கர்ப்பிணி பெண்கள் முதுகு வலி, மூச்சுப் பிரச்னைகளை தவிர்க்க எந்த பொசிஷனில் தூங்க வேண்டும்..?

கர்ப்பிணிகள் பாதுகாப்பு

குழந்தை வளரும்போது கருப்பை விரிவடைகிறது. இது வயிறு மற்றும் முதுகு வலி ஏற்பட காரணமாக இருக்கிறது. எனவே நீங்கள் சரியான நிலையில் தூங்கினால் தான் இந்த அசவுகரியத்தை தவிர்க்க முடியும்.

  • Share this:
கர்ப்பகாலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் பல்வேறு ஆச்சரியங்கள் நிறைந்தது. குடும்பத்திற்கு புதிய உறுப்பினரை வரவேற்க இருப்பதால் அனைவரும் உற்சாகமாக இருப்பார்கள். ஆனால் குழந்தையை சுமக்கும் பெண் பல்வேறு அசவுகரியத்தை சந்திப்பார்கள். குறிப்பாக தூங்கும் போது சரியாக தூங்க முடியாத நிலையால் அவதிப்படுவார்கள். ஆனால் கர்ப்பமாக இருப்பவர்கள் தூங்கும் நிலை சரியாக இருப்பது அவசியமானது ஆகும்.

நன்கு தூங்கினால் தான் குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சரியான நிலையில் தூங்காவிட்டால், அது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும், இதனால் ப்ரீக்ளாம்ப்சியா (உயர் இரத்த அழுத்தம்) உள்ளிட்ட சிக்கல் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

கர்ப்பிணிப் பெண் தூங்குவதற்கான சிறந்த நிலைகள் :

முதல் மூன்று மாதங்கள் ஒரு பெண் தனக்கு வசதியாக இருக்கும் வகையில் தூங்கலாம். இருப்பினும், பெண்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாதங்களை எட்டும்போது தூங்கும் நிலைகளில் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவர்களின் கூற்றுப்படி, கர்ப்ப காலத்தில் பக்கவாட்டில் தூங்குவது (SOS) சிறந்த தூக்க நிலை, ஏனெனில் இது கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

நான்கு மாதங்கள் தொடங்கிய பின்னர் கருவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கும் என்பதால் முன்புபோல் இயல்பாக படுக்க முடியாது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கண்டிப்பாக குப்புறப்படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும்.



நான்கு முதல் ஆறு மாதம் இரண்டாம் ட்ரைமெஸ்டர் எனப்படுகிறது. நான்காவது மாதத்தில் இருந்து தான் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் தொப்புள் கொடி கொஞ்சம் கொஞ்சமாக வலிமை பெற்றிருக்கும். இதனால் மல்லாந்து படுப்பது கூடாது. மூன்றாம் ட்ரைமெஸ்டர் எனப்படும் ஏழு முதல் ஒன்பது மாதம் ஆகும். இந்த மாதத்தில் நாம் அலட்சியமாக படுத்தால் கருவில் உள்ள குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே கர்ப்பிணிகள் தூங்கும் போது மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். வலது கை பக்கம் உறங்குவது கல்லீரலில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் அப்படி படுப்பதை தவிர்த்து விடுங்கள்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு போலிக் ஆசிட் ஏன் அவசியம்..? உணவின் மூலம் பெறுவது எப்படி..?

குழந்தை வளரும்போது கருப்பை விரிவடைகிறது. இது வயிறு மற்றும் முதுகு வலி ஏற்பட காரணமாக இருக்கிறது. எனவே நீங்கள் சரியான நிலையில் தூங்கினால் தான் இந்த அசவுகரியத்தை தவிர்க்க முடியும். மேலும் நரம்புகள் மற்றும் உடல் உள் உறுப்புகளின் அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. பெரும்பாலான மருத்துவர்கள் இடது பக்கம் திரும்பி தூங்குவது சிறந்தது என தெரிவிக்கின்றனர், அப்போதுதான் நஞ்சுக்கொடி மற்றும் உங்கள் குழந்தையை அடையும் இரத்தம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இயக்கம் சீராக இயங்கும்.



தூக்க நிலையை வசதியாக மாற்றுங்கள் :

1. உங்கள் முதுகில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க கால்களுக்கு இடையில் தலையணையை வைத்து கால்கள் மற்றும் முழங்கால்களை சரியாக வைத்து கொள்ளுங்கள்.

2. முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் நிவாரணம் பெற வயிற்றின் கீழ் தலையணையை வைத்து கொள்ளவும்.

3. தூங்கும் போது நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், தலையணையின் மேல் உடலை வைத்து கொள்ளலாம்.

4. கர்ப்பமாக இருக்கும் போது மூச்சு பிரச்சனைகளை அனுபவிக்கலாம். பக்கவாட்டில் படுத்து அல்லது தலையணை மீது முதுகை வைத்து தூங்கலாம்.

 
Published by:Sivaranjani E
First published: