Double Masking : டபுள் மாஸ்க் அணிய வேண்டியதன் அவசியம் என்ன..? வீடியோ வெளியிட்ட நடிகை ஷெரின்..!

ஷெரின்

ஒரு மாஸ்க் பயன்படுத்துவதற்கு பதிலாக, ஒரே நேரத்தில் இரண்டு மாஸ்க்குகளை (double masking) பயன்படுத்தினால் தொற்றின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

  • Share this:
கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி நாட்டு மக்கள் நெருக்கடியில் உள்ள நிலையில், விரைவாக தடுப்பூசி போட்டு கொள்ள மக்களை மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில் தனிமனித இடைவெளி மற்றும் மாஸ்க் அணிதல் ஆகியவை மிக முக்கியமான தடுப்பு நடவடிக்கைகளாக இருந்து வருகிறது.

தொற்றின் தீவிரம் முதல் அலையை விட இரண்டாவது அலையில் அதிகமாக இருப்பதால் வெளியே செல்லும் நேரங்களில் முகத்தில் ஒரு மாஸ்க் பயன்படுத்துவதற்கு பதிலாக, ஒரே நேரத்தில் இரண்டு மாஸ்க்குகளை (double masking) பயன்படுத்தினால் தொற்றின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

தொற்றுநோயின் இரண்டாவது அலை பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இரட்டை மாஸ்க்குகள் பயன்படுத்துவது காலத்தின் தேவையாகிவிட்டது. இதனிடையே நடிகை ஷெரின், இரட்டை மாஸ்க்கின் முக்கியத்துவம் குறித்து இன்ஸ்டாவில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் டிவி-யின் பிக்பாஸ் தமிழ் சீசன் 3-ல் பங்கேற்ற நடிகை ஷெரின், கர்நாடகத்தை சேர்ந்தவர் ஆவார். 1984-ம் ஆண்டில் பெங்களூருவில் பிறந்தார். முதல் முதலாக கன்னட திரையுலகில் அறிமுகமான இவர், கடந்த 2002-ம் ஆண்டு தனது 16 வயதில் தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் அறிமுகமானார்.



தொடர்ந்து 2003-ஆம் இவர் நடித்த விசில் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் இவர் புகழ் பெற காரணமாக அமைந்தது. கன்னடம், தமிழ் மொழிகளை தொடர்ந்து பின் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் நண்பேன்டா திரைப்படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார் ஷெரின். பின்னர் 2019-ல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்றார்.



 




View this post on Instagram





 

A post shared by Sherin Shringar (@sherinshringar)






இந்நிலையில் இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் அதில் தன்னிடம் இருக்கும் பல வகையான மாஸ்க்குகளை பயன்படுத்தி இதில் எது பாதுகாப்பானது என்பதை விளக்குகிறார். என்னிடம் உள்ள வெவ்வேறு மாஸ்குகளை சோதித்தேன். இதில் ஆன்லைனில் கிடைத்த சர்ஜிக்கல் மாஸ்க்குகள் கவலை அளிக்கின்றன. தயவுசெய்து டபுள் மாஸ்க்குகளை அணியவும் மற்றும் நன்றாக தேர்வு செய்யவும் என்று கூறி அந்த வீடீயோவை வெளியிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த வீடியோவில் மாஸ்க் அணியாமல் எரியும் மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கிறார். பின் சர்ஜிக்கல் மாஸ்க்கை போட்டு கொண்டு மெழுகுவர்த்தியை ஊதி எளிதாக அணைக்கிறார். பின்னர் இரட்டை மாஸ்க்கை பயன்படுத்தி எரியும் மெழுகுவர்த்தியை ஊத்தி அணைக்க முயற்சிக்கும் போது அது ஈஸியாக அணையவில்லை.

Double Masking : கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் 'டபுள் மாஸ்கிங்' - எப்படி அணிய வேண்டும்..?

மூன்று முறை பலமாக ஊதிய பின்னே அணைகிறது. பின் துணி மாஸ்க்கை பயன்படுத்தி ஊதும்போது மெழுகுவர்த்தி அணையவே இல்லை. N95 மாஸ்க் பயன்படுத்திய போதும் மெழுகுவர்த்தி அணையவில்லை. மேலும் ஷெரின் இந்த வீடியோ மூலம் தனது ரசிகர்கள் சரியான மாஸ்க்குகளை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று பொதுவாக கூறினாலும், பாதுகாப்பிற்காக இரட்டை மாஸ்க்குகளை அணியுமாறு ரசிகர்களை வலியுறுத்தி உள்ளார்.

 
Published by:Sivaranjani E
First published: