ஒருவருக்கு இருக்கும் சிறப்பான குடல் ஆரோக்கியம் நல்ல செரிமான சக்தியை மட்டுமின்றி அவரது ஒட்டுமொத்த நல்வாழ்வையும் உறுதி செய்கிறது. எனவே தான் எப்போதுமே நாம் என்ன மாதிரியான உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுகிறோம் என்பது முக்கியமானதாக இருக்கிறது.
ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிட தவறும் போது தான் ஒருவர் மலசிக்கல், அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இந்த பிரச்னைகளை சந்திக்கும் மக்கள் உடனடியாக மலமிளகிக்கிளை நாடுகின்ற சூழலும் ஏற்படுகிறது. ஆனால் மலமிளக்கிகளுக்கு பதில் ப்ரூன்ஸ் (prunes) இந்த சிக்கல்களை சரி செய்ய உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா.?
ப்ரூன்ஸ் என்பது ஒரு உலர வைக்கப்பட்ட ப்ளம்ஸ் ஆகும், இது பொதுவாக ஐரோப்பிய ப்ளம்ஸில் இருந்து கிடைக்கிறது. பிரபல ஊட்டச்சத்து நிபுணரான ராஷி சௌத்ரி சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் ப்ரூன்ஸ் சாப்பிடுவதன் நன்மைகளை பற்றி விளக்கி உள்ளார். ராஷி சௌத்ரி குறிப்பிட்ட இந்த இன்ஸ்டா போஸ்ட்டில் "உங்கள் குடல் இயக்கத்தை சீராக்க மலமிளக்கிகளை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.
இயற்கையான் முறையில் குடல் இயக்கத்தை சீராக்குவதற்கான வழிகளுக்கு எப்போதும் செல்லுங்கள். இதற்கு முழுக்க முழுக்க பொறுமை தேவைப்படும் என்றாலும் உண்மையான மற்றும் ஆரோக்கியமான ஒரு உணவு எப்போதும் மருந்தை வெல்லும்!" என்று ப்ரூன்ஸ் பற்றி விளக்கி கேப்ஷன் கொடுத்து உள்ளார்.
View this post on Instagram
ப்ரூன்ஸ் பற்றிய இந்த பாயிண்ட்ஸ்களை மனதில் வைத்து கொள்ளுங்கள் என்று ராஷி சௌத்ரி கூறியிருப்பதாவது:
* உலர் ப்ளம்ஸில் அதாவது ப்ரூன்ஸில் நார்ச்சத்து நிறைய உள்ளது. உங்கள் தினசரி தேவைகளில் 20% நார்ச்சத்து 7-8 ப்ரூன்ஸிலேயே பூர்த்தி செய்யப்படும். நல்ல பலன் கிடைக்க வேண்டும் என்றால் தினசரி 25-30 கிராம் தேவை. சிலர் 35 கிராம் ப்ரூன்ஸ் எடுத்து கொண்டு ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.
* இதில் மலமிளக்கிய விளைவை கொண்டுள்ள sorbitol எனப்படும் சர்க்கரை ஆல்கஹால் உள்ளது. எனவே உங்களுக்கு எவ்வளவு சாப்பிட்டால் சரியாக இருக்கும் என்று தெரிந்து கொண்டு தினசரி இதை சாப்பிடுவது நல்ல பலன்களை தரும்.
உணவை சூடாக்க மைக்ரோவேவ்-ஐ பயன்படுத்த கூடாது : இந்த 5 பாதிப்புகள்தான் காரணம்..!
* நான் ஏற்கனவே அறிந்த உணவுகள் என் குடலை தூண்டி மலச்சிக்கலை உண்டாக்கினால், நான் அன்றைய தினம் சற்று அதிகமான ப்ரூன்ஸ்களை அதிகம் சேர்த்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் ராஷி சௌத்ரி.
* உங்களின் ஒட்டுமொத்த நீர் உட்கொள்ளும் அளவு சற்று அதிகரிக்கிறது என்பதைத் தவிர
மலச்சிக்கலுக்கு இரவு முழுவதும் நீரில் ஊறவைத்த ப்ரூன்ஸ்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
* ஒவ்வொரு நாள் காலையும் எளிதான தளர்வான குடல் இயக்கத்திற்கு மிதமான அளவு கார்போஹைட்ரேட்ஸ் சாப்பிடுங்கள், ஆரோக்கியமிக்க காய்கறிகளை சாப்பிடுங்கள் !! அத்தியாகி தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் உடலை எப்போதும் ஹைட்ரேட்டாக வைத்திருங்கள்.
ப்ரூன்ஸை ஜூஸ், கேக், ஜாம், இனிப்புகள், என பல விஷயத்தில் பயன்படுத்தலாம். அதிக இரும்பு சத்து கொண்டது. ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Constipation, Gut Health