”உடல் எடையைக் குறைத்தது எப்படி?“- பிக் பாஸ் ஷெரினின் weight lose டிப்ஸ்

ரசிகர்கள் எப்படி உடல் எடையைக் குறைத்தீர்கள் டிப்ஸ் அளியுங்கள் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க பகிர்ந்துள்ளார்.

”உடல் எடையைக் குறைத்தது எப்படி?“- பிக் பாஸ் ஷெரினின் weight lose டிப்ஸ்
பிக் பாஸ் ஷெரின்
  • Share this:
ஷெரின் சினிமா நிழலைக் கொண்டிருந்தாலும் பிக் பாஸ் மூலமாகவே அவர் பிரபலமானார். ஷெரினை மறந்த பலருக்கும் பிக்பாஸ்தான் நினைவுப்படுத்தியது எனலாம். அப்படி பிரபலமானதும் அவர் செய்த முதல் காரியம் உடல் எடையைக் குறைத்ததுதான்.

இந்த உடல் எடையைக் குறைப்பது என்பது சமீபத்திய டிரெண்டாக உள்ளது. அப்படி இந்த லாக்டவுனை பொன்னான வாய்ப்பாகப் பயன்படுத்தி பிரபலங்கள் துவங்கி சாமானிய மக்கள் வரை பலரும் உடல் எடையைக் குறைத்துள்ளனர். அந்தவகையில் பிக்பாஸ் ஷெரினும் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியுள்ளார்.

நீளமான குர்த்தா ஆடைகளை அணியும்போது எப்படி ஸ்டைல் செய்ய வேண்டும்..? அனுஷ்கா ஷர்மாவின் அசத்தல் லுக்


அவர் சமீபத்தில் பிக்பாஸில் இருந்த தோற்றத்தையும், தற்போதுள்ள உடல் அமைப்பின் தோற்றத்தையும் ஒப்பிட்டு புகைப்படம் பகிர்ந்துள்ளார். பின் ரசிகர்கள் எப்படி உடல் எடையைக் குறைத்தீர்கள் டிப்ஸ் அளியுங்கள் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க பகிர்ந்துள்ளார்.அதில் அவர் அளவான உணவு, ஆரோக்கியமான உணவும்தான் எனக்கு உடல் எடையைக் குறைக்க உதவியது. அதைத் தொடர்ந்து நாம் பின்பற்றும் வாழ்க்கை முறையும் முக்கியமானது என்கிறார். 
அதேபோல் உடலைப் பராமரிப்பது மட்டுமன்றி மனதளவிலும் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும். மன அழுத்தம் இன்றி ரிலாக்ஸாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading