ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Breast Cancer Month 2022 : பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களையும் தாக்கும் மார்பகப் புற்றுநோய்... தெரிந்துகொள்ள வேண்டிய அறிகுறிகள்

Breast Cancer Month 2022 : பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களையும் தாக்கும் மார்பகப் புற்றுநோய்... தெரிந்துகொள்ள வேண்டிய அறிகுறிகள்

மார்பக புற்றுநோய்

மார்பக புற்றுநோய்

ஆண்களின் மார்பக புற்றுநோயை வயதான ஆண்களின் நோயாக கருதலாம். ஏனென்றால் இதற்கான ஆபத்து சராசரியாக ஆண்களின் 60 வயதில் துவங்குகிறது. 70 - 75 வயதுடைய ஆண்களில் தான் இதுவரை அதிகம் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மார்பக புற்றுநோய் என்பது பெண்களுக்கு மட்டுமே ஏற்பட கூடிய ஒரு நோய் என்ற பிம்பம் இருக்கிறது. ஆனால் ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் என்கிறவிஷயம் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.

ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் மார்பக திசு உள்ளதால் ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. இது மிகவும் அரிதானது மேலும் இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து மார்பக புற்றுநோய்களிலும் 1 சதவீதத்திற்கும் குறைவானது தான் ஆண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய். எனினும் அரிதானது என்ற நிலையிலிருந்து மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது என்பதே கசப்பான உண்மை என்கிறார்கள் நிபுணர்கள்.

எனவே ஆண்களிடையேயும் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. பிரபல புற்றுநோயியல் நிபுணர் குஞ்சல் படேல் கூறுகையில், பொதுவாக ஆண்களின் மார்பகப் புற்றுநோய் அவர்களின் முதிர்ந்த வயதில் தான் அதிகம் கண்டறியப்படுகிறது. ஏனென்றால் ஆண்கள் தங்கள் மார்பகங்களில் ஏதேனும் கட்டி அல்லது வீக்கத்தை கண்டால் கூட பெரிதாக எதுவும் இருக்காது என்று நினைத்து அலட்சியமாக இருக்கிறார்கள் என்றார். மேலும் மார்பக புற்றுநோய் பெண்களுக்கானது, ஆண்களுக்கானது அல்ல என்று அவர்களது அழுத்தமான எண்ணமும் காரணம்.

ஆண்களின் மார்பக புற்றுநோயை வயதான ஆண்களின் நோயாக கருதலாம். ஏனென்றால் இதற்கான ஆபத்து சராசரியாக ஆண்களின் 60 வயதில் துவங்குகிறது. 70 - 75 வயதுடைய ஆண்களில் தான் இதுவரை அதிகம் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்றார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட சர்வேயை சுட்டிக்காட்டி பேசிய குஞ்சல் படேல், சுமார் 81% ஆண்களுக்கு இந்த கேன்சரின் அறிகுறிகள் பற்றி தெரியாது என்றும், இதனை முன்கூட்டியே அல்லது சரியான நேரத்தில் கண்டறிய என்ன செய்யலாம் என்று தெரியாமல் இருக்கின்றனர் என குறிப்பிட்டார்.

Also Read : World Breast Cancer Month : மார்பக புற்றுநோய் பற்றி கூறப்படும் இதையெல்லாம் நம்பாதீங்க...

இந்த சூழலில் ஆண்களுக்கான மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகள், முன்கணிப்பு மற்றும் நோயின் ஆரம்பத்தில் எப்படி சமாளிப்பது உள்ளிட்டவற்றை பற்றி தெரிந்து கொள்வது அவசியம் என்கிறார். இதனிடையே ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் அடங்கிய 231 பேர் பங்கேற்ற மற்றொரு சர்வேயில் சுமார் 78% பேர் ஆண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை பற்றி தெரிந்திருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டதாக கூறினார்.

ஆண்களுக்கான மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் முக்கிய ஆபத்து காரணிகளாக பரம்பரை மரபணு மாற்றங்கள், வாழ்க்கை முறை காரணிகள், உடல் பருமன், குடும்ப வரலாறு, ரேடியேஷன் வெளிப்பாடு, கல்லீரல் நோய். ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்க கூடிய நிலைகள் உள்ளிட்ட பல உள்ளன. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆண்களில் சுமார் 20% பேர், BRCA1 அல்லது BRCA2 மரபணு அல்லது CHECK2, PTEN அல்லது PALB2 போன்ற அதிக ஆபத்துள்ள மரபணுக்களில் பிறழ்வுகளை கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே மார்பக புற்றுநோய் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் மார்பக புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் நோய் தீவிரமாகும் முன்பே சரியான சமயத்தில் கண்டறிய உதவும். மார்பக புற்றுநோயின் பரவலை குறைக்க மற்றும் சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சையை பெறவு உதவும் என்று அறிவுறுத்துகிறார் மருத்துவர். மேலும் ஆண்கள் தங்கள் மார்பு பகுதி மற்றும் காம்பு பகுதியில் எவ்வித மாற்றங்களை கண்டாலும் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்கிறார்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Breast cancer, Men Health