ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

எவ்வளவு சளி இருந்தாலும் முறித்து எடுக்கும் மிளகு கஷாயம்... எப்படி போட வேண்டும்..?

எவ்வளவு சளி இருந்தாலும் முறித்து எடுக்கும் மிளகு கஷாயம்... எப்படி போட வேண்டும்..?

மிளகு கஷாயம்

மிளகு கஷாயம்

black pepper kashayam : இப்போது பனி, மழை என இரண்டுமே மாறி மாறி இருப்பதால் பலருக்கும் இந்த பருவ மாற்றத்தை எதிர்கொள்ளும் சக்தி குறைவாகவே உள்ளது. எனவே இதுபோன்ற சமயத்தில் மிளகு உங்களுக்கு கைக்கொடுக்கலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மிளகுக்கு ’Black Gold’ என்கிற செல்லப் பெயரும் உண்டு. அதனால்தான் அதன் விலையும் அதிகமாக உள்ளது. காரணம் அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம் . அதன் மருத்துவ குணங்களில் பிரதானமான பலன் சளி , இருமலை விரட்டி அடிப்பதுதான். அந்த வகையில் இப்போது பனி, மழை என இரண்டுமே மாறி மாறி இருப்பதால் பலருக்கும் இந்த பருவ மாற்றத்தை எதிர்கொள்ளும் சக்தி குறைவாகவே உள்ளது. எனவே இதுபோன்ற சமயத்தில் மிளகு உங்களுக்கு கைக்கொடுக்கலாம். அந்த வகையில் இந்த மிளகு கஷாயத்தை வீட்டிலேயே செய்து குடித்து பாருங்கள்.

  மிளகு நன்மைகள் :

  கருப்பு மிளகில் வைட்டமின்கள், விட்டமின் சி, பி6 மற்றும் விட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துகள் நிறைவாக உள்ளன. அதோடு ஜிங்க், சோடியம் , மக்னீசியம், பொட்டாசியம் , பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்களும் மிளகில் நிறைவாக உள்ளன. குறிப்புக்கா உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் மிளகில் நிறைவாக இருப்பதாலேயே சளி, காய்ச்சல் , இருமல் , தொண்டை புண் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரிய மருத்துவ முறையிலும் மிளகு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

  சரி... மிளகு கஷாயம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்...

  தேவையான பொருட்கள் :

  கருப்பு மிளகு - 1/4 கப்

  துளசி - 10 இலைகள்

  பனை வெல்லம் - 2 tbs

  தண்ணீர் - 2 கப்

  செய்முறை :

  கடாய் வைத்து மிளகை வெடிக்கும் வரை சூடேற்றி வறுக்க வேண்டும்.

  பின் அவற்றை உரலில் நன்கு இடித்துக்கொள்ளுங்கள்.

  PCOS இருந்தா காஃபி குடிக்கக் கூடாதாம் : நிபுணர்கள் கருத்து..!

  பின் பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் இடித்த மிளகு , வெல்லம் , துளசி இலை சேத்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

  தட்டுப்போட்டு மூடி விடுங்கள். 15 நிமிடங்கள் கொதித்தால் போதும்.

  இறுதியாக வடிகட்டி வெது வெதுப்பாக குடித்தால் சளி, இருமல், தொண்டை வலி நீங்கும்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Cold, Cough, Pepper