பறவை காய்ச்சல் குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் உங்களுக்காக...
பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பறவை அல்லது விலங்குகளுடன் மனிதர்கள் தொடர்புகொண்டால் இந்த வைரஸ் அவர்களையும் தாக்கும். இந்த வைரஸ் காய்ச்சல் காகங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது.

கோப்புப் படம்
- News18 Tamil
- Last Updated: January 11, 2021, 7:24 PM IST
பறவைக் காய்ச்சல் அல்லது ஏவியன் இன்ஃப்ளுயன்சா (Bird flu or avian influenza) என்பது ஒரு வைரஸ் தொற்று. இது முதன்மையாக பறவைகளை பாதிக்கிறது. அதோடு கூட மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பறவைக் காய்ச்சலின் மிகவும் பொதுவான வடிவமாக H5N1 உள்ளது. H5N1 என்பது வைரஸ்/இன்ஃப்ளுயன்சா ஆகும். பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பறவை அல்லது விலங்குகளுடன் மனிதர்கள் தொடர்புகொண்டால் இந்த வைரஸ் அவர்களையும் தாக்கும்.
இந்த வைரஸ் பொதுவாக மனிதனிடமிருந்து மனித தொடர்பு மூலம் பரவாது என்றாலும், மனித காய்ச்சல் வைரஸ்கள் மற்றும் H5N1 (Human flu viruses and H5N1) ஆகியவை சக மனிதர்களிடையே பரவக்கூடிய ஒரு புதிய வைரஸ் தொற்றை உருவாக்கக்கூடும் என்ற அச்சுறுத்தல் உள்ளது.
இது ஒரு தொற்றுநோயை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது, இதனால் மனிதர்களுக்கு மோசமான ஆபத்தை ஏற்படக்கூடும். இது இன்ஃப்ளூயன்ஸா என்கிற ‘A’ வகை வைரஸால் ஏற்படும் மிகவும் தீவிரமான வைரஸ் தொற்று நோயாகும். இது பொதுவாக கோழிகள் மற்றும் வான்கோழிகள் போன்ற கோழிகளை பாதிக்கிறது. வைரஸின் பல வகைகள் உள்ளன – அவற்றில் சில லேசானவை மற்றும் கோழிகளிடையே குறைந்த முட்டை உற்பத்தி அல்லது பிற லேசான அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். 
பறவைக் காய்ச்சலுக்கான காரணங்கள் :
பறவைக் காய்ச்சல் உள்நாட்டு கோழி (Domestic poultry) மூலம் பரவுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட பறவையின் மலம், மூக்கு, வாய் அல்லது கண்களிலிருந்து சுரக்கும் திரவமானது கோழி/பறவைகளுடன் தொடர்பு கொள்ளும் மனிதர்களுக்கும் அவை பரவுகின்றன. ஆகவே இந்த பாதிக்கப்பட்ட கோழி மற்றும் முட்டைகளை உட்கொள்வதும் நோயை ஏற்படுத்தும். 165 டிகிரி பாரன்ஹீட் வரை சூடேற்றப்பட்ட சிக்கனை சாப்பிடுவது பாதுகாப்பாக கருதப்படுகிறது.பறவை காய்ச்சல் அறிகுறிகள் :
மனிதர்களில் பறவைக் காய்ச்சலின் பொதுவான அறிகுறிகளில் இருமல், காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, சுவாசிப்பதில் சிரமம், மூக்கில் ஒழுகுதல், தொண்டை வலி, தசை வலி மற்றும் உடல்நலக்குறைவு (cough, fever, headache, diarrhea, respiratory difficulties, runny nose, sore throat, muscle aches and malaise) ஆகியவை அடங்கும்.
பறவைக் காய்ச்சல் தடுப்பு முறைகள் :
பறவைக் காய்ச்சல் வைரஸைத் தவிர்ப்பதற்கு பாதிக்கப்பட்ட பறவை/கோழியுடனான தொடர்பைத் தடுப்பது சிறந்த வழியாகும். திறந்தவெளி சந்தைகள், கோழி வளர்ப்பு மற்றும் பாதிக்கப்பட்ட பறவைகளுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பதன் மூலம் ஆபத்தை குறைக்க முடியும். முறையான சுகாதாரம் மற்றும் கைகளை அடிக்கடி கழுவுவதும் ஆபத்தை குறைக்க உதவுகிறது. H5N1 நோயால் பாதிக்கப்படும் நபர்களில் கோழியை வளர்க்கும் நபர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் பயணிகள் போன்றவர்கள் உள்ளனர். பறவை/கோழி இருக்கும் இடத்தில்வெளியே செல்லும்போதும் ஒருவர் கவர் மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகளை அணிந்து செல்வது நல்ல சிந்தனை ஆகும்.

பறவை காய்ச்சல் சிகிச்சை :
இந்த நோய்க்கான சிகிச்சை பறவைக் காய்ச்சலின் வகையைப் பொறுத்தது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நோயாளிகள் வைரஸ் தடுப்பு மருந்துகளை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள். இது நிலையின் தீவிரத்தை குறைக்க உதவுகிறது. அறிகுறிகள் தோன்றிய 48 மணி நேரத்திற்குள் மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டும். ஒருவருக்கு கடுமையான தொற்று மற்றும் அறிகுறிகள் இருந்தால், சுவாச கருவிகளுடன் (breathing support) அவர் வைக்கப்படலாம்.
இந்தியாவில் பறவைக் காய்ச்சல் :
இந்தியாவில் மனிதர்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2006 முதல் 15 மாநிலங்களில் (மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் முதல் பரவல் ஏற்பட்டபோது) 2015 வரை கோழிகளில் எச்5என்1 பறவைக் காய்ச்சல் 25 முறை ஏற்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சல் காகங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்