Home /News /lifestyle /

5 முதல் 50 வரை... பாரபட்சமின்றி தாக்கும் குடல் புற்றுநோய் : வரும் முன் காப்பது எப்படி..?

5 முதல் 50 வரை... பாரபட்சமின்றி தாக்கும் குடல் புற்றுநோய் : வரும் முன் காப்பது எப்படி..?

குடல் புற்றுநோய்

குடல் புற்றுநோய்

குடல் புற்றுநோய் குறித்த அறிக்கை ஒன்றில் சுமார் 90% பாதிப்புகள், 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் கண்டறியப்படுவதாக கூறப்பட்டுள்ளது. எனவே 5 வயதிற்கு மேற்பட்டவர்கள் துவக்க நிலையிலேயே குடல் புற்றுநோயை கண்டறிந்து மேலும் பரவாமல் தடுக்க, ரெகுலர் செக்கப் செய்து கொள்வது அவசியமாகிறது.

மேலும் படிக்கவும் ...
சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் மரபணு காரணிகளால் மனித உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி காணப்படுகிறது. எனவே வயது, பாலினம் உள்ளிட்டவற்றை பொருட்படுத்தாமல் உலகில் கோடிக்கணக்கான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

கேன்சர் கண்டறியப்படுவதற்கான வாய்ப்புகள் வயதுக்கு ஏற்ப அதிகரிக்கும். குடல் புற்றுநோய் விஷயத்திலும் இதுவே நிகழ்கிறது. குடல் புற்றுநோய் குறித்த அறிக்கை ஒன்றில் சுமார் 90% பாதிப்புகள், 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் கண்டறியப்படுவதாக கூறப்பட்டுள்ளது. எனவே 5 வயதிற்கு மேற்பட்டவர்கள் துவக்க நிலையிலேயே குடல் புற்றுநோயை கண்டறிந்து மேலும் பரவாமல் தடுக்க, ரெகுலர் செக்கப் செய்து கொள்வது அவசியமாகிறது. குடல் புற்றுநோயின் சில பொதுவான அறிகுறிகள் மற்றும் ஆபத்து காரணிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..

குடல் புற்றுநோய் என்றால் என்ன?

இங்கே குடல் புற்றுநோயானது பெருங்குடல் மற்றும் மலக்குடல் உள்ளிட்டவற்றில் ஏற்படும் புற்றுநோயையும் குறிக்கிறது. இந்த நோய் பொதுவாக குடலின் உட்புறத்தில் தோன்றி பெருங்குடல் முழுவதும் பரவி மலக்குடல் வரை பாதிப்பை ஏற்படுத்தும். பெருங்குடலின் உட்சுவரில் சாதாரண சிறிய கட்டி அல்லது புண்ணாக துவங்கும். இந்த கட்டிகள் பாலிப்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இவை ஒரு கட்டத்தில் கேன்சர் கட்டிகளாக உருமாறி குடல் புற்றுநோயை ஏற்படுத்தி கடும் அவதியை அளிக்கும்.



ஆரம்பத்தில் பாலிப்ஸ்கள் கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்தாது என்பதால் குறைந்தபட்ச பிரச்சனைகளே ஏற்படும். வழக்கமான ஸ்கிரீனிங் மூலம் மட்டுமே கண்டறிய முடியும். ஆரம்ப நிலையிலேயே பாலிப்ஸ்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி உயிரை காப்பாற்ற முடியும்.

காய்ச்சல் இன்றி COVID-19 தொற்றால் ஒருவர் பாதிக்கப்படுவது சாத்தியமா..?

குடல் புற்று நோய்க்கான பொதுவான அறிகுறிகள்..

குடல் புற்றுநோயின் சில வெளிப்படையான அறிகுறிகள் பின்வருமாறு: மலம் கழிப்பதில் திடீரென ஏற்படும் சிரமங்கள் அல்லது மாற்றங்கள், அடிக்கடி வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் ஏற்படுவது, மலக்குடலில் ரத்தப்போக்கு அல்லது மலத்தில் ரத்தம் வருவது, வயிற்று பகுதியில் எப்போதும் அசௌகரியம் இருப்பது, பலவீனம் அல்லது சோர்வு, திடீர் எடை இழப்பு, டாய்லெட் சென்று வந்த பிறகும் முழுமையாக மலம் கழிக்கவில்லை என்ற உணர்வு.



குடல் புற்றுநோயின் அசாதாரண அறிகுறிகள்:

குடல் புற்றுநோய் பல அறிகுறிகளை காட்டும். இதில் பெரும்பாலானவை செரிமான மண்டலத்துடன் தொடர்புடையதாக இருக்கும். அப்படி இருந்தால் கண்டறிவது மிகவும் எளிது. எனினும் சில நேரங்களில் அசாதாரண அறிகுறிகளும் வெளிப்படும். புற்றுநோய் செல்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவத் தொடங்கும் அசாதாரண அறிகுறிகள் வெளிப்படலாம். இதன்படி இரும்புச்சத்து குறைபாடு அனீமியா, மலத்தின் நிறத்தில் மாற்றம், மஞ்சள் காமாலை, கைகள் அல்லது கால்களில் வீக்கம், சுவாச பிரச்சனைகள், நாள்பட்ட தலைவலி, பார்வை மங்கல், எலும்பு பலவீனம் உள்ளிட்ட பல அடங்கும்.

ஏன் வைட்டமின் டி-ஐ வைட்டமின் கே உடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்..?

ஆபத்து காரணிகள்:

அதிக எடை அல்லது உடல் பருமன், தொடர் புகைப்பழக்கம், சரியாக கவனித்து கொள்ளப்படாத டைப் 2 நீரிழிவு நோய், உடல்செயல்பாடுகளின்றி அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பது, பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை அதிகம் சாப்பிடுவது குடல் புற்றுநோய் உள்ளிட்ட பல தீவிர பெரும்பாலும் மோசமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களால் ஏற்படுகின்றன. எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் நலமுடன் வாழலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Bowel Cancer

அடுத்த செய்தி