முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பெண்கள் பிறப்புறுப்பில் உள்ள முடியை அகற்றுவது ஆபத்தா..? அதன் தேவைகளை தெரிந்தால் இனி செய்ய மாட்டீங்க..!

பெண்கள் பிறப்புறுப்பில் உள்ள முடியை அகற்றுவது ஆபத்தா..? அதன் தேவைகளை தெரிந்தால் இனி செய்ய மாட்டீங்க..!

அந்தரங்க பாகங்களில் இருக்கும் முடியை அகற்ற சிறந்த முறை எது?

அந்தரங்க பாகங்களில் இருக்கும் முடியை அகற்ற சிறந்த முறை எது?

அந்தரங்க பாகத்தில் ரோமம் வளர்வது பெண்ணுறுப்பை பாதுகாக்க என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், சிலர் பெண்ணுறுப்பில் இருக்கும் முடியை நீக்கிவிடுகிறார்கள். ஆரோக்கியமான முறையில் எப்படி அகற்றுவது. ஷேவிங் செய்வது நல்லதா?... கத்தரிக்கோல் அல்லது மெழுகு மூலம் முடியை அகற்றுவது சிறந்ததா?.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தனிப்பட்ட சுகாதாரத்தை கடைபிடிப்பது ஒரு நல்ல பழக்கம். பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி… ஒவ்வொருவரும் நோய் தொற்றை தவிர்க்க அந்தரங்க உறுப்புகளின் தூய்மையில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

அந்தரங்க பாகங்களில் முடி வளர்வது இயற்கையான ஒன்று. அந்தரங்க ஆரோக்கியத்தை பராமரிக்க சிலர், பிறப்புறுப்பில் உள்ள முடியை அகற்றுவார்கள். அதற்காக, சிலர் ஷேவிங், ஹேர் ரிமூவல் கிரீம்கள் அல்லது வாக்ஸிங் முறையை தேர்வு செய்வார்கள். ஆனால், பெண்களுக்கு பிறப்புறுப்பை சுற்றியிருக்கும் முடியை நீக்க எந்த முறை ஆரோக்கியமானது என்ற குழப்பம் இருக்கும். அந்தவகையில், எந்த முறையில் அந்தரங்க பாகங்களில் உள்ள முடிகளை அகற்றுவது ஆரோக்கியமானது என்பதை இங்கே பார்க்கலாம்.

பிறப்புறுப்பு முடியை அகற்ற வேக்ஸிங் சிறந்ததா?

அந்தரங்க பாகங்களில் உள்ள முடியை நீக்க, பெரும்பாலான பெண்கள் வேக்ஸிங்யை தேர்வு செய்கிறார்கள். ஏனென்றால், வேக்ஸிங் செய்யும் போது மீண்டும் முடி வளர தாமதமாகும் என்ற கட்டுக்கதை நிலவி வருகிறது. இதற்கான பதிலை தெரிந்து கொள்வதற்கு முன், நீங்கள் ‘Bikini waxing’ பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

Bikini waxing என்பது பிறப்புறுப்பை சுற்றியுள்ள முடியை மெழுகு போன்ற உருகிய திரவத்தை கொண்டு அகற்றுவது ஆகும். பெண்கள் நீச்சல் உடை அணியும் போது எந்த முடியும் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக இந்த முடியை தேர்வு செய்வார்கள்.

பிறப்புறுப்பு மிகவும் மென்மையானது என்பதால், வேக்ஸிங் முறையை தேர்வு செய்யும் போது மிகுந்த வலி ஏற்படும். ஆனாலும், இளம் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை பலரும் இதை செய்து கொள்கிறார்கள்.

வேக்ஸிங் செய்வதற்கான காரணம் :

பிறப்புறுப்பில் முடி இருப்பதை பெரும்பாலான ஆண்கள் விரும்புவதில்லை. எனவே, பெண்கள் இந்த முறையை தேர்வு செய்கிறார்கள். பிறப்புறுப்பில் முடி இல்லாமல் இருப்பதை ஆண்கள் ஏன் விரும்புகிறார்கள்?.... உண்மையாக காரணம் என்னவென்றால், இளம் தலைமுறையினரிடையே ஆபாசப் படங்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.

