மக்களை அச்சுறுத்தி வரும் கரும்பூஞ்சை தொற்றுக்கான அறிகுறிகளில் தலைவலியும் ஒன்றா.?

தலைவலி | Headache

கரும்பூஞ்சை எனப்படுவது உண்மையில் இறந்த திசு ஆகும். பூஞ்சை தொற்று ரத்த நாளங்கள் மீது படையெடுத்து திசு இறப்பை ஏற்படுத்துகிறது.

  • Share this:
நாட்டில் கோவிட்-19 பாதிப்புகள் ஒரு பக்கம் மக்களை பீதியில் வைத்துள்ள நிலையில், திடீரென்று வேகமாக பரவி வரும் கரும்பூஞ்சை தொற்று மறுபக்கம் மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கரும்பூஞ்சை தொற்று குறிப்பாக COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே காணப்படுகிறது.

எனவே தான் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கரும்பூஞ்சை தொடர்பான ஒவ்வொரு உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்து மாநில அரசுகளால் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. நோயெதிர்ப்பு மிகவும் குறைவாக காணப்படும் நபர்களை இந்த கரும்பூஞ்சை தொற்று தாக்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில் கொரோனா வைரஸ் கோவிட் நோயாளிகளின் நோயெதிர்ப்பு மண்டலத்தை கடுமையாக பாதிப்படைய செய்கிறது. கரும்பூஞ்சை எனப்படுவது உண்மையில் இறந்த திசு ஆகும். பூஞ்சை தொற்று ரத்த நாளங்கள் மீது படையெடுத்து திசு இறப்பை ஏற்படுத்துகிறது. நாசி பாதைகள் வழியே பரவும் இந்த பூஞ்சைகள் கண்கள் மற்றும் மூளையை உள்ளிட்ட பகுதிகளை பாதித்து இறுதியாக மரணமடைய நேரிடும்.

நாட்டில் இதுவரை 11,000-க்கும் மேற்பட்டவர்கள் கரும்பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வெள்ளை மற்றும் மஞ்சள் என இரண்டு புதிய வகை பூஞ்சை தொற்று நோய்களும் மக்களிடையே காணப்படுகின்றன. கரும்பூஞ்சை தொற்றை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் ஆபத்தை தவிர்க்கலாம். கொரோனாவை போல கரும்பூஞ்சை நோய் தொற்றுக்கென சில அறிகுறிகள் உள்ளன அதில் தொடர்ச்சியான தலைவலியும் ஒன்று.பூஞ்சை தொற்றுக்கும் தலைவலிக்கும் உள்ள தொடர்பு.!

தற்போது இந்த தொற்று பெரும்பாலும் கோவிட் நோயாளிகளுக்கு தான் ஏற்பட்டு வருகிறது. கோவிட்-19 தோற்றால் பாதிக்கப்படும் போது தலைவலி ஏற்படுவது பொதுவானது என்றாலும், தொற்றிலிருந்து மீளும் காலமான 14 நாட்களுக்கு பிறகும் கோவிட்டால் பாதிப்படைந்த ஒருவருக்கு தொடர்ந்து தலைவலிப்பது என்பது கரும்பூஞ்சை தொற்றுக்கான அறிகுறியாக கூட இருக்கலாம். கொரோனா நோயாளிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகும் நீடித்த தலைவலி இருப்பது உண்மையில் பூஞ்சை காரணமாக ஏற்படும் அழற்சி மற்றும் தொற்றுக்கான ஆரம்ப அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புகளை கொண்ட மக்களை இது தாக்கும் நேரத்தில் நோய் கிருமியான பூஞ்சை நுண்துகள்களை ஒருவர் சுவாசிக்கும் போது, அவர்கள் சுவாச மண்டலத்திற்குள் நுழைந்து அவர்களின் சைனஸ், மூளை அல்லது நுரையீரலைப் பாதிக்கிறது. இது தொடர் தலைவலி அல்லது முகத்தின் ஒரு பக்கத்தில் வீக்கம் உள்ளிட்டவற்றிற்கு வழிவகை செய்கிறது.

கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை பற்றி பரவும் இந்த வதந்திகளை நம்பாதீர்கள் : உண்மை இதுதான்..!

பிற அறிகுறிகள்:

கரும்பூஞ்சை தொற்றின் பிற அறிகுறிகள் குறித்து பேசிய டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா, வாயில் நிறமாற்றம் மற்றும் முகத்தின் எந்தப் பகுதியிலும் உணர்வு குறைதல் ஆகியவை இந்த பூஞ்சை தொற்றுக்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்கிறார். சைனஸ் பேஸேஜில் இருந்து கரும்பூஞ்சை தொற்று தொடங்கும் போது, பலர் மூக்கடைப்பை அனுபவிக்க நேரிடும். கடும் கரும்பூஞ்சை தொற்று ஏற்பட்டால், பூஞ்சை முகத்தில் வேகமாக பரவுகிறது. இது முக சிதைவு ஏற்பட காரணமாகிறது. சில நோயாளிகள் பற்கள் இழப்பதை கரும்பூஞ்சை தொற்றின் முதன்மை அறிகுறியாக கூறி உள்ளனர் என்கிறார்.தொற்றை எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகிறது.?

வழக்கமாக பூஞ்சை தொற்றைக் கண்டறிய சைனஸின் எக்ஸ்ரே அல்லது சி.டி ஸ்கேன் பயன்படுத்தப்படுகிறது. தவிர நாஸல் எண்டோஸ்கோபி மூலம் எடுக்கப்படும் பயாப்ஸி மற்றொரு முறை. இவை தவிர, மருத்துவர்கள் சில நேரங்களில் பூஞ்சை தொற்று இருப்பதைக் கண்டறிய பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (PCR)) அடிப்படையிலான ரத்த பரிசோதனை எடுக்க பரிந்துரைக்கின்றனர். கரும்பூஞ்சை தொற்று பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, நீரிழிவு மற்றும் எச்.ஐ.வி போன்ற அடிப்படை மருத்துவ நிலை கொண்ட எந்தவொரு நபருக்கும் ஏற்படலாம். COVID-19 நோயாளிகளை பொறுத்தவரை, கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் மற்றும் ஸ்டெராய்டுகளின் அதிகப்படியான பயன்பாடு ஆகியவை கரும்பூஞ்சை தொற்றை தூண்டும் என்று நம்பப்படுகிறது.

 
Published by:Sivaranjani E
First published: