இன்றைக்கு பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்றால், கணவன் மற்றும் மனைவி இருவருமே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் வேலைப்பார்க்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் நம்முடைய வாழ்க்கை முறை முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது. குறிப்பாக பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரவு நேரப்பணி என்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.
இரவு ஷிஃப்ட்களுக்கு செல்லும் பல பணியாளர்களுக்கு உணவு பழக்கம் மற்றும் தூக்க முறையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படுகிறது. பணியின் போது தூக்கம் வரக்கூடாது என்பதற்காக வேலைக்கு நடுவில் லேட் நைட் ஸ்நாக்ஸ் மிகவும் பொதுவானது. இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றும் இனிமேலாவது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இரவு நேரத்தில் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
இரவு நேரப் பணியின் போது சாப்பிடுவது நம்முடைய இயல்பு வாழ்க்கையே முற்றிலும் பாதிக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் ஆசிரிய உறுப்பினரும், ஊட்டச்சத்து மனநல மருத்துவத்தில் நிபுணருமான டாக்டர் உமா நைடூ தெரிவித்துள்ள தகவலின் படி, பொதுவாக தூக்கம் இல்லாமல் இருந்தாலே பல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். அதுவும் இரவு நேர பணியின் போது தூக்கத்தைக் கலைக்க வேண்டும் என்பதற்காகத் தேவையில்லாமல் சாப்பிடுவதால் பதட்டம், மனச்சோர்வு ஏற்படுவதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆய்வில் நடந்து என்ன?
ஆய்வை நடத்துவதற்காக, 19 பெரியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 28 மணி நேர சுழற்சி (பகல் மற்றும் இரவு உட்பட) அல்லது 24 மணி நேர சுழற்சியின் (பகலில் மட்டும்) உணவு உட்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதன் படி பகல் நேரத்தில் உணவு உண்ணும் இரவு ஷிப்ட் தொழிலாளர்களில் மனநிலை பாதிப்பு அல்லது மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவற்றின் அதிகரிப்பு காணப்படவில்லை. அதே சமயம் இரவு நேரத்தில் சாப்பிடும் போது பதட்டம், மனச்சோர்வு, மனநலக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
Also Read : வயிற்றுப்போக்கு ஏற்பட குடிநீர் கூட காரணமாக இருக்கலாம்.. இதை முதலில் செக் பண்ணுங்க..!
இந்த ஆய்வுகள் அனைத்தும் மேலோட்டமாக மட்டும் நடைபெற்றுள்ள நிலையில், முழுமையாக தகவல்களைப் பெற வேண்டும் என்றால் ஆய்வுகளை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இருந்தப்போதும் உணவு மற்றும் தூக்கமின்மை பிரச்சனையால் மன ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதை கண்டறிய இந்த ஆய்வு நிச்சயம் அடித்தளமாகவே அமைகிறது.
எனவே இனிமேலாவது இரவு நேரத்தில் தேவையில்லாத உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பதன் மூலம் நம்முடைய உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். அதிலும் இரவு நேர ஷிப்டுகளில் உள்ளவர்கள் உடலை ஆரோக்கியத்தோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் உணவுகளை சரியான விகிதத்தில் சாப்பிட வேண்டும் என்பதையும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anxiety, Depression, Night Shift Work