Home /News /lifestyle /

மரணத்தை ஏற்படுத்தும் மூளைக்கட்டி வர என்ன காரணம்..? யாருக்கெல்லாம் வரக்கூடும்..?

மரணத்தை ஏற்படுத்தும் மூளைக்கட்டி வர என்ன காரணம்..? யாருக்கெல்லாம் வரக்கூடும்..?

மூளைக்கட்டி

மூளைக்கட்டி

பொதுவாக நம்முடைய மூளைத் திசுவில் நேரடியாக நுழைவதால் பார்வை இழத்தல், பேசும் திறன், கேட்கும் திறன் மற்றும் நினைவாற்றல் போன்ற இழப்பு ஏற்படும்.

மூளையில் உள்ள அசாதாரண உயிரணுக்களின் வளர்ச்சியினால் ஏற்படும் மூளைக்கட்டி கேன்சராகவும் மாறக்கூடும். மேலும் மரபு ரீதியாகவும் இந்நோய் பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைக்கு உள்ள சூழலில் மக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை மருத்துவத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பயன்படுத்துகிறோம் என்று தான் கூற வேண்டும். அந்தளவிற்கு புதிய புதிய பெயர்களுடன் நோய் தாக்கம் மக்களை அல்லல்படுத்தி வருகிறது. இதில் சில நோய்களுக்கு மருந்தும் இல்லை.. எப்படி பாதிப்பை மக்களுக்கு ஏற்படுத்துகிறது என்பதற்கான ஆதாரமும் என இல்லை என நிரூபணமாகியுள்ள நிலையில், அப்படிப்பட்ட ஒரு நோயின் பாதிப்பு மற்றும் அறிகுறிகள் என்ன? என்பது குறித்து அறிந்து கொள்வோம்.

மரணம் வரை கொண்டு செல்லும் மூளைக்கட்டி:

மூளையில் உள்ள அசாதாரண உயிரணுக்களின் வளர்ச்சியினால் ஏற்படும் மூளைக்கட்டி இரண்டு வகைகளாக உள்ளது. முதல் வகை கட்டியானது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கும். மேலும் சில சமயங்களில் கேன்சர் செல்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். அடுத்தப்படியாக இரண்டாம் வகை மூளைக்கட்டியானது புற்றுநோய் செல்களைக் கொண்டதாகவே இருக்கும். குறிப்பாக உடலின் எந்த பகுதியிலும் வந்தாலும் நேரடியாக மூளையை பாதிக்கும் அபாயத்தை கொண்டுள்ளது.

இந்த நோய் எந்த வயதிலும், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என தெரிவித்தாலும் இது தான் காரணம் என்று தெளிவாக மருத்துவத் துறை இதுவரை கூறவில்லை. ஒரு வேளை குடும்பத்தில் யாருக்காவது மூளைக்கட்டி பாதிப்பு இருந்தால் மரபு ரீதியாக பாதிப்பை அவர்களின் வாரிசுகளுக்கு ஏற்படுத்தலாம் எனவும், அளவுக்கு அதிகமாக கதிர்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் கூறப்படுகிறது. இதனை ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளவில்லை என்றால், மரணம் வரைக் கூட நம்மை இட்டுச்செல்லும்.. இது போன்று பல்வேறு அபாயங்கள் நிறைந்த நோய் நமக்கு உருவாகும் போது சில அறிகுறிகளை நமக்கு ஏற்படுத்தும்.மூளைக்கட்டி பாதிப்பின் அறிகுறிகள்..

மூளைக்கட்டி வளரும் இடம், அதன் அளவு மற்றும் வளரும் வேகம் ஆகியவற்றை பொறுத்து அதன் அறிகுறிகள் மாறுபடும்.

* பொதுவாக நம்முடைய மூளைத் திசுவில் நேரடியாக நுழைவதால் பார்வை இழத்தல், பேசும் திறன், கேட்கும் திறன் மற்றும் நினைவாற்றல் போன்ற இழப்பு ஏற்படும்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் : பெண்கள் கவனிக்க வேண்டிய 10 அறிகுறிகள்...

* படிப்படியாக அடிக்கடி ஏற்படும் கடுமையான தலைவலி.

* அதிகப்படியான குமட்டல் அல்லது வாந்தி

* மங்கலான பார்வை, இரட்டை பார்வை அல்லது புற பார்வை இழப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.

* ஒரு கை அல்லது காலில் உணர்வு இல்லாமல் இருந்து முற்றிலும் இயங்காமல் போய்விடும். சில சமயங்களில் வலிப்புகளும் ஏற்படும்.

* உடலுக்கு அதிகப்படியான சோர்வு மற்றும் அன்றாட வாழ்வில் குழப்பமான சூழலை உணர்வோம்.மூளைக்கட்டி பாதிப்பை எப்படி சரிசெய்வது?

மேற்கூறிய அறிகுறிகள் ஏற்படுவது போன்று நீங்கள் உணர்ந்தால், முதலில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். பின்னர் மூளை மற்றும் நரம்பியல் சோதனைகளின் மூலமே உறுதி செய்யப்பட்டு அதற்கான சிகிச்சைகள் வழங்கப்படும். அறுவை சிகிச்சை, ரேடியேஷன், கீமோதெரபி, வலிப்புக்கான சிகிச்சைகள், ஸ்டீராய்டு மருந்துகள் போன்றவற்றின் மூலம் சிகிச்சைகள் மேற்கொள்ளலாம்.

இளம் வயதிலேயே டிமென்ஷியா... அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் என எச்சரிக்கும் மருத்துவர்கள்

இதோடு ஆரோக்கியான தூக்கம், மன அழுத்தம் இன்றி அமைதியாக இருக்க முயல்வது, யோகா, தியானம், சுவாசப்பயிற்சி போன்றவற்றைப் பின்பற்றி உங்களது உடல் ஆரோக்கியத்தை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள முயலலாம்.. இதோடு புற்றுநோயை எதிர்த்துப்போராடக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுப்பழக்கத்துக்கு மாறுவதோடு, அதிகளவில் செல்போன் உபயோகத்தைப் பயன்படுத்தாமல் இருக்க முயற்சித்து மூளைக்கு சற்று ஓய்வு கொடுக்க முயற்சிக்கலாம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Brain tumor, Brain Tumour

அடுத்த செய்தி