Home /News /lifestyle /

கருத்தடை பற்றி தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன..? 

கருத்தடை பற்றி தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன..? 

கருத்தடை பற்றி தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டியவை

கருத்தடை பற்றி தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டியவை

பிறப்புக் கட்டுப்பாட்டின் பயன்பாடு பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது, ஆனாலும் இன்று வரை பல விஷயங்களில் தம்பதிகள் கருத்தடை பற்றி விழிப்புணர்வு பெறவில்லை என்பது தெளிவாகிறது.

எதிர்பாராத மற்றும் திட்டமிடப்படாத கர்பத்தை தடுக்க கருத்தடை என்பது பயனுள்ளதாக உள்ளது. கர்ப்பங்களைக் கட்டுப்படுத்த பல பிறப்பு கட்டுப்பாடு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. மாத்திரைகள், ஊசி, ஆணுறைகள், காப்பர் ஐயூடி. போன்ற பல்வேறு வகைகளில் பல்வேறு கருத்தடை முறைகள் உள்ளன.

பிறப்புக் கட்டுப்பாட்டின் பயன்பாடு பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது, ஆனாலும் இன்று வரை பல விஷயங்களில் தம்பதிகள் கருத்தடை பற்றி விழிப்புணர்வு பெறவில்லை என்பது தெளிவாகிறது. எனவே கருத்தடை குறித்தும், அதுபற்றிய சில சந்தேகங்களுக்கும் இங்கே விளக்கமளித்துள்ளோம்.

பல்வேறு வகையான கருத்தடை முறைகள்:

தற்காலிக முறைகள்: இந்த முறையானது எதிர்காலத்தில் குழந்தைகளைப் பெற திட்டமிடும் ஆனால் தற்போதைக்கு குழந்தை வேண்டாம் என நினைக்கும் தம்பதிகளுக்கானது. இந்த முறையில் தடைகளை உருவாக்குவதன் மூலமாக கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. மாத்திரைகள், ஆணுறைகள், கருப்பைக்குள் கருத்தடை சாதனங்கள் போன்றவை இந்த கருத்தடை முறையை பின்பற்ற பயன்படுத்தலாம்.

நிரந்தர முறைகள்: இவை நிரந்தரமாக கருத்தரிப்பதை தடை செய்யும் முறைகள் ஆகும். அதாவது இனி குழந்தையே வேண்டாம் என முடிவெடுக்கும் அல்லது ஏற்கனவே போதுமான அளவு மழலை செல்வங்களை கொண்டிருக்கும் தம்பதிகளுக்கானது. கருமுட்டைக் குழாய்களை அடைக்கும் விதமாக மினிலாபரோட்டமி, லேப்ராஸ்கோபி ஆகிய சிகிச்சை முறைகள் மூலமாக அடிவயிற்றில் உள்ள ஃபலோபியன் குழாய்கள் வெட்டப்படுகின்றன அல்லது தடுக்கப்படுகின்றன.பெண்களுக்கான இந்த சிகிச்சை முறை கர்ப்பம் தரிப்பதை நிரந்தரமாக தடுக்க உதவுகிறது. ஆண்களுக்கு காடரி அல்லது நான் -ஸ்கால்பெல் வாஸெக்டமி சிகிச்சை முறைகள் மூலமாக விந்தணுவை ஆண்குறிக்கு கொண்டு செல்லும் வாஸ் டிஃபெரன்ஸ் பகுதியை துண்டிப்பது அல்லது அடைப்பதன் மூலமாக நிரந்தர கருத்தடையை உருவாக்க முடியும்.

நல்ல வாழ்க்கை துணைக்கான அர்த்தம் என்ன தெரியுமா..? இதை படியுங்கள்...

அவசர கருத்தடை மாத்திரை (ECP): இது பொதுவாக திட்டமிடப்படாத அல்லது பாதுகாப்பற்ற உடலுறவில் ஏற்படும் அவசர நிலையைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. பொதுவாக உடலுறவின் 72 மணி நேரத்திற்குள் மாத்திரைகளை உட்கொள்ளப்படுவதன் மூலமாக கருத்தரிப்பை தடை செய்கிறது.

