியம்

10-ல் 1 பெண்ணுக்கு தன் வாழ்நாளில் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. WHO வெளியிட்டுள்ள தரவுகளின்படி ஆண்டு தோறும் சராசரியாக சுமார் 1.38 மில்லியன் புதிய பாதிப்புகள் மற்றும் 4,58,000 இறப்புகள் மார்பக புற்றுநோயால் ஏற்படுகின்றன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக தேசிய அளவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பெண்களை அதிக அளவில் பாதிக்கும் இந்த வகை புற்றுநோய் குறித்து அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

10-ல் 1 பெண்ணுக்கு தன் வாழ்நாளில் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. WHO வெளியிட்டுள்ள தரவுகளின்படி ஆண்டு தோறும் சராசரியாக சுமார் 1.38 மில்லியன் புதிய பாதிப்புகள் மற்றும் 4,58,000 இறப்புகள் மார்பக புற்றுநோயால் ஏற்படுகின்றன. எந்த வகை புற்றுநோய்க்குமே ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிகிச்சை இந்த கொடிய நோயிலிருந்து மீள வழிவகுக்கும். ஆனால் மற்ற எந்த புற்றுநோய்க்கும் சுயபரிசோதனை செய்து கொள்ள முடியாது என்னும் போது, பெண்களை அதிக அளவில் பாதிக்கும் மார்பக புற்றுநோயை சுயபரிசோதனை மூலம் கண்டறிய முடியும் என்பது மிகவும் ஆறுதலான விஷயம்.

எந்த வயதிலும் மார்பக புற்றுநோய் வரலாம் என்பதால் எல்லா வயது பெண்களும் அவ்வப்போது சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதனிடையே மார்பக புற்றுநோயின் தீவிரம் குறித்து பேசியுள்ள அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் மன்தீப் சிங், முதல் கட்டத்தில் இந்த கேன்சரை கண்டறிந்தால், உயிர்வாழும் விகிதம் 80-90% வரை இருக்க கூடும். அதுவே மூன்றாம் கட்டத்தில் கண்டறிந்தால் உயிர்வாழும் விகிதம் 50% ஆகிறது. கண்டறியும் போது நான்காம் கட்டமாக இருந்தால் நோயை குணப்படுத்த முடியாது என்கிறார். எனவே மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய மிகவும் பொதுவான முறையான சுய மார்பக பரிசோதனை அனைத்து பெண்களுக்கும் முக்கியமான ஒன்று.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு திட்டம், மார்பக சுய பரிசோதனை (BSE) மற்றும் ஸ்கிரீனிங் முறையுடன் கூடவே நிபுணர் ஆலோசனை உள்ளிட்டவை மார்பக புற்றுநோயை தடுக்க சிறந்த வழியாகும். குறிப்பாக சீரான இடைவெளியில் செய்யப்படும் வழக்கமான சுய மார்பக பரிசோதனை பெண்களுக்கு மார்பக புற்றுநோயை முதல் கட்டத்திலேயே கண்டறிய பெரிதும் உதவுகிறது. முதல் கட்டத்தில் மார்பக புற்றுநோயால் ஏற்படும் கட்டியின் அளவு பெரும்பாலும் 2 சென்டிமீட்டர் அல்லது இதற்கும் குறைவாகவோ இருக்கும்.

Also Read : தீவிரமான மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள் எப்படி இருக்கும்..? தெரிந்துகொள்ளுங்கள்

சுய மார்பக பரிசோதனை செய்து கொள்வதற்கான படிகள்:

மார்பகங்களை கண்ணால் ஆய்வு செய்ய வேண்டும்:

பெண்கள் தங்கள் மார்பகங்களை சுய பரிசோதனை செய்வதற்கான சிறந்த வழி அடிக்கடி அதை ஆய்வு செய்வது தான். இப்படி செய்வது மார்பக தோலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால் அதை கண்டறியவும், சிவந்து போதல் அல்லது கட்டிகள் இருந்தால் உடனடியாக கவனித்து நடவடிக்கை எடுக்கவும் உதவும். இவை தவிர முலைக்காம்பு நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டாலோ, முலைக்காம்புகள் வழியாக ஏதேனும் திரவம் வெளியேறினாலோ வழக்கமான ஆய்வு உடனடியாக உஷாராக உதவும். பெண்கள் தங்கள் மார்பகங்களில் கவனிக்கும் மாற்றங்கள் ஒருவேளை மார்பக புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

பல்பேட் (Palpate):

டச்சிங் சென்ஸ் மூலம் அதாவது கைகளால் தொட்டு பார்ப்பதன் மூலம் மார்பகத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா என்பதை கண்டறியலாம். இடமிருந்து வலம் மற்றும் வலமிருந்து இடம் என கிளாக் மற்றும் ஆன்டி-கிளாக் திசையில் கை மற்றும் விரல்களை கொண்டு தொட்டு பார்க்கலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த சுய பரிசோதனையை செய்வது மார்பகங்களில் அசாதாரண விஷயம் ஏதாவது அல்லது கட்டிகள் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Breast cancer