Also Read | உணவில் சோம்பு இருந்தால் ஒதுக்காதீங்க... அதன் நன்மைகள் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

படங்களில் இருப்பதை போலவே சில விஷயங்களையும் எதிர்பார்க்கிறார்கள். ஆபாரச படம் பார்ப்பது தற்போது சாதாரண விஷயம் என்றாலும், இதனால் ஏற்பாடு பாலியல் தாக்கம் குறித்து இவர்கள் சிந்திப்பதில்லை. அது குறித்து யாரும் அவர்களுக்கு புரிய வைப்பதும் இல்லை.

பிறப்புறுப்பு முடியை முழுவதுமாக நீக்குவது நல்லதா?

பெண்களின் அந்தரங்க பாகங்களில் வளரும் முடி தான் அவர்களின் பிறப்புறுப்பை தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.

பிறப்புறுப்பு பகுதியிலும், அதன் பாதையிலும் பல முக்கிய பாக்டீரியாக்கள் உள்ளன. இவைதான் பிறப்புறுப்பின் நோயெதிர்ப்பு அமைப்பை பாதுகாத்து, நோய் தொற்றில் இருந்து காக்கிறது.

வேக்ஸிங் மூலம் முடியை அகற்றும் போது முடி வேரோடு நீக்கப்படும். இதனால், வலி ஏற்படுகிறது. ஷேவிங் செய்யும் போதும் சில சமயங்களில் இந்த பிரச்சனைகள் ஏற்படும்.இதனால், முடி இருந்த துளைகள் எந்த கவசமும் இல்லாமல் இருப்பதால், முடியின் வேர்களில் பலவித தொற்றுகள் ஏற்படும். அதே போல, பிறப்புறுப்பில் முடி இல்லை என்றால், பிறப்புறுப்பு வறண்டு காணப்படும்.

இதனால் அப்பகுதியின் உள்ளேயும் வெளியேயும் பலவித தொற்றுகள் ஏற்படும். பிறப்புறுப்பு வறண்டால் அப்பகுதியில், நோயெதிர்ப்பு சக்தி குறைந்து அரிப்பு அதிகரிக்கும். இந்த சமயத்தில், அந்த பகுதியில் காயம் ஏற்பட்டால் ஆபத்து அதிகரிக்கும்.

ஹேர் ரிமூவல் க்ரீம் பயன்படுத்துவது நல்லதா?

பிறப்புறுப்பில் உள்ள முடியை நீக்குவதற்கு, க்ரீம்களை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. இதனால், ஏற்படும் ஆபத்து குறித்து அந்த க்ரீம்களின் அட்டையில் எழுதப்பட்டிருக்கும் . ஆனால், நாம் அவற்றை படிப்பது இல்லை. அந்தரங்க உறுப்பில் உள்ள முடிய நீக்க க்ரீம்களை பயன்படுத்துவதன் மூலம், அப்பகுதியில் வேதியியல் வினைகள் ஏற்படும்.

முன்பெல்லாம் மகப்பேறு காலத்தில் மட்டும் தான் பிறப்புறுப்பில் உள்ள முடியை நீக்கும் பழக்கம் இருந்தது. ஆனால், தற்போது இது ட்ரெண்டாகிவிட்டது.

Also Read | மாதவிடாயின் போது தாங்க முடியாத வலியை அனுபவிக்கிறீர்களா..? இந்த 5 விஷயங்களை செஞ்சு பாருங்க..!

தொடர்ச்சியாக அந்தரங்க உறுப்பில் உள்ள முடியை ஷேவ் செய்தால் கொப்பளங்கள், அரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

கத்திரிக்கோல் மூலம் பிறப்புறுப்பு பகுதியில் உள்ள முடியை ட்ரிம் செய்வது போல அதன் அளவை குறைப்பது சிறந்தது.

பிறப்புறுப்பு பகுதியை சுத்தம் செய்யாமல் இருப்பதும் பல ஆபத்துக்களை ஏற்படுத்தும். குளிக்கையில் பிறப்புறுப்பை சுத்தம் செய்யாதது, முடியை வெட்டாமல் இருப்பது, நாப்கின்களை சரியான நேரத்தில் மாற்றாமல் இருப்பது, ஈரமான உள்ளாடையை அணிவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

அந்தரங்க உறுப்பை சுத்தம் செய்ய இன்டிமேட் வாஷ் பயன்படுத்தலாமா?

பிறப்புறுப்பை சுத்தம் செய்ய இன்டிமேட் வாஷ்களை (Intimate Wash) பயன்படுத்துவது, தற்போது அதிகமாகியுள்ளது. இந்த முறையை பயன்படுத்துவதால், றப்புறுப்பு வறண்டு போதல், தொற்று ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

பிறபுறுப்பின் உள் பகுதியில், PH அமிலத்தன்மை உள்ளது. அப்பகுதியை சுத்தம் செய்ய இன்டிமேட் வாஷ் -யை உபயோகிப்பதால் பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு ஏற்படும். வீட்டில் உள்ள எளிமையான பொருட்களை கொண்டு அந்தரங்க உறுப்பை சுத்தம் செய்வது நல்லது.

பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ் :

பிறப்புறுப்பு PH அமிலத்தன்மை கொண்டது. எனவே, பிறப்புறுப்பு பகுதியில் சோப் பயன்படுத்துவதன் தவிர்க்கவும். சுத்தமான நீரால் பிறப்புறுப்பை சுத்தம் செய்வது சிறந்தது.

சூடு தண்ணீர் மூலம் பிறப்புறுப்பை சுத்தம் செய்யக்கூடாது. இதனால், பிறப்புறுப்பில் உள்ள நாளங்கள் தூண்டப்பட்டு, வெள்ளைப்படுதல் அதிகமாகும். டாய்லெட் பேப்பர் மூலம் பிறப்புறுப்பை சுத்தம் செய்வது, அந்த பகுதி வறண்டு போக வழிவகுக்கும்.

பிறப்புறுப்பு பகுதியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, டால்கம் பவுடர்களை பயன்படுத்த வேண்டாம். இவை, கருப்பை புற்றுநோயை ஏற்படுத்தலாம். தொகைப்பகுதியில் டால்கம் பவுடர் பயன்படுத்தினால், உள்ளாடை அணிந்த பின்பே பயன்படுத்தவும்.

வெள்ளைப்படுதல் அதிகமானாலோ அல்லது பிறப்புறுப்பில் அரிப்பு, எரிச்சல், துர்நாற்றம் ஏற்பட்டாலோ மருத்துவரை அணுகவும்.

ஸ்டீராய்டுகள் உள்ள க்ரீம்களை பயன்படுத்துவதை தடுக்கவும். ஏனென்றால், இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

மாதவிடாய் நெருங்கும் போதே சிலர் சானிட்டரி நாப்கின்களை அணிகிறார்கள். இது தவறானது. ஏனென்றால், நாப்கின்களில் டையாக்சின் எனப்படும் வேதிப்பொருள் உள்ளது. இது, அப்பகுதியில் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.

தேவை ஏற்படும்போது மட்டுமே சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்தவும். வீட்டில் உள்ள துணிகளை மாதவிடாய் காலத்தில் பயன்படுத்துவது தொற்றை ஏற்படுத்தும்.

ஒவ்வொருமுறை உடலுறவுக்குப் பின் பிறப்புறுப்பை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.

வாசனை திரவியங்கள் உள்ளிட்டவற்றை பிறப்புறுப்புப் பகுதியில் பயன்படுத்தக் கூடாது. அவற்றை நேரடியாக பயன்படுத்தாமல் ஆடை அணிந்த பின்னர் பயன்படுத்தலாம்.

பருத்தியாலான உள்ளாடைகளை மட்டுமே அணிய வேண்டும். புதிதாக வாங்கிய உள்ளாடைகளை ஒருமுறை துவைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும். உள்ளாடைகளை துவைக்கும் போது அதில் சோப்பு, சோப்புத்தூள் தங்காமல் பார்த்துக்கொள்ளவது நல்லது.

First published:

Tags: Private parts, Pubic Hair, Vaginal Hygiene, Women Health