Home /News /lifestyle /

உடலை ஃபிட்டாக வைத்திருந்தாலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுமா? மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன?

உடலை ஃபிட்டாக வைத்திருந்தாலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுமா? மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன?

உடற்பயிற்சி மற்றும் உயர் ரத்த அழுத்தம்.

உடற்பயிற்சி மற்றும் உயர் ரத்த அழுத்தம்.

உடற்பயிற்சி செய்தால் உடலுக்கு நன்மைகள் அதிகம் என்றாலும் சில விஷயங்களை சரியாக கடைப்பிடிக்காவிட்டால் உடலுக்கு ஏற்படும் சில தீமைகளை தடுக்க முடியாது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி போன்றவற்றை முறையாக மேற்கொண்டாலும் அதிக கொலஸ்ட்ரால், உடல் அமைப்பு, இன்றைக்கு மாறி வரும் உணவு பழக்க வழங்கங்கள் மற்றும் மரபு ரீதியியல் போன்ற காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் ( High BP) ஏற்படும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

    “சைலன்ட் கில்லர்“ என அழைப்பதற்கு ஏற்றால் போல் உயர் இரத்த அழுத்தப் பாதிப்பால் இந்தியாவில் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. முன்னதாக எவ்வித அறிகுறியும் காட்டாமல் நம்முடன் இருக்கும் இப்பிரச்சனையால் எட்டு இந்தியர்களில் ஒருவர் உயிரிழக்கின்றனர் என்கிறது புள்ளி விபரங்கள்.

    மேலும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்த தகவலின் படி, இந்தியாவில் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் 12 சதவீதம் பேர் மட்டுமே உடலைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். சமீப காலங்களாக 30 வயது முதல் 40 வயதுள்ளவர்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில் முதலில் உயர் இரத்த அழுத்தம் எவ்வாறு அளவீடப்படுகிறது என தெரிந்துக் கொள்வோம்.

    நம்முடைய உடலில் ரத்த அழுத்தம் mmHg என்னும் அளவீட்டால் அளக்கப்படும் நிலையில், 120/80 mmHg இரத்த அளவு இருந்தால் உடல் சீராக இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் 130/80 mmHg க்கு மேல் இருந்தால் உயர் இரத்த அழுத்தம் எனவும் 90/60 mmHg என்ற அளவோ? அல்லது அதற்கு குறைவாக இருந்தால் குறைந்த இரத்த அழுத்தம் என கணக்கிடப்படுகிறது.

    ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால் பக்கவாதம், மாரடைப்பு ஏற்படுவதோடு சில சமயங்களில் மரணம் உண்டாகிறது. எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். ஆனால் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் பலருக்கும் இரத்த அழுத்தம் ஏற்படும் நிலையில் இதற்கு என்ன காரணம்? என மருத்துவர்கள் தரும் விளக்கங்களைத் தெரிந்துக் கொள்வோம்.

    உடற்பயிற்சி செய்தாலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுமா?

    இதுகுறித்து மும்பையில் உள்ள சிம்பயோசிஸ் மருத்துவமனையின் இயக்குனர் கேத் லேப் மற்றும் இன்டர்வென்ஷனல் கார்டியலஜிஸ்ட் மருத்துவர் அங்கூர் பதர்பேகர் தெரிவிக்கையில், உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு ஒருவருக்கு பல காரணங்களால் ஏற்படுகிறது.

    அதிக கொலஸ்ட்ரால், உடல் பருமன், உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் மரபு ரீதியியல் என்பது போன்ற காரணங்களால் எப்படி நாம் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்திருப்பதாலும் இப்பாதிப்பு நமக்கு ஏற்படும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

    உயர் இரத்த அழுத்த பாதிப்பை எப்படி தடுப்பது?

    உயர் இரத்த அழுத்த பாதிப்பு அதாவது BP பிரச்சனை உங்களுக்கு இருக்கிறதா? என்பதை மருத்துவ பரிசோதனை மூலம் அறிந்துக் கொள்ள வேண்டும். இது தவிர தவிர ECG, ECHO,CBC, KFT, LFT, Lipid profile, Fasting Blood Sugar, Urine Routine போன்ற வழக்கமான பரிசோதனைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

    குறிப்பாக 30 வயதிற்கு மேல் ஆகிவிட்டால் ஆண்டிற்கு ஒரு முறையாவது ECG சோதனையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள்.

    மேலும் உங்களை அறியாமலே உங்களுக்கு ஹை பிபி ஏற்படும் நேரத்தில் தலைவலி, மூச்சுத் திணறல், மூக்கில் இரத்தம் வருவது போன்றவை ஏற்படும். எனவே கவனமுடன் இருக்க வேண்டும். இதோடு வழக்கம் போல உடற்பயிற்சியும் செய்ய வேண்டும் என பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள்.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Fitness, Health

    அடுத்த செய்தி