Home /News /lifestyle /

50 வயதிற்குப் பிறகும் தசையை வலுவாக்கலாம்… நிபுணர்கள் பரிந்துரைக்கும் சிறந்த உணவுப் பழக்கம் இதுதான்!

50 வயதிற்குப் பிறகும் தசையை வலுவாக்கலாம்… நிபுணர்கள் பரிந்துரைக்கும் சிறந்த உணவுப் பழக்கம் இதுதான்!

முழு தானியங்களில் தசைகளை உருவாக்க உதவும் துத்தநாகம் மற்றும் தசைகளை மீட்டெடுக்க உதவும் மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன.

முழு தானியங்களில் தசைகளை உருவாக்க உதவும் துத்தநாகம் மற்றும் தசைகளை மீட்டெடுக்க உதவும் மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன.

முழு தானியங்களில் தசைகளை உருவாக்க உதவும் துத்தநாகம் மற்றும் தசைகளை மீட்டெடுக்க உதவும் மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன.

50 வயதிற்குள் நுழையும்போது, ​​உங்கள் உடல் சில மாற்றங்களுக்கு உள்ளாகத் தொடங்குகிறது. இது ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியின் முடிவுகளைப் பாதிக்கலாம். உதாரணமாக, உங்கள் தசைகள் இயற்கையாகவே காலப்போக்கில் பலவீனமடைய ஆரம்பிக்கலாம். ஆனால், ஆரோக்கியமான, நிலையான வழியில் வலுவான தசைகளை உருவாக்குவதற்கான உங்கள் பயணத்தை எவ்வாறு மேம்படுத்துவது? 50 வயதிற்குப் பிறகு வலுவான தசைகளை உருவாக்க உதவும் உணவுப் பழக்கங்களைப் பற்றி நிபுணர்கள் கூறும் வழிகள் இங்கே…

ஒவ்வொரு உணவு மற்றும் சிற்றுண்டியிலும் உயர்தர புரதத்தை உட்கொள்ள வேண்டும்:

வலுவான தசைகளை உருவாக்குவதற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் புரதம் ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். ஆனால், நாள் முழுவதும் போதுமான அளவு பெறுவது சவாலானது. மெலிந்த தசையை கட்டியெழுப்புவதற்கும் சரிசெய்வதற்கும் புரோட்டீன் மிக அவசியம். மேலும், பலர் மதிய உணவு மற்றும் இரவு உணவின் போது புரதத்தைப் பற்றி சிந்திக்கிறார்கள், அவர்கள் காலை உணவு மற்றும் சிற்றுண்டிகளில் புரதத்தை அடிக்கடி கவனிக்க தவறிவிடுவார்கள்.

இதையும் படிங்க | 20, 30, 40… வயதிற்கு ஏற்ப மாற்றம் காணும் பெண்ணுறுப்பு… நிச்சயம் அறிய வேண்டியவை..!

உண்மை என்னவென்றால், சுமார் 30 கிராம் உயர்தர புரதத்தை உட்கொள்வதை ஆராய்ச்சி பரிந்துரைக்கிறது. உங்களின் ஒவ்வொரு மூன்று முக்கிய உணவுகளிலும், சிற்றுண்டிகளுக்கான கூடுதல் புரதம் உடலுக்கு அதிகம் தேவை. இது காலை உணவில் 2 முட்டை, முழு தானிய தோசை மற்றும் தயிர், சாலட் அல்லது சிக்கன், சீஸ் மற்றும் காய்கறிகள் அல்லது பழத்துடன் உட்கொள்வது அவசியம். மேலும், சிற்றுண்டி நேரத்தில் புரோட்டீன் பார்கள் போன்ற புரதங்களைச் சேர்க்கவும்.

உடற்பயிற்சிக்குப் பிறகு உயர்தர புரதத்தை உட்கொள்ள வேண்டும்:

உங்கள் நாள் முழுவதும் உடலுக்கு போதுமான புரதத்தைப் பெறுவது முக்கியம். ஆனால், உடற்பயிற்சிக்குப் பிறகு அதை உட்கொள்வது தசையை உருவாக்குவதற்கும் நல்ல முடிவுகளைப் பெறுவதற்கும் முக்கியமானது. உடற்பயிற்சியானது 50 வயதிற்குப் பிறகு தசை சேதத்தை குறைக்கும் மற்றும் உணவுப் புரதம் தசையை வலுவாக்க உதவுகிறது. பயிற்சிக்குப் பிறகு 15-25 கிராம் உயர்தர புரதத்துடன் (அதாவது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது) உடற்பயிற்சிக்குப் பின் சிற்றுண்டியை உண்ண வேண்டும்.

ஆனால், நிச்சயமாக தொடர்ந்து 45 நிமிடங்களாவது வொர்க்அவுட் செய்ய வேண்டும். இது தசைகள் மீளுருவாக்க செயல்முறையைத் தொடங்க உதவுகிறது மற்றும் மீட்க உதவுகிறது. 15-25 கிராம் புரோட்டீன் பவுடரை தண்ணீரில் சேர்த்து, அதை ஒரு பழம் அல்லது கிரானோலா பட்டையுடன் கலந்தும் உட்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

இதையும் படிங்க | பல் சுத்தம் முதல் டீடாக்ஸ் வரை… ஆயில் புல்லிங்கின் அசரவைக்கும் நன்மைகள்!

முழு தானியங்களை உண்ண வேண்டும்:

வொர்க்அவுட்டில் இருந்து அதிக வலிமையை உருவாக்க உதவும் மற்றொரு முக்கியமான உணவுப் பழக்கம், நீங்கள் போதுமான முழு தானியங்களை உட்கொள்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துவது. குறிப்பாக, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளுக்கு மாற்றாக இது அமைய வேண்டும். முழு தானியங்களின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, அவை பொதுவாக நல்ல அளவுடைய புரதத்தைக் கொண்டிருக்கின்றன.

அவை தசைகளை உருவாக்க உதவும் துத்தநாகம் மற்றும் தசைகளை மீட்டெடுக்க உதவும் மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. முழு தானிய உணவுகளின் எடுத்துக்காட்டுகள் முழு-கோதுமை ரொட்டியும் அடங்கும், முழு கோதுமை பாஸ்தா, ஓட்மீல், பிரவுன் ரைஸ் மற்றும் பக்வீட் ஆகியவை. முழு தானியங்களுடன் கூடிய சிறந்த காலை உணவுப் பழக்கம் உங்கள் ஓட்மீலில் புரதப் பவுடரை சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.
Published by:Archana R
First published:

Tags: Healthy Lifestyle, Protein, Workout

அடுத்த செய்தி