ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ப்ரக்னன்சி டெஸ்ட் எப்போது செய்ய வேண்டும்..? எத்தனை நாட்களில் எடுக்கலாம்..?

ப்ரக்னன்சி டெஸ்ட் எப்போது செய்ய வேண்டும்..? எத்தனை நாட்களில் எடுக்கலாம்..?

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர் : best time to take pregnancy test : மாதவிலக்கு தள்ளிப்போன அன்றிலிருந்து யூரின் டெஸ்ட் சரியான முடிவை காட்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ரம்யா தன்னுடைய தோழியுடன் மருத்துவமனையில் காத்திருந்தார்.

ரம்யாவிற்கு திருமணமாகி நான்கு மாதங்கள் ஆகிறது.

முகத்திலிருந்த பூரிப்பு, அவருடைய மண வாழ்க்கை வெற்றிகரமாக இருப்பதை உணர்த்தியது.

ரம்யாவே தொடங்கினார். " டாக்டர்!!! நானும் என் கணவரும் திருமணம் ஆனதுமே குழந்தை வேண்டுமென்று திட்டமிட்டு விட்டோம். கர்ப்பமானதை உடனே கண்டுபிடிக்க வேண்டும் என்று இருவருமே ஆவலாக இருக்கிறோம். கர்ப்பத்தை காட்டும் யூரின் டெஸ்ட் வீட்டிலேயே செய்யலாம் என்று அறிந்துகொண்டேன். அது எப்போது பார்த்தால் சரியான முடிவு வரும்? எத்தனை நாட்களில் பார்க்க வேண்டும்? எந்த அளவுக்கு அந்த முடிவை நம்பலாம்? காலையில் முதல் யூரினில் எடுத்தால் தான் அந்த டெஸ்ட் முடிவு சரியாக வருமா? "கேள்விகளை அடுக்கினார். இப்பொழுது ரம்யாவின் சந்தேகங்களை ஒவ்வொன்றாக தெளிவாக்குவோம்.

கர்ப்பத்தை காட்டும் யூரின் டெஸ்ட் எப்படி வேலை செய்கிறது?

கரு உருவானதும் அது தன்னை கர்ப்பப்பையில் பொதிந்து கொள்கிறது. கருவை சுற்றி உள்ள செல்கள் ஹெச் சி ஜி என்ற ஹார்மோனை சுரக்கின்றன. அது தாயின் ரத்தத்தில் கலக்கிறது. இந்த ஹார்மோனின் ஒருபகுதி சிறுநீர் வழியாக வெளியேறும். அதைத்தான் இந்த பரிசோதனைகள் கண்டுபிடிக்கின்றன.

எத்தனை நாட்களில் பார்க்க வேண்டும்?

அவரவருடைய மாதவிலக்கு சுழற்சியை பொறுத்து, நடக்கும் மாதத்தில், என்று அவர்களுக்கு மாதவிடாய் வர வேண்டுமோ, அந்த தேதியில் வரவில்லை என்றால் அன்றே பார்க்கலாம். அதிலிருந்தே தெரியத் தொடங்கும். மாதவிலக்கு தள்ளிப்போன அன்றிலிருந்து யூரின் டெஸ்ட் சரியான முடிவை காட்டும்.

பெண்குயின் கார்னர் : மாதவிடாய் தள்ளிப் போனாலும் கர்ப்பப் பரிசோதனையில் நெகட்டிவ் வர என்ன காரணம்..?

காலையில் முதல் யூரினில் எடுத்தால் தான் அந்த டெஸ்ட் முடிவு சரியாக வருமா?

கர்ப்பத்தின் ஆரம்பத்தில், காலையில் , முதல் யூரினில் சரியான முடிவு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் கட்டாயமாக முதல் சிறுநீரில் தான் முடிவு சரியாக வர வேண்டும் என்று அவசியம் இல்லை. கரு வளர வளர, எப்போது பரிசோதனை செய்தாலும் சரியான முடிவையே காட்டும்.

இந்த டெஸ்ட்டை எப்படி செய்ய வேண்டும்?

மிகவும் சுலபமானது. இந்த அட்டையில் செவ்வகமாக ஒரு குழிவும், வட்டமாக ஒரு குழியும் இருக்கும். சிறுநீரை விடுவதற்கு (மையுறுஞ்சும் கருவி) இங்கு ஃ பில்லர் போல ஒரு சிறிய கருவி இருக்கும். அதில் 5-6 சொட்டு சிறுநீர் போதுமானது .அதை வட்டமான குழியில் சொட்டு சொட்டாக விட்டால், அது செவ்வக குழிவுப் பகுதியில் பரவி வருவதை பார்க்கலாம். C, T, என்று இரண்டு எழுத்துக்கள் அதன் பக்கவாட்டில் இருக்கும். சி என்பது கண்ட்ரோல், T டெஸ்ட் .

பெண்குயின் கார்னர் : திருமணத்திற்கு பின் மாதவிடாய் அடிக்கடி தள்ளிப்போவது ஆபத்தா..? கரு நிற்பதில் சிக்கல் வருமா?

எல்லோருக்கும் C என்ற இடத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் கோடு தெரியும். கர்ப்பம் அடைந்தவர்களுக்கு டி T என்ற இடத்திலும் கோடு உண்டாகும் . இப்படி இரட்டை கோடு உண்டாவதே டெஸ்ட் பாசிட்டிவ் என்கிறோம்.

சிறுநீரை ஊற்றிய பிறகு ஐந்து நிமிடங்களுக்குள் முடிவை பார்க்கவேண்டும். தாமதமாக பார்க்கும்போது தவறான முடிவுகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

டெஸ்ட் முடிவு தவறாக வருவதற்கு வாய்ப்பு உண்டா?

இப்போது வரும் இந்த கார்ட் டெஸ்டுகள் 10 சதவீதம் வரை தவறான முடிவுகளை காட்டுகின்றன.

தவறான முடிவு என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

தாமதமாக பார்க்கும்போது ( 5 நிமிடங்களுக்கு பிறகு) தவறான முடிவுகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சில டெஸ்டு அட்டைகளின் தரம் குறைவாக இருப்பதால் தவறான முடிவுகள் வரலாம். மற்றொரு ஹார்மோனும்( எல். ஹெச்) இந்த ஹெச் சி ஜி போலவே வினைபுரிந்து தவறான முடிவைத் தரலாம்.

சந்தேகமிருப்பின் ரத்தத்தில் பரிசோதனை செய்து கொள்வது சரியானது.

நாமே பார்க்கலாமா அல்லது மருத்துவமனையில் பார்த்தால்தான் சரியாக வருமா?

எப்படி செய்ய வேண்டும் என்பதை புரிந்துகொண்டால் வீட்டிலேயே செய்யலாம்.

மகிழ்ச்சியுடன் விடை பெற்றார் ரம்யா.

மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

Published by:Sivaranjani E
First published:

Tags: Pregnancy test, பெண்குயின் கார்னர்