கர்ப்ப பரிசோதனை கருவிகள் (PTKs): இது கர்ப்பத்தை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவுகிறது. மாதவிடாய் சுழற்சியை தவறவிட்ட ஒரு வாரத்திற்கு முன்பே கர்ப்பத்தை கண்டறிவதன் மூலம், அது தம்பதியருக்கு கர்ப்பத்தை நிறுத்துவதற்கு போதுமான வாய்ப்பை வழங்குகிறது.கருத்தடை குறித்து தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டியவை:

பிறப்பு கட்டுப்பாடுகள் தம்பதியினருக்கு இடையேயான பாலியல் தூண்டலை பாதிக்காது.

நீங்கள் ஒரு பிறப்புக் கட்டுப்பாட்டைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​நிரூபிக்கப்பட்ட செயல்திறன், நம்பகத்தன்மை, பக்க விளைவுகள் மற்றும் சாத்தியமான உடல்நல அபாயங்களைக் கண்டறிய வேண்டும்.

40 வயதை கடந்துவிட்டால் குழந்தை பெற்றுக்கொள்ள IVF சிகிச்சைதான் தீர்வா..?

அவசர கருத்தடை மாத்திரைகளை வழக்கமான கருத்தடைக்கு மாற்றாக கருதக்கூடாது.

கருத்தடைகளைப் பற்றிய பரிந்துரைகளுக்கு ஒருவர் எப்போதும் பயிற்சி பெற்ற நிபுணரைத் தொடர்பு கொள்ள வேண்டும். பயிற்சி பெற்ற ASHAக்கள், ANMகள், LHVகள், SNகள் மற்றும் மருத்துவர்கள் இந்த செயல்முறைகளை பின்பற்ற உங்களுக்கு வழிகாட்ட முடியும்.கருத்தடை மாத்திரைகள் உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்காது, எப்போதும் போல் சாதாரணமாகவே இருக்கும் என பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சில ஆராய்ச்சி ஆய்வுகளின்படி, வாய்வழி கருத்தடை மாத்திரைகள் பெண்களுக்கு புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கருப்ப வாய்க்குள் பொருத்தப்படும் கருவிகள் சிறந்த கருத்தடை சாதனங்களாக கருதப்படுகிறது.

இதை மட்டும் கவனிச்சு பாருங்க... துணை உங்களை நேசிக்கிறாரா என ஈஸியா கண்டுப்பிடித்துவிடலாம்..!

பிறப்புக் கட்டுப்பாட்டில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

உலகிலேயே முதல் நாடாக 1952 ஆம் ஆண்டு, குடும்பக் கட்டுப்பாடுக்கான தேசியத் திட்டத்தை இந்தியா அறிமுகப்படுத்தியது. இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தற்போதைய குடும்பக் கட்டுப்பாடு முயற்சிகளில் வாய்வழி கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள், கருப்பைக்குள் பொருத்தப்படும் கருத்தடை சாதனங்கள், பெண் கருத்தடை சாதனங்கள், நான் - ஸ்கால்பெல் வாஸெக்டமி, அவசர கருத்தடை மாத்திரைகள் மற்றும் கர்ப்ப பரிசோதனை கருவிகள் போன்ற பல கருத்தடை முறைகள் அடங்கும்.பயிற்சி பெற்ற ANMகள், SNகள் மற்றும் மருத்துவர்கள் இந்த முறைகளை நிர்வகிக்கலாம் அல்லது பல்வேறு பிறப்பு கட்டுப்பாடு நடவடிக்கைகள் பற்றி தம்பதிகளுக்கு கற்பிக்க உதவலாம் என இந்திய அரசு அங்கீகரித்துள்ளது. 2025ம் ஆண்டுக்குள் நாட்டின் ஒட்டுமொத்த கருவுறுதல் விகிதத்தை 2.1 ஆகக் குறைக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Birth control pills

அடுத்த செய்தி