ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் : நீண்ட காலத்துக்கு தாய்ப்பால் கொடுப்பது அம்மாக்களுக்கு நல்லதா..?

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் : நீண்ட காலத்துக்கு தாய்ப்பால் கொடுப்பது அம்மாக்களுக்கு நல்லதா..?

தாய்ப்பால்

தாய்ப்பால்

குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் தான் குழந்தைக்கு ஒரே மற்றும் முழுமையான உணவாகும். எனவே குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு அம்மாக்கள் தாய்ப்பால் குடுப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெண்களை அதிகமாக பாதிக்ககூடிய புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதலிடத்தில் இருக்கிறது. மேலும், உயிர்கொல்லி நோய்களிலும் மார்பகப் புற்றுநோய் முதன்மையான சில இடங்களில் உள்ளது.

எனவே உலகம் முழுவதிலுமே பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அக்டோபர் மாதம் பிங்க் மாதம் என்று அறிவிக்கப்பட்டு நோய் அறிகுறிகள் முதல் மீண்டு வருவது வரை பற்றிய விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிர்ச்சியூட்டும் விதமாக, எட்டில் ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் ஆபத்து இருக்கிறது.

மார்பகப் புற்றுநோயின் விழிப்புணர்வின் ஒரு பகுதியாக, தாய்ப்பால் கொடுப்பது பற்றிய பல சந்தேகங்களும் எழும். குழந்தைகளுக்கு எவ்வளவு காலம் வரை தாய்ப்பால் கொடுக்கலாம் அல்லது தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தால் மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்குமா அல்லது வழக்கமான காலத்தை விட நீண்ட காலத்துக்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது அம்மாக்களுக்கு ஆரோக்கியமானதா என்பது பற்றிய பல சண்டேஹ்கங்கள் உள்ளன. அதை பற்றிய விளக்கங்களை இங்கே பார்க்கலாம்.

குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால்

குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் தான் குழந்தைக்கு ஒரே மற்றும் முழுமையான உணவாகும். எனவே குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு அம்மாக்கள் தாய்ப்பால் குடுப்பதை உறுதிசெய்ய வேண்டும். ஒருவேளை குழந்தைக்கு போதிய அளவு தாய்ப்பால் சுரக்கவில்லை என்றால் மருத்துவரை அணுகி, காரணத்தை கண்டறிந்து உணவு பழக்கம், ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ் மற்றும் மருந்துகள் ஆகியவற்றை மருத்துவரின் ஆலோசனையில் சாப்பிடலாம். இது அடிப்படை! ஆறு மாதங்கள் கழித்து குழந்தைகளுக்கு திட உணவுகள் கூட்டம் தொடங்கலாம். அதன் பிறகு, எப்போது வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது என்ற கேள்வி அனைத்து அம்மாக்களுக்கும் எழும்.

Also Read :  30 வயதுக்கு மேல் மார்பக புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும் வழிகள் என்ன..?

எப்போது தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தலாம் - நீட்டிக்கப்பட்ட தாய்ப்பாலூட்டும் காலம்

தாய்மார்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சங்கடங்களில் ஒன்று எப்பொழுது தன்னுடைய குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது என்பது தான். குழந்தை வேறு உணவுகளை சாப்பிடத் தொடங்கினாலும் ஓரிரு வயது வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு, திடீரென்று தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் அல்லது வேறு உணவுகளை சாப்பிடாமல் அடம் பிடிக்கும். ஆனால் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கவும் முடியாது. எனவே தாய்ப்பால் கொடுப்பதை எப்போது நிறுத்துவது சரியானது?

ஒரு வயதுக்கு மேல் அல்லது toddler என்று கூறப்படும் குழந்தை நடக்க தொடங்கும் காலத்திலும் தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பது தான் நீட்டிக்கப்பட்ட தாய்ப்பால் கொடுக்கும் காலம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதனால் கிடைக்கும் நன்மைகள்:

குழந்தைக்கும் அம்மாவுக்கும் உள்ள பிணைப்பு அதிகரிக்கும். குழந்தையும் அம்மாவும் ஒன்றாக கணிசமான நேரத்தை செலவிடுவார்கள்.

தாய்ப்பால் முழுமையான ஊட்டச்சத்து கொண்ட உணவு. தாய்ப்பாலில் கொழுப்பு சத்து, லாக்டிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இது குழந்தைக்கு மிகவும் நல்லது.

குழந்தைக்கு சௌகரியமாக இருக்கும். அடம் பிடிக்கும் குழந்தைக்கு தாய்பால் கொடுப்பது எளிதில் கட்டுப்படுத்த உதவும். இரவில் நல்ல தூக்கம் வரும்.

Also Read :  பெண்களே உஷார்.. நீங்கள் சாப்பிடும் இந்த உணவால் குழந்தைகளுக்கு ஆபத்து! 

தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு மட்டுமல்ல, அம்மாவுக்கும் நல்லது. லைஃப்ஸ்டைல் நோய்கள் என்று கூறப்படும் உடல் பருமன், நீரிழிவு முதல் கேன்சர் ஆபத்து வரை நோய்கள் ஏற்படும் அபாயம் குறையும்.

எடை குறையும் :  குழந்தை பிறந்த பின்பு நீண்ட காலம் தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணுக்கு உடல் எடை கட்டுக்குள் வரும்.

இதனால் ஏற்படும் அசௌகரியங்கள்

ஒரு வயதுக்கு மேல் தாய்ப்பால் கொடுப்பது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் உணர்ச்சி பூர்வமான ஒரு பிணைப்பை ஏற்படுத்தும்; ஆனால் அதுவே பல நேரங்களில் உங்கள் குழந்தை அடம்பிடிக்க வைத்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும், கொடுத்தால்தான் அந்த பிடிவாதம் குறையும் என்ற ஒரு சூழல் ஏற்படுத்தும். இந்த நேரம் தான் என்று இல்லாமல் விரும்பும் போதெல்லாம் தாய்ப்பால் வேண்டும் என்ற வசதியை குழந்தை எதிர்பார்க்கும்.

Also Read :  ஏன் கர்ப்ப காலத்தின் போது அழகு சாதன பொருட்களை பயன்படுத்த கூடாது..?

வளர வளர குழந்தைகள் உணவு தேவை மாறிக் கொண்டிருக்கும். அப்போது தாய்ப்பால் மட்டும் போதாது. மற்ற உணவுகளும் சாப்பிட வேண்டும். ஆனால் குழந்தைகள் மற்ற உணவுகளை தவிர்த்தால் பெரும்பாலான நேரம் பசியாக இருக்கும். அதை பொதுவெளியில் கூறும்போது நீங்கள் அவமானப்படுவது போல காணப்படும்.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு குழந்தைகளுக்கு நீண்ட காலம் தாய்ப்பால் கொடுப்பது மிகப்பெரிய அசௌகரியமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் தாய்ப்பால் கொடுப்பது என்பது இயற்கையாகவே மாதவிடாய் சுழற்சி மற்றும் ஓவலேஷனைக் கட்டுப்படுத்தும். எனவே அடுத்த குழந்தைக்கு திட்டமிட்டிருந்தால் தாமதமாகிவிடும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Breast cancer, Breastfeeding