உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கீங்களா ? அப்ப இந்த ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க..

காட்சி படம்

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் இந்த ஸ்னாக்ஸ் வகைகளை சாப்பிடலாம்.

 • Share this:
  ஸ்னாக்ஸ்  என்றாலே பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பிடிக்கும். சிப்ஸ், சமோசா, வடை, பஜ்ஜி, போண்டா, பானி பூரி போன்ற எண்ணெய்யில் பொறித்த உணவுகள், பிஸ்கட், இனிப்புகள், கேக் மற்றும் சில பாஸ்ட் புட் உணவுகள் என பல ஸ்னாக்ஸ் வகைகள் உள்ளன. பெரும்பாலான மக்கள் மாலை நேரம் டீ அருந்தும் போது பிஸ்கட், பஜ்ஜி போன்ற தின்பண்டங்களை சாப்பிட விரும்புவார்கள்.

  ஆனால் இந்த தின்பண்டங்கள் அனைத்தும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறதா என்றால், அது முழுமையாக தருவதில்லை. மேலும், ஒருவரின் உடல் எடை அதிகரிப்பதற்கு இந்த ஸ்னாக்ஸ் வகைகள் காரணமாக அமைக்கின்றன. இருப்பினும் ஸ்னாக்ஸ் வகைகளில் சில உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுப்பவையாக இருக்கும். அவற்றை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலில் ப்ரோடீன் சத்து அதிகரிக்கும். அதேபோல உங்கள் உடல்பருமனை குறைக்கவும் உதவும். அந்த வகையில் நீங்கள் தினசரி கவலையில்லாமல் சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ் வகைகளை பற்றி பார்ப்போம்.

  பாதம், பிஸ்தா பருப்புகள் : பாதாம் சாப்பிடுவதால் ஒருவரின் பசி குறைகிறது. அது உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். இதுதவிர இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்கும் என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. பாதம் பருப்புகளை வறுத்தும் சாப்பிடலாம். அதேபோல, பிஸ்தாவில் 6 கிராம் புரோட்டீன் மற்றும் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது பசியுணர்வைக் கட்டுப்படுத்தும். தினமும் 3- 4 பருப்புகளை சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் மேம்படும்.

  பாப்கார்ன்  : நார்ச்சத்து நிறைந்த மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள பாப்கார்ன்கள் ஆரோக்கியமான தின்பண்டங்கள், அவை எடை இழப்புக்கு சிறந்தவை. பாப்கார்னில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் சருமத்திற்கு நல்ல போஷாக்கை கொடுப்பது போலவே உடலுக்கும் கொடுக்கிறது. புற்று நோய்க்கு காரணமான தொற்றுகளிடம் இருந்து நம்மை தற்காத்து கொள்ள உதவுகிறது.

  முளைக்கட்டிய பயிறு வகைகள் : முளைக்கட்டிய பயிறுகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதில், கலோரிகள் மற்றும் கொழுப்பு மிகவும் குறைவு. குறிப்பாக முறைகட்டிய பயிறுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் இரத்த அழுத்த அளவு குறையும். இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து சாலட்டாக கூட சாப்பிடலாம். காலை நேரங்களில் இதனை சாப்பிடுவது அதிக ஆரோக்கிய நன்மையை தரும்.

  Also read : உடல் எடையை குறைக்க போறீங்களா? நீங்க ஃபாலோ பண்ண வேண்டிய முக்கியமான 3 ரூல்ஸ் இதுதான்...   கொண்டை கடலை : புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள சுண்டல் உங்களின் பசி உணர்வை குறைக்கும். இதை சாப்பிடுவதால் நீண்ட நேரத்திற்கு உங்கள் வயிறு நிறைவுற்றதாக உணரவைக்கும்.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: